/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பெண்களால் வேலைத்திறன், உற்பத்தி சிறப்பாக இருந்தது!
/
பெண்களால் வேலைத்திறன், உற்பத்தி சிறப்பாக இருந்தது!
பெண்களால் வேலைத்திறன், உற்பத்தி சிறப்பாக இருந்தது!
பெண்களால் வேலைத்திறன், உற்பத்தி சிறப்பாக இருந்தது!
PUBLISHED ON : மார் 08, 2025 12:00 AM

பழைய ஐ.சி., இன்ஜின் ஸ்கூட்டர்களை, நவீன தொழில்நுட்பத்துடன் மின்சார வாகனமாக மாற்றித் தரும், 'ஏஆர்4 டெக்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும், கோவையைச் சேர்ந்த சிவசங்கரி:
பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு, தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். திருமணமானதும், உயர்கல்வி படிக்க விரும்பினேன். கணவர் தான் ஊக்கமளித்தார்.
படித்து முடித்து, மோட்டார் உற்பத்தி சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து, படிப்படியாக வளர்ந்து அந்நிறுவனத்தின் பார்ட்னர் ஆனேன். அப்போதுதான் ஒரு பைக்கை மின்சார வாகனமாக மாற்ற கோரிக்கை வந்தது; அதை வெற்றிகரமாக முடித்தோம்.
மின்சார வாகனங்களுக்கு பெரிய மார்க்கெட் இருக்கிறது என்பதை உணர்ந்து, 2021ல் இந்த தொழிலை ஆரம்பித்தேன். மோட்டார் சம்பந்தப்பட்ட உற்பத்தி தொழில், ஒரு பெண்ணாக எனக்கு சவாலாகத்தான் இருந்தது. இந்த வேலையை எளிதாக்கி, பெண்களை இதில் ஈடுபடுத்தலாம் என்று தோன்றியது.
திருமணமான பெண்கள் பலர் வேலை கேட்டு வர, அவர்களை பணிக்கு எடுத்தோம். எங்கள் ஆண் ஊழியர்கள் வாயிலாக அவர்களுக்கு பயிற்சி அளித்து, ஒரு ஷிப்ட் முழுக்க அவர்களைக் கொண்டே வெற்றிகரமாக நடத்தினோம்.
என் முடிவுக்கு கை மேல் பலன் கிடைத்தது. பெண்களால் வேலைத்திறன், உற்பத்தி சிறப்பாக இருந்தது. அலுவலகம் கட்டுமானப் பணிக்கு வந்த சித்தாள் பெண்களுக்கும் எங்களின் அணுகுமுறை பிடித்து வேலை கேட்க, அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளோம்.
தற்போது, எங்கள் பெண் ஊழியர்கள் ஐ.சி., இன்ஜினை எந்த உதவியும் இல்லாமல், மின்சார வாகனமாக நேர்த்தியுடன் மாற்றி விடுகின்றனர். இத்தனைக்கும் அவர்கள் யாருமே மெக்கானிக்கல் தொழில்நுட்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் இல்லை. எங்களிடம் பணிபுரியும் 35 ஊழியர்களில் பெண்களே அதிகம்.
இதுவரை 800க்கும் மேற்பட்ட வாகனங்களை மாற்றித் தந்துள்ளோம். கடந்தாண்டு 1.50 கோடி ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்தோம்.
எங்கள் ஊழியர்களுக்கு குடியிருப்பு கட்டி தருவதற்கும் திட்டமிட்டுள்ளோம். ஊழியர்கள் வளர்ந்தால் தான் நிறுவனமும் வளரும். மகிழ்ச்சியான சூழலில் பணி செய்யும் போதுதான் உற்பத்தி அதிகரிக்கும்.
எல்லா தொழில்களிலும் தொழில் முனைவோருக்கு பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். எனவே, பெண்கள் தொழிலில் இறங்கும்போது பெண்களாக இருப்பதாலேயே பிரச்னைகள் வருகிறது என்று நினைக்காமல், அவற்றை எப்படி தீர்ப்பது என்று சிந்தித்து செயல்பட்டு தடைக்கற்களைக் கடந்தால், அடுத்து சாதனை படிக்கட்டுகள் தான்!
தொடர்புக்கு:
99946 29111, 9150177211