/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எனக்குள் இருக்கிற சந்திரமுகியும் வெளியே வந்துடும்!
/
எனக்குள் இருக்கிற சந்திரமுகியும் வெளியே வந்துடும்!
எனக்குள் இருக்கிற சந்திரமுகியும் வெளியே வந்துடும்!
எனக்குள் இருக்கிற சந்திரமுகியும் வெளியே வந்துடும்!
PUBLISHED ON : ஆக 04, 2024 12:00 AM

பிரபல நடிகையும், இயக்குனர் பாக்யராஜின் மனைவியுமான பூர்ணிமா பாக்யராஜ்:
--காலேஜில், 'பேஷன் டிசைனிங்' படிக்க ஆசைப்பட்டேன். அப்போது அந்தப் படிப்பு பிரபலமாகாததால், ரிஸ்க் எடுக்க பயந்து பி.காம்., படித்தேன். சினிமாவுக்கு வந்ததும் பேஷன் ஆர்வம் விரிவடைந்தது.
நான் கதாநாயகியாக நடித்த படங்களில், எனக்கான ஆடைகளை நானே தான் செலக்ட் செய் தேன். திருமணத்திற்கு பின், கணவர் இயக்கிய படங்களுக்கு காஸ்டியூம் டிசைனராக வேலை செய்தேன்.
ராசுக்குட்டி படத்துக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புடவையை தயாரித்தோம். அப்போது, அவ்ளோ விலையுள்ள புடவை என்பது அரிதான விஷயம்.
குழந்தைகள் பிறந்ததும், பக்கா ஹோம் மேக்கராக மாறினேன். குடும்ப வாழ்க்கையில் எந்த குறையும் இல்லை. ஆனால், ஏதோ ஒரு வெறுமையை உணர்ந்தேன். 'நீ பழையபடியே பிசியா இரு.அப்ப தான் சந்தோஷமா இருப்பாய்' என, கணவர் கூறினார்.
அதனால் மீண்டும் பேஷன் டிசைனராகி, 'பொட்டிக்' ஆரம்பித்தேன். நடிப்பிலும் ரீ - என்ட்ரி கொடுத்தேன். எல்லா விஷயத்திலும் நான் நியூட்ரலா தான் இருப்பேன்.
ஆனால், என் பேஷன் ஆர்வம் குறித்து கேட்டால் எனக்குள்ள இருக்கிற சந்திரமுகியும் வெளியே வந்து விடும்.எங்கள் வீட்டில் டிரஸ் வடிவமைப்புக்கு என தயாரிப்புக் கூடம் நடத்துகிறேன். டிசைனிங், எம்ப்ராய்டரி வேலைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதனால், வாடிக்கையாளர்களுடன் உட்கார்ந்து, அவர்கள் எதிர்பார்ப்புகளை கேட்டு தெரிந்து, பின் தான் டிரஸ் தயாரிப்பேன்.
கடந்த 22 ஆண்டு களாக நடுத்தர வகுப்பு மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில், இந்த தொழிலை பண்ணிட்டு இருக்கேன்.
எந்த டிரஸ் ஆனாலும் பராமரிப்பதில் தான் அதன் ஆயுட்காலம் உள்ளது. திரெட் ஒர்க் மட்டும் செய்திருந்தால், அந்த டிரஸ்சை தாராளமாக கையால் துவைக்கலாம். இதுவே ஜர்தோசி ஒர்க் செய்திருந்தால், டிரை வாஷ் செய்வது தான் சரியானது; அதை துவைக்கக் கூடாது.
ஆரம்பத்தில், உணவு விஷயத்தில் சரிவர கவனம் செலுத்தாமல் வெயிட் கூடி சிரமப்பட்டேன்.
அதனால், இப்போது ஹெல்த்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, கூடுமான வரை ஹெல்த்தியான உணவு வகைகளை எடுத்துக் கொள்கிறேன். உடற்பயிற்சியும் செய்வதுண்டு.
************************
வரும் 2030க்குள் 25 கோடி ரூபாயை எட்ட வேண்டும்!
