/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
செலவுகள் போக மாதந்தோறும் ரூ.1.50 லட்சம் லாபம் கிடைக்கிறது!
/
செலவுகள் போக மாதந்தோறும் ரூ.1.50 லட்சம் லாபம் கிடைக்கிறது!
செலவுகள் போக மாதந்தோறும் ரூ.1.50 லட்சம் லாபம் கிடைக்கிறது!
செலவுகள் போக மாதந்தோறும் ரூ.1.50 லட்சம் லாபம் கிடைக்கிறது!
PUBLISHED ON : மார் 30, 2024 12:00 AM

மதுரையில் பால் பண்ணை நடத்தி வரும், 'பிசினஸ் வுமன்' யுரேகா:
எம்.எஸ்சி., படித்துள்ள நான், நான்காண்டுகள் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றினேன். நான் வளர்ந்ததெல்லாம் மதுரையில் தான். திருமணமானதும் வேலை விஷயமாக சென்னையில் சில ஆண்டு வசித்தேன்.
கடந்த 2020- துவக்கத்தில் மதுரையில் குடியேறி, வீட்டிலிருந்தே ஐ.டி., வேலை செய்தேன். எங்கப்பா, அம்மா, அவங்க வளர்த்த இரண்டு மாடுகளோட எங்ககூட இருந்தாங்க.
அந்த நேரத்தில் இரண்டு மாடுகள் வாங்கினேன். அப்போது, தினமும் பால் கறந்து கொடுக்க பணியாளர் ஒருவர் வருவார்.
எங்கள் தேவைக்கு போக மீதமாகும் பாலை அவரே விலைக்கு வாங்கிக் கொள்வார். 'லாக்டவுன்' நேரத்தில் அந்த பணியாளர் வர முடியாததால், பால் கறக்க ரொம்ப சிரமப்பட்டோம்.
என் கணவர் பால் கறக்கக் கற்றுக் கொண்டார். தெரிந்தவர்களுக்கு பாலை விற்பனை செய்தோம். பால் விற்பனை அதிகமானதுடன், மாடுகள் வைத்திருந்த பலரும் எங்களிடம் பால் விற்க முன்வந்தனர்.
ஒரு கட்டத்தில் ஐ.டி., வேலையை விட்டுட்டு, இதையே முழுநேர பிசினசாக செய்ய முடிவெடுத்தேன்.
தினமும், என் பண்ணையில், 90 லிட்டர் பால் கிடைக்கிறது. இதேபோல, பிற பண்ணைகளில் இருந்து தினமும், 3,000 லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறேன்.
காலையில் கிடைக்கும் பாலை மதிப்புக்கூட்டல் தேவைக்கு பயன்படுத்துகிறேன். மாலையில் கிடைக்கும் பாலை குளிர்வித்த பின், கொழுப்புச்சத்து நீக்காமல் விற்பனை செய்கிறேன். வெண்ணெய் மற்றும் பனீரை சில ஹோட்டல்களுக்கு விற்பனை செய்கிறேன்.
கடந்த செப்டம்பரில், 20 லட்சம் ரூபாய் பேங்க் லோன் வாங்கி, ஜாங்கிட் நகரில் மதிப்பு கூட்டல் யூனிட்டை துவங்கினேன்; அதில், 5 லட்சம் ரூபாய் மானியமாக கிடைத்தது.
மதிப்புக்கூட்டல் யூனிட்லயே நேரடி விற்பனைக்கான அவுட்லெட்டும் வைத்திருக்கிறோம். தயிர், பால், க்ரீம், வெண்ணெய், நெய், பாதாம் பால், பனீர், பால்கோவா, ரோஸ் மில்க், ஜிகர்தண்டா, குலோப்ஜாமூன், ரசமலாய், ரசகுல்லா, குல்பி உள்ளிட்ட 15 வகையான பொருட்களை விற்பனை செய்கிறோம்.
மாதந்தோறும் 4 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறேன். பண்ணை தொழில்களில் எல்லா செயல்பாடுகளும் நம் நேரடி மேற்பார்வையில் இயங்குவது அவசியம். பண்ணை நிர்வாகத்தை அப்பா கவனித்துக் கொள்கிறார். அந்த வேலையுடன், மதிப்புக்கூட்டல் நிர்வாகத்தை நான் பார்க்கிறேன்.
பயர்மேனாக வேலை செய்யும் கணவர் பிரபு, ஓய்வு நேரத்தில் இந்த தொழிலுக்கு, 'சப்போர்ட்' பண்றார்.
பெட்ரோல் செலவுடன், டூ வீலரும் கொடுத்து, விற்பனைக்காக ஏழு பேரை வேலைக்கு வைத்திருக்கிறோம். எல்லா செலவுகளும் போக மாதம் 1.50 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.

