PUBLISHED ON : டிச 26, 2025 05:58 PM

திருநெல்வேலி என்றால் ஜங்ஷன் திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, சித்த மருத்துவ கல்லூரி போன்று தனித்துவமாக மக்கள் மனதில் இடம் பிடிக்கும் இடமாகிவிட்டது பொருநை தொல்லியல் அருங்காட்சியகம்.


தாமிரபரணி கரையில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய அனைத்து அகழாய்வு மையங்களும் தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்திலேயே உள்ளன.

5 டி தியேட்டரில் ஐந்திணை பற்றிய விஷயங்கள் வீடியோ காட்சிகளாக 10 நிமிடம் கண் முன் நிறுத்துகிறது. அதில் ஒரு விமானத்தில் பறந்த படி நம்மை மலை அருவியிலும் கடலிலும் காடுகளிலும் சுற்றி அழைத்துச் செல்வது போல கருப்பு நிற கண்ணாடி அணிந்து பார்க்கும் போது மிக அருமையாக உள்ளது.பாபநாசம் அருவியில் இறங்கும்போது நம் தலையில் நிஜமாகவே அருவி நீர் கொட்டுகிறது.கருப்பு கண்ணாடி அணிந்து சீட் பெல்ட் அணிந்து முன்பாக உள்ள கம்பிகளைப் பிடித்துக் கொண்டுதான் அந்த காட்சியை பார்க்க முடியும்.
இதே போல 7 டி தியேட்டர் காட்சியும் மிக அருமையாக உள்ளது.தலையில் அதற்கான கருவியை மாட்டிக்கொண்டு படகில் அமர்ந்தால் போதும்,படகில் பொருநை நதியில் பயணிப்பது போல நாம் பயணிக்கலாம் ஆற்று மீன் உங்கள் முன் துள்ளிவிளையாடு கரையில் உள்ள யானைகள் துதிக்கையில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் போது உங்கள் மீது நிஜமாகவே தண்ணீர் திவலைகள் படும் அதுதான் 7 டி மாயம்.இந்த 5 டி மற்றும் 7 டி க்கு நுழைவுக் கட்டணத்துடன் சிறப்பு கட்டணமும் உண்டு.
உள்ளே மகளிர் சுய உதவி குழுவின் கேண்டீன் உள்ளது. போதுமான அளவு கழிப்பறைகள் உள்ளன. குடிநீர் வைக்கப்பட்டுள்ளன.மாவட்ட அறிவியல் மையம், வ உ சி மைதானம் போன்ற ஒன்று, இரண்டு சுற்றுலா மையங்களை மட்டுமே கொண்ட திருநெல்வேலிக்கு பொருநை அருங்காட்சியகம் ஒரு வரப்பிரசாதம் தான்..
ததும்பி வழியும் தமிழரின் பெருமைகளைச் சொல்லும் பொருநை அருங்காட்சியகத்தைக் காண அழைக்கிறோம் அன்புடனே
தகவல் :எஸ்.முப்பிடாதிபடம் :செந்தில் விநாயகம்