மதுரையில் ஐ.டி., கம்பெனி நடத்தி வரும் சுரேஷ்: உடுமலைப்பேட்டைக்கு பக்கத்தில் உள்ள பணத்தம்பட்டி கிராமத்தில் பிறந்தேன். விவசாய குடும்பம். படித்தால் உடனே வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பி.காம்., படித்தேன். அப்போதே, ஐ.சி.டபிள்யூ.ஏ.,வும் முடித்தேன். ஆனால், கம்ப்யூட்டர் மீது மிகப் பெரிய ஆர்வம். எனவே, எம்.சி.ஏ., படித்தேன். ஒரு பக்கம் காஸ்ட் அக்கவுண்டிங்; இன்னொரு பக்கம் கம்ப்யூட்டர் சயின்ஸ் என படித்தது மிகப் பெரிய பலம்.
கடந்த, 2000வது ஆண்டு முதலே, 'ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேரில்' பங்களிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக, அப்பாச்சி சாப்ட்வேர் அறக்கட்டளையுடனும், மேலும் பல்வேறு ஓப்பன் சோர்ஸ் புராஜெக்ட்களிலும் பங்களிப்பு செய்தேன். இது, மென்பொருள் கட்டமைப்பு மற்றும் உருவாக்கம் மற்றும் அதன் எண்ணற்ற பயன்பாடுகள் குறித்து, நான் அறிந்து கொள்வதற்கான அடித்தளத்தை அமைத்து தந்தது.
படித்து முடித்ததும் அக்கவுன்டிங் சாப்ட்வேர் உருவாக்கி தரும் வேலைக்கு சேர்ந்தேன். அந்த வேலையில் இரண்டு ஆண்டுகள் இருந்தேன். பின், கோவை இருகூரில் சொந்தமாக ஒரு ஐ.டி., நிறுவனத்தை துவங்கினேன். 160 சதுர அடியில் மூன்று கம்ப்யூட்டர்களுடன் ஆரம்பித்தேன்.
பெரிய அளவில் முதலீடு இல்லை. ஆனால், உடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் தர வேண்டிய கட்டாயம் இருந்ததால், சாப்ட்வேருக்கான ஆர்டர் கேட்டு, பல நிறுவனங்களை அணுகினேன். 19 வகையான சாப்ட்வேர்களை நாங்கள் தயார் செய்து
இருந்தோம்.
அவற்றில், தங்க நகை தயாரிக்கும் ஜுவல்லரிகளுக்கு சாப்ட்வேர் எழுதுவது மிகவும் சவாலானதாக இருந்தது. அந்த வேலை தான் என்னை மிகவும் கவர்ந்தது. கஷ்டப்பட்டு உருவாக்கி தந்ததில், ஜுவல்லரி நிறுவனங்களில் பெரிய பிரச்னை தீர்ந்த மாதிரி இருந்தது. 2013ல் தங்கமயில் ஜுவல்லரி நிறுவனத்துக்கு ஜுவல்லரி ரீடெயில் இ.ஆர்.பி.,யை வடிவமைத்து தந்தோம். எங்கள் நிறுவனம் இன்று 70 நகை நிறுவனங்களுக்கு சேவை தருகிறது.
கோவை, மதுரை, சென்னை என மூன்று நகரங்களில் அலுவலகம் நடத்துவதுடன், 35 பேருக்கும் அதிகமான கம்ப்யூட்டர் இன்ஜினியர்களுக்கு வேலையும் தந்திருக்கிறேன்.தற்போது ஆண்டுக்கு 4 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்கிறது, என் நிறுவனம். இந்த நிதியாண்டில், 5 கோடி ரூபாயை எட்டி விடுவேன். 2030க்குள் 25 கோடியை எட்ட வேண்டும். இதுவரை கஷ்டப்பட்டு புராடக்டுகளை உருவாக்கி விட்டேன். இனி சரியாக மார்க்கெட்டிங் செய்து, வருமானத்தை பெருக்க வேண்டும். தெளிவாக திட்டமிட்டால் வெற்றி நிச்சயம்!
************************