/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
உலகத்திலேயே எனக்கு பிடிச்ச ஸ்வீட்... 'பழனியம்மாள்!'
/
உலகத்திலேயே எனக்கு பிடிச்ச ஸ்வீட்... 'பழனியம்மாள்!'
உலகத்திலேயே எனக்கு பிடிச்ச ஸ்வீட்... 'பழனியம்மாள்!'
உலகத்திலேயே எனக்கு பிடிச்ச ஸ்வீட்... 'பழனியம்மாள்!'
PUBLISHED ON : ஜூன் 29, 2024 12:00 AM

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ்: கோவை மாவட்டம், மாதம்பட்டி கிராமம் தான் எங்க சொந்த ஊர்.
என் பெற்றோர், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பெரியவங்க ஆசியோட சிம்பிளா கல்யாணம் பண்ணிட்டு, மாதம்பட்டி கிராமத்தில் செட்டிலாகிட்டாங்க. அப்பா, 'லட்சுமி கேட்டரிங் சர்வீஸ்' துவங்கினார்.
வீட்டுக்காரர் வழிகாட்டுதலில், அம்மாவும் கூடிய சீக்கிரமே சூப்பரான, 'குக்' ஆகிட்டாங்க. சமையல் குடும்பமாக இருந்தும், வீட்டில் போதுமான சாப்பாடு இல்லாத அளவுக்கு துவக்க காலத்தில் வறுமை.
ஆனாலும், இருப்பதை வைத்து, ரொம்பவே சுவையாக சமைச்சு கொடுத்து என்னையும், தம்பி கிருஷ்ணகுமாரையும் தங்கமா பார்த்துகிட்டாங்க அம்மா.
அம்மா ரொம்ப கண்டிப்பு. இன்னைக்கு இவ்ளோ வசதி வாய்ப்புக்கு பிறகும் நானும், தம்பியும் தப்புதண்டா, கெட்ட பழக்கம்னு இல்லாதவங்களாக இருக்கோம்னா அதுக்கு காரணம் அம்மா.
அம்மா இப்பவும் எங்ககிட்ட சொல்லுவாங்க... 'கண்ணு... எந்த உணவையும் வேஸ்ட் பண்ணாத. ஒரு காலத்தில் ஒவ்வொரு பருக்கைக்கும் கஷ்டப்பட்டிருக்கோம். சாப்பிட்ட பின், தட்டை கழுவி வை' என்பாங்க.
அப்பா, அம்மா ரெண்டு பேரும் என்னோட எந்த புது முயற்சிக்கும், 'நோ' சொன்னதில்லை. என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணுவாங்க. கேட்டரிங் துறையில் சாதிச்சதும், நடிக்கப் போனேன்.
அப்ப சிலர், 'ஏன் ரங்கா சினிமால்லாம்? இந்த சக்சஸ் பிசினசை கெடுத்துக்காதே'ன்னு அக்கறையாக தடுத்தாங்க. ஆனால், அப்பாவும், அம்மாவும் என்னை என்கரேஜ் பண்ணாங்க.
இவ்வளவு மேஜிக்குகளுக்கு சொந்தக்காரியான எங்கம்மாவுக்கு அப்பா, நான் மற்றும் தம்பின்னு மூன்று பேரும் தான் உலகமே.
இப்பவும், 10 நாட்டு மாடுகளை வைத்து, பால் கறந்து சம்பாதிக்கிறாங்க எங்கம்மா.
அதில் பியூட்டி என்னன்னா, என் கேட்டரிங் கம்பெனிக்கு பால் சப்ளை செய்து, நியாயமான ரேட் வாங்கி, அந்த பணத்தை சேர்த்து வைத்து எனக்கே கைசெலவுக்கு கொடுப்பாங்க.
கேட்டரிங் பிசினஸ் துவங்கியதில் இருந்து, எந்த புது டிஷ்னாலும் என் கையாலேயே சமைத்து, அம்மாவ சாப்பிடச் சொல்லி, கருத்து கேட்பேன்.
நிறை, குறை, திருத்தம் சொல்லிட்டு, 'யாருக்குன்னாலும் பணத்துக்காக இல்லாம, பாசத்த முன்னாடி வெச்சு சமைக்கோணும் கண்ணு'ன்னு அன்பா அட்வைஸ் பண்ணுவாங்க. இதனால் தான், 'உலகத்திலேயே உனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் எது?'ன்னு என்னை கேட்டா, சட்டுன்னு சொல்வேன்... 'பழனியம்மாள்'ன்னு!