sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

புகழுடன் சிறப்பான வருமானமும் கிடைக்கிறது!

/

புகழுடன் சிறப்பான வருமானமும் கிடைக்கிறது!

புகழுடன் சிறப்பான வருமானமும் கிடைக்கிறது!

புகழுடன் சிறப்பான வருமானமும் கிடைக்கிறது!


PUBLISHED ON : மே 12, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 12, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சப்ஸ்கிரைபர்'கள் எண்ணிக்கையின்படி, தனி நபர் பிரிவில், இந்தியாவின் நம்பர் 1, 'யு டியூபர்' என்ற சாதனை படைத்துள்ள கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டம், பாவலுார் கிராமத்தைச் சேர்ந்த பிஜு மற்றும் அவரது மனைவி கவிதா:

பிஜு: படிப்பில் நாட்டமில்லாமல், பிளஸ் 2வில் தோல்வி அடைந்தேன்.

பெயின்ட் அடிக்கிறது, கட்டுமான வேலை, கிணறு வெட்டுறது, குவாரியில் கல் உடைக்கிறது, சிலிண்டர் சப்ளை, டாக்சி டிரைவிங் என, எட்டு ஆண்டுகளில் பல வேலைகளுக்கு போனேன்.

பிரைவேட் பஸ் டிரைவராக எட்டு ஆண்டுகள் இருந்தேன். மேடை நாடகங்கள் பார்க்கிறதுலயும், அது சார்ந்த கதை கள் எழுதுறதுலயும் ஆர்வமாக இருப்பேன்.

'டிக் டாக்'கில் என் திறமையை வெளிப்படுத்த ஆசைப்பட்டேன். ஆனால், மொபைல் போன் வாங்கக்கூட எனக்கு வசதியில்லை. 'நீ நல்லா வருவடா'ன்னு பழைய போன் வாங்கி கொடுத்தார், என் மாமா.

குடும்பத்தில் பலரும் நடிச்சு, நகைச்சுவையான வீடியோக்களை டிக் டாக்கில் இரண்டு ஆண்டுகள் பதிவிட்டோம். அந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டபோது, எங்களுக்கு, 10 லட்சம் பாலோயர்ஸ் இருந்தாங்க.

யு டியூப் டெக்னிக்கல் விஷயங்கள் பத்தியோ, அந்த அவார்டு பத்தியோ எனக்கு தெரியாது. 2 கோடி சப்ஸ்கிரைபர்களை தாண்டிய பின், பெங்களூரில் இருக்கிற யு டியூபின் இந்திய தலைமையகத்தில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது.

'நீங்க டைமண்டு பட்டனுக்கு விண்ணப்பிக்க மறந்துட்டீங்க'ன்னு சொல்லி, அந்த பரிசை கொடுத்து பாராட்டினாங்க.

இப்போது யு டியூபராக புகழுடன், சிறப்பான வருமானமும் கிடைக்குது. ஆனால், இதெல்லாம் எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை.

அப்படி நடக்கும்பட்சத்தில், நான் தடுமாறி நிற்கக் கூடாதில்லையா... அதனால், பஸ் டிரைவர் வேலை, 'டச்' விட்டு போயிடக் கூடாது என, அவ்வப்போது அந்த வேலைக்கும் போறேன்.

கவிதா: இவரோட அப்பா இறந்ததுல இருந்து குடும்ப பாரத்தை இவர் தான் சுமக்கிறார். ரொம்ப இக்கட்டான சூழலில், வீடியோ பதிவிடுறது தான், இவருக்கு, 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' என சொல்லலாம்.

வீடியோ ஷூட் பண்றது மட்டுமல்லாமல் எடிட்டிங், பப்ளிஷ் செய்வது என, எல்லா வேலையையும் நானே செய்ய துவங்கினேன். சேனல் துவங்கிய ஒரு ஆண்டில், 20,000 சப்ஸ்கிரைபர்கள் தான் இருந்தாங்க. அடுத்த ஒரு ஆண்டில் பல லட்சங்களாக அதிகரிச்சது.

ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை எட்டிய சேனல்களுக்கு 'டைமண்டு' பட்டன் விருதை வழங்கி கவுரவிக்கிறது, யு டியூப் நிர்வாகம். கேரளாவில் இந்த விருதை வாங்கிய முதல் சேனல், எங்களுடையது தான்.

****************

ஒரு விஷயம் மாறும்னு நம்பி களமிறங்கினால் நிச்சயம் மாறும்!


பேப்பர் கூழ் பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, கோவை மாவட்டம், மாதம்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்கர லிங்கம் - ரெங்கநாயகி தம்பதி:ரெங்கநாயகி: கடந்த, 80 ஆண்டுகளாக பேப்பர் கூழ் பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். 350-க்கும் அதிகமான டிசைன்களில் பொம்மைகள் தயார் செய்து வெளிநாடுகளுக்கும்

ஏற்றுமதி செய்கிறோம்.

இந்த தொழில் எங்க மாமனார் துவங்கியது. அந்த காலத்தில் சினிமாக்களுக்கு பேக்ரவுண்ட், செட்டுகள் ரெடி பண்றதுக்கு தேவையான பொம்மைகளை எங்க மாமனாரும், அவரோட நண்பர்களும் பண்ணிட்டு இருந்தாங்க.அது நொடிச்சு போகவே, பேப்பர் கூழ் பொம்மைகள் செய்ய துவங்கினோம். எங்க வீட்டுக்காரருக்கும் அதில் ஆர்வம் அதிகம். ஆனால், வருமானம் கம்மிங்கிறதால எங்க மாமனார், என் வீட்டுக்காரரை இந்த தொழிலுக்கு வரக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு.

ஆனாலும், எங்க வீட்டுக்காரர் சென்னையில் இருந்து, கோவைக்கு வந்து சொந்தக்காரங்களோட சேர்ந்து இந்த தொழிலை செய்து வந்தார். கல்யாணத்துக்கு பின், நானும் கத்துக்கிட்டு, பொம்மைகள் செய்ய துவங்கினேன்.

சங்கரலிங்கம்: ஒரு மாதத்திற்கு, 100, 200 பொம்மைகள் விற்பனையாகிட்டு இருந்துச்சு.

சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட போதும், பிள்ளைகளை படிக்க வைக்க காசு இல்லாமல் கடன் வாங்கிய போதும், இந்த தொழிலை விட்டுட்டு போகவில்லை. இந்த தொழிலில் நாங்க படுற கஷ்டங்களை சின்ன வயசுல இருந்தே பார்த்திருக்கான் எங்க மகன்.இதனால், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சு முடிச்சதும், இந்த தொழிலோட நிலைமையை மாத்துவேன்னு சொல்லி, பொம்மைகள் செய்ய துவங்கிட்டான். அவன் களமிறங்கியதும், குடிசை தொழிலாக இருந்த பொம்மை தயாரிப்பு, ஒரு பிசினசாக மாறுச்சு.

மகன் ஜெயசூர்யா: வாடிக்கையாளர்களை தேடி நாங்க போகாமல், வாடிக்கையாளர்கள் எங்களை தேடி வரணும்னு நினைச்சேன்.

சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தினேன். எங்களோட வேலைப்பாடுகளை சின்ன சின்ன வீடியோக்களாக எடுத்து, 'அப்டேட்' செய்வேன். அதை பார்த்துட்டு சமூக வலைதளங்களில், 'பாலோயர்ஸ்' அதிகமானாங்க; ஆர்டர்களும் அதிகமாச்சு. பேப்பர் பொம்மைகளை, 300 கிராம் எடையிலேயே செய்ய முடியும் என்பதால், ஏற்றுமதியும் எளிதாக இருந்தது.

இப்போது நாங்க அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், துபாய், மலேஷியா என, நிறைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். கிட்டதட்ட 60 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கோம்.ஆண்டுக்கு, 50,000 பொம்மைகள் தயார் செய்கிறோம்.

இப்போது ஆண்டுக்கு, 1 கோடி ரூபாய்க்கு, 'டர்ன் ஓவர்' செய்கிறோம். ஒரு விஷயம் மாறும்னு தீர்க்கமாக நம்பி, களத்தில் இறங்கினா நிச்சயம் மாறும்.






      Dinamalar
      Follow us