/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இலக்கியத்தில் சமரசமற்ற சமத்துவம் தான் எங்கள் நோக்கம்!
/
இலக்கியத்தில் சமரசமற்ற சமத்துவம் தான் எங்கள் நோக்கம்!
இலக்கியத்தில் சமரசமற்ற சமத்துவம் தான் எங்கள் நோக்கம்!
இலக்கியத்தில் சமரசமற்ற சமத்துவம் தான் எங்கள் நோக்கம்!
PUBLISHED ON : ஆக 03, 2024 12:00 AM

'பாக்கிடர்ம் டேல்ஸ்' என்ற பதிப்பகத்தின் உரிமையாளர் லட்சுமிபிரியா:
அம்மா ஸ்கூல் டீச்சர். பிராக்டிக்கலான வாழ்க்கைக்கு தேவையான நம்மை சுத்தி இருக்குற தடைகளை உடைக்குற மாதிரியான கல்வி முறை வேண்டும் என நினைத்தார்.
அதற்கு வாசிப்பு ஒரு பெரிய திறப்பாக இருக்கும் என, அவங்க நிறைய வாங்கியது புத்தகங்கள் தான். நாங்கள் மும்பை உள்ளிட்ட பல ஊர்களில் வசித்தோம். அதனால், அனைத்து வகையான புத்தகங்களையும் தேடித்தேடி பல மொழிகளில் படித்தேன்.
அத்துடன், ஆறாவது படிக்கும் போதே எழுதவும் ஆரம்பித்தேன். படிப்பு, வேலை என போயிட்டிருந்த போது, கொரோனாவில் ஒரு பிரேக் கிடைத்தது.
மறுபடியும் புத்தகத்தை தேடி வந்தேன். எளிய மக்களின் படைப்புகளை எல்லாரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்து, 2020ல் இப்பதிப்பகத்தை ஆரம்பித்தேன்.
ஹோம் மேக்கர் பெண்கள், குழந்தைகள், வயதானோர், திருநங்கையர் என அனைத்து தரப்பிலும் எழுத வைத்தோம். வயது வித்தியாசம் இல்லாமல், பல கதைகள் கிடைத்தன. இதுவரை 13 மொழிகளில், 700 புத்தகங்களுக்கும் மேல் எங்கள் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுள்ளோம். 6 வயதில் ஆரம்பித்து, 88 வயது வரை உள்ள பலரும் எழுதியிருக்காங்க; எழுதிட்டும் வர்றாங்க.
முக்கியமாக, எழுத்தில் ஆர்வம் இருக்குற அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்து அவங்களை எழுத துாண்டியிருக்கோம். அந்த வகையில் இந்தியாவில் பல மாநிலங்களிலும் 7,000 குழந்தைகளுக்கும் மேல் பயிற்சி கொடுத்து எழுத வைத்து, அதில் 600 பேரோட கதைகளை, அவங்களோட ஆசிரியர்களையே எடிட்டராக்கி திருத்த வைத்து வெளியிட்டுள்ளோம்.
பூடான், இந்தோனேஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளும் எங்கள் எழுத்து முயற்சிகளில் பங்கெடுத்திருக்காங்க. தொழில்நுட்பம் பழகாத படைப்பாளர்களிடம் படைப்புகளை வாங்குவது சவாலா இருந்தது. டைப் பண்ண முடியாதவங்களோட படைப்புகளை ஆடியோ மெசேஜா வாசித்து அனுப்பச் சொல்லி, அதை நாங்கள் டைப் செய்து கொள்கிறோம்.
மேலும் எங்கள் பதிப்பகத்தின் வாயிலாக மொழிபெயர்ப்பு, மற்றவர்களுக்காக எழுதும் கோஸ்ட் ரைட்டிங் உள்ளிட்ட பயிற்சிகளையும் வழங்குகிறேன்.
'கன்டன்ட்'டை பொறுத்தவரை ஜாதி, மதம், பாலினம் போன்றவற்றை ஆதிக்கமாக சித்தரிக்காத, பெண் அடிமைத்தனத்தை வளர்த்து விடாத, பெண்களை தியாகிகளாக ரொமான்டிசைஸ் பண்ணாத, திருநர் குறித்த விழிப்புணர்வை சொல்லும் எழுத்துக்களுக்கு தான் நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். இலக்கியத்தில் சமரசமற்ற சமத்துவம் தான் எங்கள் பதிப்பகத்தின் நோக்கம்.