/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இயற்கை விவசாயம், கருப்புக்கவுனி தான் என் வளர்ச்சி!
/
இயற்கை விவசாயம், கருப்புக்கவுனி தான் என் வளர்ச்சி!
இயற்கை விவசாயம், கருப்புக்கவுனி தான் என் வளர்ச்சி!
இயற்கை விவசாயம், கருப்புக்கவுனி தான் என் வளர்ச்சி!
PUBLISHED ON : பிப் 15, 2025 12:00 AM

கடலுார் மாவட்டம், கீழ்பெரம்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கராசு: இந்த ஊர், கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் கழிமுகப்பகுதி என்பதால், மழை மற்றும் வெள்ளக் காலத்தில் ஊருக்குள் ஊடுருவும் கடல்நீர் வடிய பல நாட்கள் ஆகும்.
இதனால், நிலத்துக்கு அடியில் இருக்கும் மண்ணில் உப்புத்தன்மை அதிகமாக இருக்கும். இங்கு நெல் தவிர, வேறு எந்த பயிர்களும் சாகுபடி செய்ய முடியாது.
குடும்ப சொத்தாக, 6 ஏக்கர் 57 சென்ட் நிலம் இருந்தது. என் பங்குக்கு 1.5 ஏக்கர் வாங்கினேன்.
ஆரம்பத்தில் ரசாயன உரங்கள் பயன்படுத்தி, வீரிய ஒட்டு நெல் ரகங்களை பயிர் செய்தேன். ஓரளவுக்கு லாபம் கிடைத்தது; ஆனாலும், மனநிறைவு கிடைக்கவில்லை.
இதனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன் பாரம்பரிய நெல் சாகுபடியில் இறங்கினேன். 'பாரம்பரிய நெல் சாகுபடி செய்வதென்றால், கருப்புக்கவுனியை தேர்ந்தெடுங்கள்.
நல்ல விற்பனை இருக்கிறது' என்று கூறினர். ஆரம்பத்தில் குறைவான மகசூல் கிடைத்தாலும், படிப்படியாக சாகுபடி அதிகரித்து வந்தது.
தற்போது ஏக்கருக்கு, 16 - 19 மூட்டை கிடைத்து வருகிறது. வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஐந்து ஆண்டுகளாக கருப்புக்கவுனியை மட்டும் பயிர் செய்கிறேன்.
'இது, அதிக மருத்துவ குணமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டது. இதை சாப்பிட்டால் பலவித நோய்களில் இருந்து விடுபட முடியும்' என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அறுவடை செய்த நெல்லை அரிசியாக அரைத்தும், அவலாக இடித்தும், பயிர் செய்ய விரும்புவோருக்கு விதை நெல்லாகவும் விற்பனை செய்கிறேன். 1 கிலோ அரிசி, 1 கிலோ அவல் விலை தலா 130 ரூபாய்; விதைநெல் கிலோ 100 ரூபாய் என விற்பனை செய்கிறேன்.
ஏக்கருக்கு 18 மூட்டை; 1 மூட்டை 60 கிலோ என்ற கணக்கில் நெல் விளைச்சல் கிடைக்கிறது.
அந்த வகையில், 1,080 கிலோ நெல் அரைத்தால், 576 கிலோ அரிசி கிடைக்கும். 1 கிலோ 130 ரூபாய் கணக்கில், 74,880 ரூபாய் வருகிறது. ஏக்கருக்கு 40 கட்டு வைக்கோல் கிடைக்கும்.
இதன் வாயிலாக 4,000 ரூபாய் கிடைக்கும். ஏக்கருக்கு 78,880 ரூபாய் வருமானம். இதில் உழவு, பராமரிப்பு, அறுவடை, அரவைக்கூலி போக, 45,000 ரூபாய் நிகர லாபமாகக் கிடைக்கிறது.
மொத்தம் 7 ஏக்கருக்கு 3.15 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்து வருகிறது. என் வளர்ச்சிக்கு இயற்கை விவசாயமும், கருப்புக்கவுனியும் தான் காரணம்.
தொடர்புக்கு:97156 38919.

