sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

எதிர்நீச்சல் போட கற்றுக்கொடுத்த வாழ்க்கை!

/

எதிர்நீச்சல் போட கற்றுக்கொடுத்த வாழ்க்கை!

எதிர்நீச்சல் போட கற்றுக்கொடுத்த வாழ்க்கை!

எதிர்நீச்சல் போட கற்றுக்கொடுத்த வாழ்க்கை!


PUBLISHED ON : நவ 02, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 02, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'போட்டோகிராபர்' தொழிலில் அசத்தும், மதுரை மாவட்டம், அய்யனார்குளத்தைச் சேர்ந்த தமிழ்மொழி:

எனக்கு ஒரு தங்கை, தம்பி. நாங்கள் வளர வளர, அப்பாவின் மது பழக்கமும் வளர்ந்தது. சம்பாதித்ததை எல்லாம் 'குடி'க்கே செலவு செய்தார்.

பொறுத்து பொறுத்து, வெறுத்துபோன அம்மா, ஒரு கட்டத்தில் எங்கள் மூவரையும் கூட்டிக்கொண்டு, அம்மாவின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டைக்கு வந்து விட்டார்.

அம்மா கூலி வேலைக்கு சென்றும், பூ பறித்தும் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். நான் நன்றாக படித்து, நிலக்கோட்டை அரசு உயர்நிலை பள்ளியில், பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்கி, பள்ளி அளவில் இரண்டாவது இடத்தில் தேர்வானேன்.

பின், கல்லுாரியில் பி.எஸ்சி., சேர்ந்தேன். கல்லுாரி கட்டணம் கட்டவும், குடும்ப செலவிற்காகவும் நான், அம்மாவுடன் சேர்ந்து அதிகாலை, 3:00 மணிக்கு பூ பறிக்க செல்வேன்.

படித்து முடித்ததும் என்ன வேலைக்கு செல்வது என்ற குழப்பத்தில் இருந்தேன். வழிகாட்ட யாரும் இல்லை. ஆனால், வேலைக்கு சென்றால் தான் நம் குடும்ப நிலைமை மாறும் என்பதால், அந்த தேடலை ஆரம்பித்தேன்.

அப்போதுதான், நிலக்கோட்டையில் இருக்கிற அரசு நுாலகத்தில், இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு படிக்கின்றனர் என தெரிய வந்தது. நானும் படிக்க துவங்கினேன்; சில தேர்வுகள் எழுதினேன்.

அரசு வேலை கிடைக்கும் வரை, என் குடும்ப சூழ்நிலை காரணமாக, வேலைக்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். என் உறவினர் நடத்தி வந்த ஸ்டூடியோவில் பகுதி நேரமாக வேலைக்கு சேர்ந்தேன்.

அங்கு, 'போட்டோகிராபி'யும் கற்றுக்கொண்டு புகைப்படம் எடுக்க, திருமணம், காதணி விழா என பல ஊர்களுக்கும் சென்றேன்.

'போட்டோகிராபர்' வேலையில் கிடைத்த பணம், குடும்பத்துக்கு பலம் கொடுத்தது. நான் திருமணம் செய்து கொண்டால், என் குடும்பத்தை யார் பார்த்து கொள்வார் என்று, நான் திருமணம் செய்து கொள்ளாமல், தங்கைக்கு திருமணம் செய்து வைத்தேன்; தம்பியும் வேலைக்கு சென்று விட்டான்.

ரொம்ப கஷ்டத்தோடும், கட்டுப்பாடுகளோடும் வளர்ந்த ஒரு பெண், ஆணுக்கு சமமாக எல்லா இடங்களுக்கும் சென்று பாராட்டு, விமர்சனங்களை பொருட்படுத்தாமல், எதிர்நீச்சல் போட கற்றுக் கொடுத்துள்ளது இந்த வாழ்க்கை.

இப்போது என் ஒரே இலக்கு, அரசு அலுவலராக வேண்டும் என்பது தான். அதற்காக முயற்சி எடுத்து வருகிறேன்.

*****************************

சின்ன தொழிலாக இருந்தாலும் சொந்த தொழில்!

ஊர், ஊராக சென்று காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் தஞ்சாவூரை சேர்ந்த சக்திவேல்:நான், 10ம் வகுப்பு தான் படித்துள்ளேன். ஒரு ஸ்வீட் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் கைகொடுக்கும் என்று ஸ்வீட் கடை வேலையை விட்டு, திருப்பூர் பனியன் பேக்டரியில் வேலைக்கு சேர்ந்தேன்.நம் வாழ்க்கை பனியன் பேக்டரியிலேயே முடங்கி விடக்கூடாது என தோன்றியதால், சவுதி அரேபியாவுக்கு சென்றேன். அங்கு, சாலை அமைக்கும் பணி கொடுத்தனர்; இரண்டு ஆண்டுகள் தாக்கு பிடித்தேன். பின், ஊருக்கே வந்து, மளிகை கடையில் வேலை பார்த்தேன்.

அந்த வருமானத்தில் குடும்ப தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. பின், மீண்டும் துபாய்க்கு சென்றேன். அபார்ட்மென்ட்டில் காஸ் பைப் பொருத்தும் வேலை; மாதம், 30,000 ரூபாய் சம்பளம்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இருந்தேன். கொரோனா காலகட்டத்தில் ஊருக்கு வந்து விட்டேன்.

நான் எதையும் உருப்படியாக செய்யவில்லை. எது, எனக்கானது என்பதையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்து என்ன என்று யோசித்த போது நண்பர் ஒருவர் பூண்டு, கடுகு, சீரகம் உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்களையும் லோடு ஆட்டோவில் கிராமம் கிராமமாக எடுத்து சென்று விற்பனை செய்தார்; நானும் உடன் சென்றேன்.

அப்போது பலரும், 'காய்கறிகள், பழங்கள் கொண்டு வந்தால் வாங்கிக் கொள்வோமே' என்று அடிக்கடி கேட்டனர்.உடனே, மார்க்கெட்டில் அவற்றை மொத்தமாக வாங்கி விற்பனை செய்தேன். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனக்கென தொடர் வாடிக்கையாளர்கள் உருவாகினர். முதலில் இருசக்கர வாகனத்தில் தட்டு வண்டி போல் வடிவமைத்து, அதில்தான் வியாபாரம் செய்து வந்தேன்.

அதன்பின் பட்டறை நண்பர் ஒருவர், 'பெரிய வண்டியை தட்டு வண்டி போல் மாற்றி அமைக்கலாம்' என்று கூறி, கியர் வண்டியை தட்டு வண்டி வடிவில் மாற்றி தந்தார். அதற்கு தகரத்தால் கூரையும் மாட்டினேன். இதில், 200 கிலோ வரை காய்கறிகள் எடுத்துச் செல்ல முடியும்.மக்களுக்கு தரமான காய்கறிகள், பழங்களை தருவது தான் என் ஸ்பெஷல். வியாபாரத்திற்கு செல்லாமல் ஒருநாளும் இருந்ததில்லை.எந்த சூழலிலும் வருவேன் என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்களிடம் உருவாக்கினேன்.சின்ன தொழிலாக இருந்தாலும், சொந்த தொழில் செய்கிறேன் என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். கைநிறைய வருமானம் வருவதுடன், 'எதிலும் நிலைத்து நிற்க மாட்டான்' என்ற பிறருடைய எண்ணத்தை மாற்றிக் காட்டியுள்ளேன். மற்றவர்கள் மத்தியில், எனக்

கான மரியாதையும் கூடியிருக்கிறது.






      Dinamalar
      Follow us