/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
'நெகட்டிவ்' விமர்சனங்கள் எங்க உறுதியை பாதித்ததில்லை!
/
'நெகட்டிவ்' விமர்சனங்கள் எங்க உறுதியை பாதித்ததில்லை!
'நெகட்டிவ்' விமர்சனங்கள் எங்க உறுதியை பாதித்ததில்லை!
'நெகட்டிவ்' விமர்சனங்கள் எங்க உறுதியை பாதித்ததில்லை!
PUBLISHED ON : மே 10, 2024 12:00 AM

'கிராமத்து வேடிக்கை' எனும் யு டியூப் சேனலை நடத்தி வரும், புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த, 24 வயதாகும் பாரதி மீனா: அம்மா, மகள், பேத்தி என மூன்று தலைமுறை பெண்கள் இணைந்து கலக்கும் யு டியூப் சேனல், கிராமத்து வேடிக்கை.
வயதான கணவன்- - மனைவி காமெடி, 'பச்சை மிளகாயா, காய்ந்த மிளகாயா... எதில் லாபம் விவசாயிகளுக்கு' என்பது போன்ற ஆலோசனைகள், டாக்டர் --- நோயாளி காமெடி என, பல சுவையான விஷயங்களை காமெடி துாவி பரிமாறுகிறோம்.
நான் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, என் அப்பாவின் அச்சகத் தொழிலை செய்து வருகிறேன். குடிசை தொழிலாக சின்ன அச்சகத்தை துவங்கினோம்.
ஆறாவது படிக்கிறதில் இருந்து அங்கு சென்று, வேலைகளை கத்துக்கிட்டேன். படிச்சு முடிச்சதும் அப்பாகிட்ட இருந்து பொறுப்பை நான் வாங்கிட்டேன். என் அக்காவும், அவங்க கணவரும் அழைப்பிதழ் அச்சடிக்கிற பிரிவை பார்த்துக்கிறாங்க.
எங்க குடும்பம் எப்பவும் கலகலப்பா இருக்கும். அவங்களை எல்லாம் வெச்சே ஒரு சேனல் துவங்கலாம்னு துவங்கியது தான், கிராமத்து வேடிக்கை சேனல். எனக்கு பெரிதும் கை கொடுப்பவை 'ஷார்ட்ஸ் வீடியோ'க்கள் தான்.
தினமும் ஷார்ட்ஸ் வீடியோ போட்டுட்டு வர்றோம். இப்ப அப்பா, அம்மா ராஜலெட்சுமி, அக்காவோட 7 வயசு பொண்ணு பிரகிஷியா இவங்க மூணு பேரும் தான் சேனலோட முகங்கள்.
வீடியோ எடுக்குறது, எடிட் செய்வது என, மத்த வேலைகளை நான் பார்த்துக்கிறேன். சேனலுக்கு இப்போது, 5.50 லட்சம், 'சப்ஸ்கிரைபர்ஸ்' இருக்காங்க.
யு டியூப்பில் முதல் வருமானம், 9,000 ரூபாய் வந்துச்சு. வீடியோவோட எண்ணிக்கையை அதிகரித்ததால் மாதம், 10,000 ரூபாய் வரும். அப்பா நடிப்பதற்கு தயாரா இருந்தாரு. அம்மா, 'என்னால பண்ணிட முடியுமா'ன்னு தான் கேட்டாங்களே தவிர, 'பண்ண மாட்டேன்'னு சொல்லல. இரண்டு பேரும் உற்சாகமாக நடிப்பாங்க.
வீடியோவில் எங்க அம்மா, அப்பாகிட்ட சண்டை போட்டு, அவங்க அம்மா வீட்டுக்கு போறேன்னு டயலாக் பேசினா, 'நீங்களே கிழவன், கிழவி. உங்களுக்கு அப்பா, அம்மாவா'ன்னு சிலர் கேட்பாங்க. 'வயசான காலத்துல இதெல்லாம் உங்களுக்கு தேவையா'ன்னும் சிலர் சொல்வாங்க.
எங்க வீடு கொஞ்சம் பழைய காலத்து வீடு. அதை வீடியோவில் பார்த்துட்டு, 'பிளாட்பார்ம்' மாதிரி இருக்குன்னும் கமென்ட் பண்ணுவாங்க.
நெகட்டிவ் விமர்சனங்கள், எங்களோட உறுதியை எந்த விதத்துலயும் பாதிச்சதில்லை. இதையெல்லாம் தாண்டி எங்க பகுதியில், மிகப்பெரிய மரியாதையை இந்த சேனல் வாங்கி கொடுத்திருக்கு.