/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
70 சதவீதம் விவசாயிகள் பயிரிடும் 'நவ்லாக்' தென்னங்கன்றுகள்!
/
70 சதவீதம் விவசாயிகள் பயிரிடும் 'நவ்லாக்' தென்னங்கன்றுகள்!
70 சதவீதம் விவசாயிகள் பயிரிடும் 'நவ்லாக்' தென்னங்கன்றுகள்!
70 சதவீதம் விவசாயிகள் பயிரிடும் 'நவ்லாக்' தென்னங்கன்றுகள்!
PUBLISHED ON : டிச 26, 2025 03:33 AM

ராணிப்பேட்டை மாவட்டம், 'நவ்லாக்' கிராமத்தில் இயங்கி வரும், அரசு தென்னை நாற்றுப்பண்ணையின் மேலாளர் வே.வேடியப்பன்:
உருது மொழியில், 'நவ்' என்றால் ஒன்பது எனவும், 'லாக்' என்றால் லட்சம் என்றும் பொருள். 17 ம் நுாற்றாண்டு துவக்கத்தில், தமிழகத்தின் வட மாவட்டங்களை ஆட்சி செய்த ஆற்காடு நவாப், நவ்லாக் கிராமத்தில், 9 லட்சம் தென்னங் கன்றுகளை நட்டு பராமரித்து வந்ததாக, வரலாற்று பதிவுகள் உள் ளன.
இதன் அடிப்படையிலேயே, இக்கிராமம், 'நவ்லாக்' என அழைக்கப்படுகிறது. கடந்த 1967ல், 217 ஏக்கர் பரப்பில், தென்னை நாற்று பண்ணையை, தமிழக அரசு உருவாக்கியது.
தற்போது தென்னங்கன்று உற்பத்திக்காக இங்கு, 4,000 தென்னை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஆண்டுக்கு குறைந்தபட்சம், 1 லட்சம் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம்.
தமிழகத்தில் தென்னை சாகுபடி பரப்பு, நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வருகிறது. தரமான தென்னங் கன்றுகளுக்கான தேவை ஆண்டு தோறும் அதிகரிக்கிறது.
இ தை நிறைவு செய்வதில், நவ்லாக் தென்னை நாற்று பண்ணை, மிகப் பெரிய அளவு உதவுகிறது.
கடந் த சில ஆண்டு களாக ஆந்திரா, மஹாராஷ்டிரா, கேரள மாநிலங்களை சேர்ந்தவர்களும் அதிக அளவில் இங்கிருந்து வாங்கி பயிரிட்டு வருகின்றனர். ஒரு தென்னங்கன்றின் விலை, 125 ரூபாய்.
இப்பண்ணையில் தற் போது, நான்கு ரகங்களில் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், 'நவ்லாக் நெட்டை - குட்டை, நவ்லாக் குட்டை - நெட்டை' எனும் வீரிய ஒட்டு ரகங்களை தான், தென்னை சாகுபடிக்கு புகழ் பெற்ற கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
பொள்ளாச்சி தேங்காய்க்கு தமிழக மக்களிடம் பரவலான வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தென்னை விவசாயிகளில் கிட்டத்தட்ட, 70 சதவீதத்தினர் நவ்லாக் தென்னங்கன்றுகளையே விரும்பி பயிரிட்டு வருகின்றனர். இதற்கு காரணம், இந்த ரகம் அதிக வறட்சியை தாங்கி வளரும் தன்மையும், நோய் எதிர்ப்பு தன்மையும் கொண்டது.
அனைத்து சீதோஷ்ண நிலையிலும் நன்றாக வளரும். ஆண்டுக்கு, ஒரு மரத்தில் இருந்து, 250 காய்கள் கிடைக்கும். மரத்தின் ஆயுட்காலம், 75 ஆண்டுகள். விதை காய்களுக்கு பயன்படுத்தியது போக, மீதமுள்ள காய்களில் இருந்து, எந்தவித ரசாயன கலப்பும் இல்லாமல் இயற்கை முறையில் தரமான தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து, 1 லிட்டர், 350 ரூபாய் என, விற்பனை செய்கிறோம்.
வணிக நிறுவனங்கள் விற்பனை செய்யும் தேங்காய் எண்ணெயை விட, நவ்லாக் தேங்காய் எண்ணெய் விலை குறைவு! தென்னங்கன்றுகள் மற்றும் எண்ணெய் விற்பனையில், ஓராண்டுக்கு 1 கோடியே, 6 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது.
தொடர்புக்கு:
99940 80710.

