/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ராதாகிருஷ்ணன், காமகோடிக்கு சிறந்த சமூக சேவை விருது
/
ராதாகிருஷ்ணன், காமகோடிக்கு சிறந்த சமூக சேவை விருது
ராதாகிருஷ்ணன், காமகோடிக்கு சிறந்த சமூக சேவை விருது
ராதாகிருஷ்ணன், காமகோடிக்கு சிறந்த சமூக சேவை விருது
PUBLISHED ON : டிச 09, 2025 05:15 AM
சென்னை: சிறந்த சமூக சேவைக்காக, தன்னார்வ அமைப்பின் சார்பில், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன், ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடிக்கு விருது வழங்கப்பட்டது.
சர்வதேச தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில், சேவை செம்மல் விருது - 2025 வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டி.யில் நேற்று நடந்தது.
இதில், கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு , சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக, 'மிகவும் சமூக பொறுப்புணர்வு கொண்ட கல்வி நிறுவனம்' என்ற விருது ஐ.ஐ.டி.க்கு வழங்கப்பட்டது.
இவ்விருதை, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணனிடம் இருந்து ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி பெற்றுக் கொண்டார்.
மேலும், 'மிகவும் சமூக பொறுப்புணர்வு கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ' விருது ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், சேவை செம்மல் விருது 28 பேருக்கு வழங்கப்பட்டன. பனை விதை நடவு திட்டத்தை ஒருங்கிணைத்த 10 தன்னார்வலர்களுக்கும், பனை கண்காணிப்பு உதவி செயலி உருவாக்கி திரி அறக்கட்டளைக்கும் விருது வழங்கப்பட்டது.

