sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

அமெரிக்காவை தெரிந்துகொள்ள எங்கள் சேனல் உதவுது!

/

அமெரிக்காவை தெரிந்துகொள்ள எங்கள் சேனல் உதவுது!

அமெரிக்காவை தெரிந்துகொள்ள எங்கள் சேனல் உதவுது!

அமெரிக்காவை தெரிந்துகொள்ள எங்கள் சேனல் உதவுது!


PUBLISHED ON : ஜூலை 22, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 22, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அமெரிக்காஸ் லைப் ஸ்டைல் வித் ஆர்.ஜே.,' எனும், 'யூடியூப்' சேனலின் உரிமையாளர்களான ராஜேஷ் - திவ்யா தம்பதி:

திவ்யா: அமெரிக்கா செல்லவும், அங்கு பணியாற்றவும், அமெரிக்காவைப் பற்றி தெரிந்து கொள்ளவும் தமிழர்கள் உட்பட பல நாட்டினரும் ஆர்வம் காட்டுவதுண்டு. அத்தகையோருக்கு பயனளிக்கிறது, எங்கள் சேனல்; 8.5 லட்சம், 'சப்ஸ்கிரைபர்' களை கொண்டுள்ளது.

நாங்க சென்னையில் இன்ஜினியரிங் படிச்சிட்டு, ைஹதராபாத்தில் ஒன்றாக வேலை செய்தோம். இரண்டு வீட்டார் சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம். 2014ல் நாங்க இரண்டு பேரும் அமெரிக்காவில் குடியேறினோம்.

புதிதாக ஒரு நாட்டில் குடியேறும்போது, அந்த நாட்டின் நடைமுறைகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததால், அமெரிக்காவில் குடியேறிய போது மிகவும் சிரமப்பட்டோம்.

எங்களை மாதிரி இங்கு வரும் தமிழர்கள் சிரமப்படுவதை தவிர்க்க, இந்த நாட்டில் எங்களுக்கு கிடைத்த, தெரிந்த அனுபவங்களை பகிர்ந்துக்கணும்னு, 2022-ல், யூடியூப் சேனலை துவங்கினோம்.

இதுக்காக மெனக்கெட்டு உழைக்கிறது என் கணவர் தான். சேனல் துவங்கிய இரண்டு மாசத்துக்குள் ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் கிடைச்சாங்க. வீடியோ எடுக்க மட்டும் அவ்வப்போது நான், 'சப்போர்ட்' பண்ணுவேன்.

நான் இல்லாதப்போ, 'ஸ்டாண்டு செட்' பண்ணி, இவரே வீடியோ எடுத்துப்பார். மற்ற எல்லா, 'டெக்னிக்கல்' வேலைகளையும் என் கணவரே பார்த்துக் கொள்வார். -

ராஜேஷ்: அமெரிக்காவில் அரசு மருத்துவமனைகள் கிடையாது. முழுக்கவே தனியார் வசமிருக்கிற மருத்துவம், தரமானதாகவும், நவீன வசதிகளுடனும் கிடைக்கிறது. ஆனால், சாதாரண காய்ச்சல், தலைவலினு போனால் கூட நிறைய செலவாகும். மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லை என்றால், பணத்தை விரயம் பண்ணணும்.

அமெரிக்காவில், 80 சதவீதம் குழந்தைகள், அரசு பள்ளிகளில் தான் படிக்கின்றனர்; அதற்கான செலவை அரசாங்கமே ஏற்கிறது. ஆனால், உயர்கல்வி முழுக்கவும் தனியார் வசம் இருப்பதால், கல்லுாரி படிப்புக்கான செலவு, சாமானியர்களை மிரள வைக்கும்.

நிறைய குழந்தைகள் பள்ளி படிப்புடன் படிப்பை நிறுத்திடுவாங்க. அதனால் தான், இந்தியாவிலிருந்து நிறைய பட்டதாரிகள் வேலைக்காக அமெரிக்காவுக்கு வருகின்றனர்.

அமெரிக்காவில் குடியேறுவதும், கணவன் -- மனைவிக்கு ஒரே நேரத்தில், 'வொர்க்கிங் விசா' கிடைக்கிறதும், தொடர்ந்து பல ஆண்டுகள் சிக்கல் இல்லாமல் அமெரிக்காவில் வேலை செய்யறதும் வெளிநாட்டவர் எல்லாருக்கும் சுமுகமாக நடந்து விடாது.

விசா கேன்சலாகிட்டா, 60 நாள்களுக்குள்ளாற இந்த நாட்டை விட்டு வெளியேறிடணும். அதனால், 'கிரீன் கார்டு' வாங்கிட்டா, விசாவைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த நாட்டில் குடியேறிய இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் நாட்டினருக்கு, பல ஆண்டுகள் வரை இங்கு வேலை செய்தால் தான் கிரீன் கார்டு கிடைக்கும்.

அதுபோல, எங்களுக்கு கிரீன் கார்டு கிடைக்க இன்னும் பல ஆண்டுகளாகும்!






      Dinamalar
      Follow us