/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எனக்கு பிடிச்ச இசையை தொழிலாக செய்வது பெரிய கொடுப்பினை!
/
எனக்கு பிடிச்ச இசையை தொழிலாக செய்வது பெரிய கொடுப்பினை!
எனக்கு பிடிச்ச இசையை தொழிலாக செய்வது பெரிய கொடுப்பினை!
எனக்கு பிடிச்ச இசையை தொழிலாக செய்வது பெரிய கொடுப்பினை!
PUBLISHED ON : மே 31, 2024 12:00 AM

கிட்டத்தட்ட 10,000 வினைல் ரெக்கார்டுகளை சேகரித்து வைத்திருக்கும், கோவையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்:
திரையிசை மீது நான் கொண்ட பேரார்வம் தான், என்னை இசைத்தட்டுகள் சேகரிப்பில் ஈடுபட செய்திருக்கிறது. என் அண்ணன், தம்பி எல்லாருமே ரேடியோ மெக்கானிக் தான். 1973-ல் அண்ணன் ஒரு ரெக்கார்டு வாங்கிட்டு வந்தாரு. அப்போது துவங்கியது தான் ரெக்கார்டுகளுக்கான என் தேடல்.
நான் டாக்சி ஓட்டிட்டிருந்தேன். சிறு வயது முதலே என்னோட விருப்பமாக இருக்கிற ரெக்கார்ட்ஸை வைத்து ஏதாவது பண்ணலாம்னு நினைத்தேன். முதலில் விலை குறைந்த வினைல் பிளேயர்ஸ் வாங்கி, சர்வீஸ் செய்து விற்க துவங்கினேன்.
அப்படியே இந்த வினைல் ரெக்கார்ட்ஸ் மேல் இருந்த ஆர்வத்தில், அதையும், 'கலெக்ட்' செய்ய துவங்கினேன். இன்று அதையே பிசினசாக செய்து வருகிறேன். தற்போது, 10,000 ரெக்கார்டுகளுக்கு மேல் இருக்கு. இந்தியா மட்டு மல்லாமல், உலக அளவிலும் விற்கிறேன்.
'ஆன்ட்டிக் கலெக் ஷன்' மேல் எல்லாருக்குமே ஒரு ஈர்ப்பு இருக்கும்; எனக்கு வின்டேஜ் கலெக் ஷன் மேல் ஒரு ஈர்ப்பு. பாடல்களை நீங்க எப்படி கன்வெர்ட் பண்ணினாலும், வினைல் ரெக்கார்ட்ஸ்ல கேட்குற குவாலிட்டி வராது. நமக்கு பிடித்த பாட்டை, நம் கைப்பட எடுத்து வைத்து கேட்பது என்பதே, ஒரு திருப்தியான விஷயம் தானே.
உங்களுக்கு பிடித்த பாட்டை டிஜிட்டலில் செலக்ட் செய்து கேட்பதற்கும், அதற்கு சில பட்டனை அழுத்தி பாட ஆரம்பிக்கிற வரை காத்திருந்து கேட்பதற்கும் வேறுபாடு இருக்கு. அது தான் என்னை பரவசப்படுத்துது.
பாடல்கள் மட்டுமல்லாமல், தலைவர்கள் உரைகளையும் இசைத்தட்டாக வைத்துள்ளேன்... 1940 காலகட்டத்தில் இருந்த மகாத்மா காந்தி, அண்ணாதுரை, சத்தியமூர்த்தி மற்றும் காஞ்சி மகா பெரியவர் போன்றவர்களின் உரைகள்... இதுபோக என் ஆதர்ஷ கவிஞர் கண்ணதாசனின், 'அர்த்தமுள்ள இந்து மதம்' இருக்கு.
பல ஊர்களில், 'கேசட் ரெக்கார்டிங் லைப்ரரி' என, முன்பு இருந்தது. அதை பார்த்துக் கொள்ள முடியாமல் அதை மூடும் நிலை வரும்போது, அதை விலை பேசி, மொத்தமாக வாங்கி விடுவேன். இந்தியா முழுக்க இந்த ரெக்கார்டுகளுக்காக மும்பை வரை, 'டிராவல்' பண்ணியிருக்கேன்.
அங்கு நடக்கும் ஏலத்தில், ஒரு கலெக் ஷன் எடுக்கும்போது, ஒரு லாட்டில் 500 - 2,000 ரெக்கார்ட்ஸ் வரை இருக்கும். நாம் ஒரு லாட்டாக தான் எடுத்துட்டு வர முடியும். அதில் ரேர் கலெக் ஷனோ, பிடிச்ச கலெக் ஷனோ இருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டம்.
இந்த வேலையை செய்வது ஒரு வரம். எனக்கு பிடிச்ச இசையை, தொழிலாக செய்வது பெரிய கொடுப்பினை. ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டும் சார்... என்ன தான் இருந்தாலும் மியூசிக் தான் சார் லைப்! தொடர்புக்கு: 81109 86767