/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தேற்றாங்கொட்டை காபி குடித்ததும் உடல் சுறுசுறுப்பானது!
/
தேற்றாங்கொட்டை காபி குடித்ததும் உடல் சுறுசுறுப்பானது!
தேற்றாங்கொட்டை காபி குடித்ததும் உடல் சுறுசுறுப்பானது!
தேற்றாங்கொட்டை காபி குடித்ததும் உடல் சுறுசுறுப்பானது!
PUBLISHED ON : நவ 04, 2024 12:00 AM

காபியின் மணம் கமழும், உடலுக்கு நன்மை பயக்கும் தேற்றாங்கொட்டை பொடியை தயார் செய்து விற்பனை செய்து வரும், மயிலாடுதுறை மாவட்டம், சங்கரன்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த முகமது அன்வர்:
இதுதான் என் சொந்த ஊர். பிளஸ் 2 வரை படித்து விட்டு, சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில், 30 ஆண்டுகள் வேலை பார்த்தேன்.
செரிமானக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, ரத்தக் கொதிப்பு என, கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சிரமப்பட்டேன்.
எல்லா மருந்துகள் சாப்பிட்டும் பலன் இல்லை; பக்கவிளைவுகள் ஏற்பட்டதுதான் மிச்சம். அதன்பின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பி, பாரம்பரிய மருத்துவர்களை அணுகினேன்.
அவர்கள் கூறிய ஆலோசனையின்படி, 'மருந்தில்லா மருத்துவம்; உணவே மருந்து' முறையை கடைப்பிடித்தேன். அடுத்தடுத்த நாட்களில் உபாதைகள் குணமாக ஆரம்பித்தன.
பல நாட்களுக்கு தேவையான குடிநீரை எடுத்துச் செல்வதற்கான வசதிகள் பழங்காலத்தில் இல்லாததால், கடல் பயணம் செய்வோர், தேற்றாங்கொட்டையால் கடல் நீரை சுத்திகரித்து, அதில் உள்ள உப்புத்தன்மையை போக்கி, பயன்படுத்திஉள்ளனர்.
'தேற்றாங்கொட்டை தண்ணீரை மட்டுமல்ல, உடலில் உள்ள ரத்தத்தையும் சுத்திகரிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. 'சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய கோளாறுகளை குணப்படுத்தும்.
'இதில், புத்துணர்ச்சி பானம் தயார் செய்யலாம். காபி வாசனை இதிலும் கிடைக்கும்' என்று சித்த மருத்துவர்கள் கூறி, அதற்கான செய்முறைகளை சொல்லிக் கொடுத்தனர்.
இதன்படி, தேற்றாங்கொட்டையில் பொடி தயாரித்து காபி போட்டு, தொடர்ச்சியாக குடிக்க ஆரம்பித்தேன். உடல் சுறுசுறுப்பாக இருந்ததை அறிய முடிந்தது. அதன்பின், நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கும் விற்பனை செய்ய ஆரம்பித்தேன்; நல்ல வரவேற்பு கிடைத்தது.
குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தேற்றாங்கொட்டையை 1 கிலோ 800 ரூபாய் என வாங்குகிறேன்.
பின் தண்ணீரில் நன்கு கழுவி, சுத்தப்படுத்தி, நிழலில் உலர்த்தி, பாலில் ஊற வைத்து, அதை பதப்படுத்திய பின், சரியான பதத்தில் வறுத்தெடுத்து, மிஷின் வாயிலாக அரைத்து பொடியாக்கி விற்பனை செய்கிறேன்.
கிலோவுக்கு, 1,800 - 2,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் எல்லா செலவுகளும் போக, கிலோவுக்கு, 500 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு மாதத்திற்கு, 30 - 40 கிலோ விற்பனை செய்வதன் வாயிலாக, 15,000 முதல் 20,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.
தொடர்புக்கு:
63857 81410.