/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
60 பட்டதாரிகளை தொழில் முனைவோராக உருவாக்கியுள்ளோம்!
/
60 பட்டதாரிகளை தொழில் முனைவோராக உருவாக்கியுள்ளோம்!
60 பட்டதாரிகளை தொழில் முனைவோராக உருவாக்கியுள்ளோம்!
60 பட்டதாரிகளை தொழில் முனைவோராக உருவாக்கியுள்ளோம்!
PUBLISHED ON : மே 23, 2024 12:00 AM

கோவை, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குனர் முனைவர் சோமசுந்தரம்: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமாக, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம், 2007ல் துவங்கப்பட்டது. வேளாண்மை சார்ந்த தொழில் முனைவோரை உருவாக்குவது தான் இதன் முதன்மையான நோக்கம்.
மாணவர்கள், வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட விரும்பினால், அவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து தருகிறோம்.
நெல், கரும்பு, வாழை, மஞ்சள், எண்ணெய் வித்துக்கள், பயறு, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் உட்பட அனைத்து விதமான விளைபொருள்களையும் மதிப்பு கூட்டல் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன.
தேன் உற்பத்தி, காளான் வளர்ப்புக்கான பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகின்றன. சிறுதானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை மதிப்புக் கூட்டல் செய்ய, நவீன இயந்திரங்களை கொண்ட யூனிட்டுகளும் இங்குள்ளன.
விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் மிகக் குறைந்த கட்டணத்தில் இதை பயன்படுத்தி, மதிப்புக் கூட்டல் தொழிலில் ஈடுபடலாம்.
மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் நீண்டகாலத்துக்கு கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கான ரெக்கார்டு பேக்கேஜிங் யூனிட்டும் இங்குள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டுமே, 60 வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக உருவாக்கிஉள்ளோம்.
தகுதி வாய்ந்த தொழில் முனைவோருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கி கொடுக்கிறோம். வேளாண்மை மற்றும் உணவு சார்ந்த புதிய தொழில் சிந்தனை உள்ளவர்களுக்கு, முறையான பயிற்சிகள் கொடுத்து மத்திய, மாநில அரசுகளின் வாயிலாக, 5 முதல் -25 லட்சம் ரூபாய் வரை மானியம் பெற்று தருகிறோம்.
இந்த திட்டத்தின் வாயிலாக, 72 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. 8.10 கோடி ரூபாய் மானியம் சென்றுள்ளது.
வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., அக்ரி படித்த, ஜனபாரதி என்ற மாணவிக்கு இரண்டு மாதங்கள் பயிற்சி கொடுத்து, 5 லட்சம் ரூபாய் மானியம் வாங்கி கொடுத்தோம்.
இன்றைக்கு வீட்டின் ஒரு பகுதியில் பேக்கிங் யூனிட் போட்டுள்ளார். மில்லட் குக்கீஸ் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்து, மாதம், 50,000 - 75,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
இங்கு முனைவர் பட்டம் பெற்ற அனுசீலா என்பவர் தன் கணவருடன் இணைந்து, ஸ்டார்ட் அப் நிறுவனம் துவங்கியுள்ளார்.
அவருக்கு, 3 லட்சம் ரூபாய் மானியம் வாங்கி கொடுத்துள்ளோம். இதுபோல் பல உதாரணங்களை சொல்லி கொண்டே போகலாம்.
தொடர்புக்கு, 0422- 6611310, 94435 78172 / 75981 34908

