sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

ஐஸ்கிரீம் அகாடமி ஆரம்பிக்கிற பிளானும் இருக்கு!

/

ஐஸ்கிரீம் அகாடமி ஆரம்பிக்கிற பிளானும் இருக்கு!

ஐஸ்கிரீம் அகாடமி ஆரம்பிக்கிற பிளானும் இருக்கு!

ஐஸ்கிரீம் அகாடமி ஆரம்பிக்கிற பிளானும் இருக்கு!


PUBLISHED ON : ஆக 18, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 18, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐஸ்கிரீமில் விதவிதமான ப்ளேவர்களை அறிமுகப்படுத்தியுள்ள, 'ஸ்ட்ரிக்ட்லி டெஸர்ட்ஸ்' என்ற பெயரில் ஐஸ்கிரீம் சென்டர் நடத்தி வரும், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த, சினேகிதி ஜம்புலிங்கம்:

சிங்கப்பூரில், இன்டர்நேஷனல் பிசினஸ் மார்க்கெட்டிங் முடித்திருந்த நேரம்; என் காதல் திருமணம். அவரை, 'இம்ப்ரெஸ்' பண்றதுக்காகவே, 'பேக்கிங்' பண்ண ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் அதை புரொபஷனா பண்ணலாமே என்ற ஐடியா வந்தது.

அதனால் முழு நேர பேக்கிங் பிசினசில் இறங்கினேன். பண்றதை பெருசா பண்ணலாம்னு பெரிய பெரிய மிஷின்கள் வாங்கி, நிறைய முதலீடு போட்டு ஆரம்பித்தோம். ஆனால், கொரோனா சூழலில் தாக்கு பிடிக்க முடியாமல், நிறுத்தி விட்டோம்.

அடுத்து, ஐஸ்கிரீம் பிசினஸ் பண்ணலாம் என நினைத்தோம். இந்த முறை பெரிய முதலீடு போடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். வீட்டில் இருந்த சின்ன ரூமை கொடுத்து, 'இதில் உன்னால் பிசினஸ் பண்ண முடிந்தால் பண்ணிக்கோ'ன்னு சொன்னார் மாமனார். தைரியமாக பண்ணுன்னு சப்போர்ட் பண்ணார் கணவர்.

வெறும் 30,000 ரூபாய் முதலீட்டில் ஐஸ்கிரீம் பிசினசை ஆரம்பித்தேன். வழக்கமான ஐஸ்கிரீம்களாக அல்லாமல் அவற்றை வேறுபடுத்தி காட்டுவதில் அதீத அக்கறை காட்டி, அதில் வெற்றியும் பெற்றேன். பன் - பட்டர் ஐஸ்கிரீம், கமர்கட் ஐஸ்கிரீம், ரோஸ் மில்க் ஐஸ்கிரீம் உள்ளிட்ட வித்தியாசமான பிளேவர்களில் தயாரிக்கிறேன்.

பட்டர் ஜாமையோ, கமர்கட்டையோ, ரோஸ் மில்க்கையோ அரைத்து ஐஸ்கிரீமா மாற்றிக் கொடுப்போம் என்று நினைக்காதீங்க. அந்தந்த உணவுக்கு என ஒரு சுவை இருக்கும்.

அந்த சுவையை கொடுக்குற பொருள் இருக்கும். உதாரணத்துக்கு கமர்கட்டில் தேங்காய், வெல்லம், எள்... இப்படி பல பொருட்களை சேர்ப்பாங்க.

அந்த பொருட்களை, ஐஸ்கிரீம் தயாரிப்பில் வேற வேற ஸ்டேஜ்ல சேர்த்து பைனல் புராடக்டா கொண்டு வருவோம். அதை சாப்பிடும்போது அந்த அயிட்டத்தை டேஸ்ட் பண்ற பீலிங் உங்களுக்கு வரும்.

குறைந்த முதலீட்டில், மதுரையில் அசெம்பிள் பண்ணி கொடுத்த சாதாரண மிஷினில் தான் நான்கு ஆண்டுகளாக ஐஸ்கிரீம் தயார் பண்ணிட்டிருக்கேன். இந்த பிசினஸ் பண்ண நினைக்கறவங்க, பெரிய முதலீடு இல்லாமல், ரொம்ப சிம்பிளா பண்றதுக்கு ஏற்றபடி ஒரு கோர்ஸ் டிசைன் பண்ணி சொல்லிக் கொடுக்கிறேன்.

