தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ரகோத்தமர் ஆராதனை விழா

 ரகோத்தமர் ஆராதனை விழா

 ரகோத்தமர் ஆராதனை விழா


PUBLISHED ON : ஜன 02, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2026 05:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் மணம்பூண்டி ரகோத்தமர் சுவாமிகளின் 453வது ஆராதனை விழாவின் 3ம் நாளான நேற்று முன்தினம் அதிர்ஷ்டானம் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

பாவபோதகர் என போற்றப்பட்ட உத்திராதி மடத்தில் பீடாதிபதி ரகோத்தம சுவாமிகளின் மூல பிருந்தாவனம் திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டியில் அமைந்துள்ளது. இவரது 453வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு, விழாவின் 3ம் நாளான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பிருந்தாவனத்திற்கு நிர்மால்ய அபிஷேகம், 5:00 மணிக்கு மூலராமர் சிறப்பு பூஜை, 7:00 மணிக்கு பிருந்தாவனம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. மாலை 3:00 மணிக்கு மேல் உபன்யாசம், பஜனை சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

உத்திராதி மடத்தின் குருஜி சத்யார்த்தம தீர்த்த சுவாமிகளின் உத்தரவுப்படி, பிருந்தாவனத்தின் செயலாளர் ஆனந்த தீர்த்தாச்சாரிய சிம்மலகி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். நிகழ்ச்சியில், தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us