/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பொருளாதார ரீதியா 'ஸ்ட்ராங்கா' இருப்பது பெண்ணுக்கு முக்கியம்!
/
பொருளாதார ரீதியா 'ஸ்ட்ராங்கா' இருப்பது பெண்ணுக்கு முக்கியம்!
பொருளாதார ரீதியா 'ஸ்ட்ராங்கா' இருப்பது பெண்ணுக்கு முக்கியம்!
பொருளாதார ரீதியா 'ஸ்ட்ராங்கா' இருப்பது பெண்ணுக்கு முக்கியம்!
PUBLISHED ON : செப் 17, 2024 12:00 AM

சென்னையில், 'எவர்குரோத் அகாடமி' என்ற பெயரில், 'லைப் கோச்சிங்' பயிற்சிகள் வழங்கி வரும் பிரபல சினிமா இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் மகள் மாலிகா:
நான் பண்றது பெண்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் கோச்சிங். பல பெண்களுக்கு தேவையில்லாத பயம், தயக்கம், தன்னம்பிக்கையின்மை, பதற்றம், தடுமாற்றம் என உளவியல் ரீதியாக பல பிரச்னைகள் இருக்கின்றன; அவற்றை மாற்றுவது தான் என் வேலை.
அப்பா, அம்மாவுக்கு என்னையும் சேர்த்து மூன்று மகள்கள். என்னை டாக்டராக்கணும் என அப்பாவுக்கு ரொம்ப ஆசை. ஆனால், நான் புட் டெக்னாலஜி, எம்.பி.ஏ., பேஷன் டெக்னாலஜி படித்தேன். பயம், தயக்கம், தன்னம்பிக்கை இல்லாதது என, எல்லா பிரச்னைகளும் எனக்கும் இருந்தன.
திருமணமானதும் குழந்தைக்கு பல ஆண்டுகள் காத்திருந்த போது ஆரம்பித்தது, 'டிப்ரஷன்!' டாக்டர்களை தேடிப் போறதும், கோவில் கோவிலா போறதும்னு இரண்டரை ஆண்டுகள் போச்சு. அப்புறம் திடீர்னு பிரெக்னன்ட் ஆனேன்.
அது கிடைத்ததும் என் டிப்ரஷனெல்லாம் காணாமல் போவது தானே நியாயம்? ஆனால், அப்படி நடக்கவில்லை. 'ஒன்பது மாதங்களும் குழந்தை நல்லபடியா வளரணும், பிறக்கணும்' என்ற கவலையில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை; அது இன்னும் பதற்றத்தை அதிகரித்தது.
குழந்தை நல்லபடியா பிறந்ததும், 'சிசேரியன் வலி, தாய்ப்பால் கொடுக்கிறது, பீரியட்ஸ் ப்ளீடிங், களைப்பு' என, பிரச்னைகளை சமாளிக்கிறது பெரிய அவஸ்தையாக இருந்தது. அப்போது தான், 'லைப் கோச்'சாக சிலர் இருக்கிறது தெரிந்தது.
அப்படி ஒருத்தர் கொடுத்த கோச்சிங்கில் தான், வாழ்க்கையில் நான் மிஸ் பண்ணிய சந்தோஷமெல்லாம் திரும்ப கிடைத்தது. நான் உணர்ந்த விஷயங்களை, என்னை மாதிரியே கஷ்டப்படுற மற்ற பெண்களுக்கும் சொல்லி தரலாமே என்ற எண்ணத்தில், நானும் லைப் கோச் ஆக முடிவெடுத்தேன்.
இந்தியா, வெளிநாட்டில் உள்ள டாப் கோச்சுகள்கிட்ட பயிற்சிகள் எடுத்தேன். உலகில் நம்பர் ஒன்னான, ஐரோப்பாவில் உள்ள, 'மைண்ட்வேலி' யுனிவர்சிட்டிக்கு சென்று படித்து தான், இங்கு அகாடமி ஆரம்பித்தேன்.
'எமோஷனலா, ஸ்ட்ராங்கா' இருக்கிறதும், பொருளாதார ரீதியா ஸ்ட்ராங்கா இருக்கிறதும் ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியம். இந்த இரண்டு விஷயங்களை தான், என் பயிற்சியில் பிரதானமா கற்றுக் கொடுக்கிறேன்.
'என்னை யார் எப்படி நடத்தினாலும், எனக்கு என் மன அமைதி தான் முக்கியம். அதற்கு நான் தான் பொறுப்பு' என, உணர வைக்கிறது தான் என் பயிற்சி.
'பணத்துக்காக இன்னொருவரை எதிர்பார்க்காமல், நம் கையில் கொஞ்சம் பணம் இருந்தால் நல்லா இருக்கும்' என நினைக்கிற பெண்களுக்கு, அதற்கான வாய்ப்புகளை, வழிகளை கண்டுபிடிக்க கற்றுக் கொடுக்கிறேன்.