இப்போ, ஸ்விக்கியில் சென்னையில் ஏழு லொகேஷன்களுக்கு சப்ளை பண்றோம். சென்னையை தாண்டியும் பிசினசை கொண்டு போகணும். இந்த தொழிலை எப்படி பண்ணணும் என தெரியாதவர்களுக்காக, ஐஸ்கிரீம் அகாடமி ஆரம்பிக்கிற பிளானும் இருக்கு.

தொடர்புக்கு:

99404 38262.

***************************



மணல் மணலான நெய் இப்படித்தான்தயாரிக்கிறோம்!


நெய், வெண்ணெய், மில்க் கிரீம் என ஆண்டுக்கு 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து வரும், 'பொதினி டெய்ரி புராடக்ட்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும், திண்டுக்கல் மாவட்டம், அம்பிளிக்கை கிராமத்தை சேர்ந்த ராஜசுதா:

என் தாத்தா தான், பால் பொருட்கள் வியாபாரத்துக்கு முதலில் வந்தார். தாத்தாவை தொடர்ந்து அப்பா, பெரியப்பா, சித்தப்பாவும் இதே தொழிலுக்கு கூட்டாக வந்து, மில்க் கிரீம், தயிர் தயாரித்து பக்கத்து மாநிலங்களுக்கு அனுப்பினாங்க. ஒரு கட்டத்தில் தனித்தனியே பிரிந்து பிசினஸ் நடத்தினாங்க. நான் பி.இ., முடித்து விட்டு, ஐ.டி., கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தேன். குடும்பம், குழந்தையை கவனிக்க என்று என் வேலையில், 'பிரேக்' எடுத்தேன். அப்போது, உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பிசினசை நிறுத்தி விடலாமா என்று அப்பா யோசித்தார். குடும்பத் தொழில் என் தலைமுறையிலும் தொடர வேண்டும் என ஆசைப்பட்டு, 2019 முதல் நான் எடுத்து நடத்த ஆரம்பித்தேன்.

தொழிலில் முன் அனுபவம் இல்லாததால், ஆரம்பத்தில் தடுமாற்றங்களை எதிர்கொண்டேன். பின், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தினேன். பால் பொருட்களில் நெய்க்கு கணிசமான வரவேற்பு இருப்பதால், இதை தயாரிக்க ஆரம்பித்தேன்; உற்பத்தியும், விற்பனையும் பல மடங்கு அதிகமானது. 100 கிலோ வெண்ணெயை காய்ச்சினால், 75 கிலோ நெய் கிடைக்கும். காய்ச்சிய நெய்யில் கசடுகள் பாத்திரத்தின் அடிப்பகுதியில் சேகரமாகும்.

இதனால், சூடாக இருக்கும் போதே நெய்யை பில்டர் மிஷினில் கொடுத்து வடிகட்டுவோம்.

சுத்தமான நெய்யை பாத்திரங்களில் நிரப்பி, மூடிய ஓட்டுக் கொட்டகை ரூமில் வைப்போம். அந்த ரூமில் தரையில் ஆற்றுமணல் நிரப்பி, அதன்மேல் தண்ணீரில் நனைக்கப்பட்ட சணல் சாக்குகளை வரிசையாக விரிச்சுப் போட்டிருப்போம்.அந்த சாக்குப் பைகளில் ஈரப்பதம் இருந்துட்டே இருக்கும். அதற்கு மேல் தான் நெய் நிரப்பப்பட்ட பாத்திரங்களை வைப்போம். இதனால், இயற்கையாகவே நெய் குருணையாக உருமாறும். இதைத்தான் மணல் மணலான நெய் என, கூறுவர். இதனால் நெய்யின் மணமும், சுவையும் நன்றாக இருக்கும். வெயில் காலத்தில் குருணை உருவாக நான்கு நாட்களும், குளிர் காலத்தில் ஒரே நாளிலும் குருணை உருவாகி விடும். தற்போது பசு நெய் ஒரு லிட்டர் 760 ரூபாய்க்கும், எருமை நெய் ஒரு லிட்டர் 880 ரூபாய்க்கும் விற்கிறோம். தொழிலை இன்னும் நல்லபடியா நடத்தணும். அடுத்து பனீர், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்க திட்டமிட்டு

இருக்கிறேன். தொடர்புக்கு: 99166 84477.






      Dinamalar
      Follow us