/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நிறைய திட்டு வாங்கி சேலை கட்டுவதை கற்று கொண்டேன்!
/
நிறைய திட்டு வாங்கி சேலை கட்டுவதை கற்று கொண்டேன்!
நிறைய திட்டு வாங்கி சேலை கட்டுவதை கற்று கொண்டேன்!
நிறைய திட்டு வாங்கி சேலை கட்டுவதை கற்று கொண்டேன்!
PUBLISHED ON : மே 21, 2024 12:00 AM

பிரபலங்களுக்கு சேலை கட்டி விடும் தொழிலில் கலக்கும், 'செலிபிரிட்டி சாரி டிரேப்பிஸ்ட்' திவ்யா:
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது.
கோலிவுட் மட்டு மன்றி, பாலிவுட் பிரபலங்களும் கலந்துகொண்ட அந்த திருமண நிகழ்ச்சியில், மணமகள் குடும்பத்தாருக்கும், வருகை தந்த பல பிரபலங்களுக்கும் புடவை கட்டி விட்டேன்.
திருமணத்துக்கு வந்தவர்கள் தாம்பூல பை வாங்கினரோ இல்லையோ, என் தொடர்பு எண்ணை வாங்க தவறவில்லை என்பது தான், 'ஹைலைட்!'
இந்த துறையில், 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட சரஸ்வதியின் மூத்த மகள் தான் நான். என் 16 அடி பாய்ச்சலுக்கு அது தான் காரணமோ! என் தங்கை ஜீவிதாவும் சாரி டிரேப்பிஸ்ட் தான்.
உண்மையை சொல்லணும்னா, துவக்கத்தில் எனக்கு இந்த பீல்டில் கொஞ்சம்கூட இன்ட்ரெஸ்ட் இல்லை. படிச்சு முடிச்சு, திருமணமாகி, குழந்தைங்களும் பிறந்துட்டாங்க.
'நீயும் கத்துக்கோ... இந்த பீல்டுக்குள்ள வா'ன்னு அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. ஒருநாள் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வெச்சு கத்துக் கொடுத்தா என் தங்கச்சி ஜீவிதா.
அப்புறம் அம்மாகூட அசிஸ்டன்டாக நிறைய இடங்களுக்கு செல்ல துவங்கினேன். அவங்ககிட்ட நிறைய திட்டு வாங்கி தான் வேலை கற்றுக் கொண்டேன்.
'எப்படி அத்தனை செலிபிரிட்டீசையும் மயக்கிடறீங்க'ன்னு சிலர் என்கிட்டயும் அம்மா, தங்கச்சிகிட்டயும் கிண்டலாக கேட்பாங்க.
'செலிபிரிட்டீஸ் கூட வேலை செய்வதால் அட்வான்டேஜ் எடுக்கக் கூடாது... அவங்ககிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணணும்... தேவையில்லாமல் பேசறதெல்லாம் அவங்களுக்கு பிடிக்காது... பார்த்து நடந்துக்கோங்க'ன்னு அம்மா சொல்லி கொடுத்திருக்காங்க.
இன்னிக்கு வரைக்கும் நானும், என் தங்கச்சியும் அதை தான் பின்பற்றுகிறோம்.
வேலைன்னு வந்துட்டா, நேரம், காலம் பார்க்க முடியாது. அதேசமயம், எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், சாமானியரான என்கிட்ட அவங்க காட்டற அன்பும், அக்கறையும் நெகிழ வெச்சிடும்.

