/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வீட்டில் இருந்தபடியே லட்சங்களில் பிசினஸ் செய்ய முடியும்!
/
வீட்டில் இருந்தபடியே லட்சங்களில் பிசினஸ் செய்ய முடியும்!
வீட்டில் இருந்தபடியே லட்சங்களில் பிசினஸ் செய்ய முடியும்!
வீட்டில் இருந்தபடியே லட்சங்களில் பிசினஸ் செய்ய முடியும்!
PUBLISHED ON : ஜூலை 12, 2024 12:00 AM

இட்லி மாவு பிசினசில் சாதிக்கும், திருச்சி, உய்யங்கொண்டான் திருமலை, ரெங்கா நகரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி:
நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். இட்லி மாவு தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். துவக்கத்தில், அரிசி, உளுந்து அளவு, ஊற வைக்கிற நேரம் என்று எல்லாத்தையும் முதலில் கமர்ஷியலுக்குரிய வகையில், அதிக அளவில் அரைச்சு பார்த்து, சரியான பார்முலாவை கண்டுபிடிச்சேன்.
பின், தமிழக அரசோட திருச்சி மாவட்ட தொழில் மையத்தில், மானியத்துடன், 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, 20 லிட்டர் அரவைத்திறன் கொண்ட அரிசி, உளுந்து அரைக்கும் மிஷின்களில் தலா ஒன்றை கோவையில் வாங்கி, 'மணிஸ் புட்ஸ்' என்ற பெயரில் பிசினசை துவங்கினேன்.
இட்லி மாவு அரைத்து, பக்கத்து மளிகை கடையில் கொடுத்தபோது அவர்கள் தயங்கி, 'கஸ்டமர்ஸுக்கு திருப்தின்னா மட்டும் திரும்ப வர்றோம்'னு சொல்ல, குறைந்த எண்ணிக்கையில் மாவு பாக்கெட்களை போடச் சொன்னாங்க.
ஆனால், எங்கள் மாவுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்துட்டு, சீக்கிரமே அதிக எண்ணிக்கையில் மாவு பாக்கெட்கள் கேட்க துவங்கினர்.
ஒரே மாதத்தில் தொழில், 'பிக் அப்'ஆனது. உய்யங்கொண்டான் திருமலை, ஸ்ரீரங்கம், கே.கே.நகர் என, மூன்று பகுதிகளில், 15 மளிகை கடைகளில் ரெகுலர் கஸ்டமர்கள் கிடைச்சாங்க. எல்லாத்துக்கும் காரணம், தரம் தான்.
கமர்ஷியலுக்குன்னு நாங்க எந்த ரசாயனங்களும் சேர்ப்பதில்லை. அடுத்து, எங்கள் கவனத்தை ஹோட்டல் பக்கம் திருப்பினோம். இப்போது, 15 ஹோட்டல்களுக்கு ப்ரெஷ்ஷா மாவு கொடுக்கிறோம்.
மாலை 6:00 மணிக்கு ஹோட்டல்களுக்கு மாவு டெலிவரி கொடுத்துடுவோம். மிஞ்சுற மாவை பாக்கெட் போட்டு, எங்கள் கடையில் வெச்சே விற்கிறோம்.
அந்த வகையில் எங்களுக்கு 50 ரெகுலர் கஸ்டமர்கள் இருக்காங்க. தவிர, மூன்று கேட்டரிங் நிறுவனங்களுக்கும் முகூர்த்த நாட்களில் மாவு அரைத்து தருகிறோம்.
மொத்தத்தில், மாதத்திற்கு, 10,000 கிலோவுக்கு குறையாமல் மாவு விற்பனை செய்கிறோம். எங்கள் சக்திக்கு மீறிய ஆர்டர்கள் வந்தால், வேலை நேர்த்தியாக இல்லாமல் போகலாம் என்பதால் மறுத்து விடுவோம்.
இப்போது மூன்று ஊழியர்கள் இருக்காங்க. மாதம் 5 லட்சம் ரூபாய் வரை, 'டர்ன் ஓவர்' செய்கிறோம்.
தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக விரிவு படுத்தணும். அடுத்ததாக, 'ஹோம் மேடு' அப்பளம், வற்றல் செய்து விற்கும் ஐடியா இருக்கு. லட்சங்களை பெருக்குவோம்... லட்சியத்துடன்.
வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க என்ன வழி என்று பல பெண்கள் நினைப்பதுண்டு. நிறைய வழிகள் இருக்கு; நாம் தான் அதைக் கண்டடையணும். லட்சங்களில் கூட பிசினஸ் செய்யலாம்... அதுக்கு நானே சாட்சி.