/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கை கிடைத்திருக்கிறது!
/
நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கை கிடைத்திருக்கிறது!
நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கை கிடைத்திருக்கிறது!
நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கை கிடைத்திருக்கிறது!
PUBLISHED ON : டிச 26, 2024 12:00 AM

சண்டைக்கோழி வளர்ப்பில் நிறைவான லாபம் பார்த்து வரும், திருப்பத்துார் மாவட்டம், புதுப்பேட்டையைச் சேர்ந்த, 'ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்' பட்டதாரி குமரேசன்: என் அப்பா பல ஆண்டுகளாக, வீட்டிலேயே குறைவான எண்ணிக்கையில் சண்டைக் கோழிகள் வளர்த்து வந்தார்.
சிறு வயது முதலே, அவற்றை பார்த்து வளர்ந்ததால், எனக்கும் இயல்பாகவே சண்டைக்கோழி வளர்ப்பில் ஆர்வம் அதிகமானது.
ஓசூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் ஏரோநாட்டிக்கல் படித்தேன்; படிப்புக்கேற்ற வேலை தேடி சென்னை, மும்பை உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்றேன்; ஆனால், மனதிற்கு பிடித்த வேலை அமையவில்லை.
அத்துடன், சொந்த ஊரை பிரிந்து வேலை பார்ப்பது, மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதனால், உள்ளூரில் நண்பருக்கு சொந்தமான 3 ஏக்கர் மாந்தோப்பில் கோழிப் பண்ணை நடத்தி வருகிறேன்.
என் பண்ணையில் ஆண்டு முழுக்க நிரந்தரமாக 50 தாய் கோழிகளும், 10 சேவல்களும் இருக்கும். புல், பூண்டு, மூலிகை இலைகள், புழு, பூச்சிகள், கறையான்னு சாப்பிட்டு நல்லா ஊட்டமாக வளர்கின்றன.
சண்டை பயிற்சிக்கு சேவல் தேர்வு செய்யும்போது, முதல் கட்டமாக அதன் கண்களையும், அடுத்த கட்டமாக தலை, மூக்கு, கொண்டை, உடல் அமைப்பு, கால் வாகு இதையெல்லாம் உற்று கவனிப்பேன்; குறைபாடு இருந்தால் பயிற்சி அளிக்க மாட்டேன்.
சண்டைக்கு தயாராகிற சேவல்களுக்கு, கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன்பே, பலவிதமான சத்துக்கள் நிறைந்த பிரத்யேகமான தீவனம் தயாரித்து கொடுப்போம்.
மூன்று மாத வயதுஉள்ள ஒரு ஜோடியை 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். மாதத்திற்கு, 25 ஜோடிகள் விற்பனை வாயிலாக, 25,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
மேலும், 1 வயது கடந்த ஒரு தாய்க்கோழி 2,000 ரூபாய், சேவல் 4,000 ரூபாய்னு மாதத்துக்கு சராசரியாக, 20 தாய்க்கோழிகளும், குறைந்தபட்சம் 10 சேவல்களும் விற்பனையாகும்.
இந்த வகையில் பார்த்தால், கோழிகள் விற்பனை வாயிலாக, மாதத்திற்கு 1.05 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். தீவனம், பராமரிப்பு மற்றும் இதர செலவுகள் போக, மாதத்துக்கு 70,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.
உள்ளுரில் இருந்தபடியே இந்த அளவுக்கு சம்பாதிப்பது மிகப்பெரிய விஷயம். சண்டைக்கோழி வளர்ப்பு வாயிலாக நிம்மதியான, சுதந்திரமான வாழ்க்கை எனக்கு கிடைத்திருக்கிறது.
தொடர்புக்கு
85264 00111

