/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எடையை குறைத்து டிப்ரெஷனில் இருந்து மீண்டு வந்தேன்!
/
எடையை குறைத்து டிப்ரெஷனில் இருந்து மீண்டு வந்தேன்!
எடையை குறைத்து டிப்ரெஷனில் இருந்து மீண்டு வந்தேன்!
எடையை குறைத்து டிப்ரெஷனில் இருந்து மீண்டு வந்தேன்!
PUBLISHED ON : ஏப் 01, 2024 12:00 AM

'நடிகர் திலகம்' சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகனும், நடிகருமான துஷ்யந்தின் மனைவி அபிராமி:
சென்னையில் தான் பிறந்து வளர்ந்தேன். பிசினஸ் பாரம்பரியம் உள்ள குடும்பம் எங்களுடையது. 'பேஷன் டிசைனிங்' முடிச்சிட்டு பிசினஸ் பண்ணிட்டிருந்தேன்.
சினிமா பின்னணி இல்லாத நான், சினிமாவுக்கே இலக்கணமான சிவாஜி கணேசன் குடும்பத்துக்குள்ள மருமகளாக போனது மிகப்பெரிய பொறுப்பு. அரேஞ்டு மேரேஜ் தான். கல்யாணமாகி, 12 ஆண்டுகளாகிறது.
எங்களுடையதும் கூட்டுக் குடும்பம் தான். ஆனால், புகுந்த வீடுங்கிறது கற்பனைக்கு எட்டாத பிரமாண்டமான கூட்டுக் குடும்பமா இருந்தது. யார், என்ன உறவுங்கிறதை புரிஞ்சுக்கவே, ஒரு ஆண்டு ஆச்சு.
முதல் குழந்தை பிறந்ததும் எனக்கு டிப்ரெஷன் துவங்கியது. எக்கச்சக்கமா வெயிட் போட்டேன்.
ஒரு கட்டத்தில் யாரையும் பார்க்கவோ, பேசவோ பிடிக்காமல் ஒரு வட்டத்துக்குள்ள என்னை சுருக்கிக்கிட்டேன்.
எப்போதும் துாங்கிட்டே, சாப்பிட்டுட்டே இருப்பேன். குழந்தையைக்கூட பார்க்க பிடிக்காது. அப்படி இருந்தபோது, இன்ஸ்டாகிராமில் எத்தனையோ பேர் என்னை மாதிரியே இருந்து, அதிலிருந்து வெளியே வந்த அனுபவங்களை பகிர்ந்திருந்தனர்.
எனக்கு ஏதோ பிரச்னை என, என் கணவருக்கும் புரிந்தது. குழந்தைகளை பார்த்துக்கிறதுல இருந்து, என்னை அன்பாக கவனிச்சுக்கிறது வரை மிகவும் உதவியாக இருந்தார். கவுன்சிலிங் போனேன்.
'ஒர்க் அவுட்' செய்து எடையை குறைத்தேன். ஒரு கட்டத்தில் டிப்ரெஷன்ல இருந்து வெளியே வந்தேன்.
டிப்ரெஷன் யாருக்கும், எப்பவும் வரலாம். அது அவமானத்துக்குரிய விஷயமில்லை. அதுல இருந்து எப்படி மீண்டு வர்றோம் என்பது தான் முக்கியம்.
பேஷன் டிசைனரான நான், காட்டனில் டாப் லேயர் வைத்த, சருமம் பாதிக்கப்படாத வகையில், 'நாப்கின்' தயாரிக்கிறது பத்தி யோசிச்சேன். ஒரு கட்டத்தில் என் முயற்சியில் ஜெயிச்சேன்.
'புராஜெக்ட் சக்தி' என்ற திட்டத்தை துவங்கி, ஏழை மாணவியருக்கு இலவசமாக நாப்கின்களை கொடுத்திருக்கோம். சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளில் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் இலவச நாப்கின்கள் கொடுத்தோம்.
தவிர, பெண்களுக்கு, 'சாப்ட் ஸ்கில்' மற்றும் மார்க்கெட்டிங் திறமைகளை கற்றுக் கொடுக்கிறோம்.
நாங்க தயாரிக்கிற சானிட்டரி நாப்கின்களை இல்லத்தரசிகள், கல்லுாரி மாணவியர், பியூட்டி பார்லரில் வேலை செய்றவங்கன்னு பல தரப்பட்ட பெண்களும் எம்.ஆர்.பி-.,யை விட 20 - 25 சதவீதம் குறைந்த விலையில் வாங்கி சென்று விற்பனை செய்து சம்பாதிக்கின்றனர்.
பொருளாதார ரீதியாக, அவர்களை தன்னிறைவோட உணர செய்வது தான் இதன் நோக்கம்.

