தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/பாரம்பரிய உடையில் நவீன உத்தியால் வளரும் தொழில்!

பாரம்பரிய உடையில் நவீன உத்தியால் வளரும் தொழில்!

பாரம்பரிய உடையில் நவீன உத்தியால் வளரும் தொழில்!


PUBLISHED ON : நவ 15, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 15, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மடிசார் பை ஸ்ரீ' என்ற பெயரில் மணப்பெண்களுக்கு மடிசார் கட்டிவிடும் நிபுணராக இருக்கும், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த, 40 வயதாகும் ஸ்ரீவித்யா கணேசன்:

இயந்திர பொறியியல் படிப்பு முடித்ததும், முன்னணி கார்ப்பரேட் நிறுவனத்தில் நிறைவான சம்பளத்தில் வேலை கிடைத்தது. திருமணமானதும் மகனை பார்த்துக் கொள்வதற்காக வேலையை ராஜினாமா செய்தேன். வாழ்க்கை அப்படியே சென்று கொண்டிருந்தது.

ஆனால் கணவரோ, 'உனக்கு பல விஷயங்கள் தெரிகிறது. உனக்கு பிடித்த ஏதாவது ஐடியாவை வைத்து தொழில் ஆரம்பி... உன்னை பிசியாகவே வைத்துக் கொள்' என்று சொல்லியபடியே இருந்தார். நானும் தொழில் பண்றேன்னு எதையோ செய்யாமல், ஒரு விஷயத்தை எடுத்தால், அதை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

என்னுடன் பிறந்த இரட்டை சகோதரி, 'நீ தான் சூப்பரா மடிசார் கட்டுவியே... அதையே உன் பிசினஸ் ஐடியாவாக யோசிக்கலாமே' என்று கேட்டாள்.

என் பாட்டி தினசரி ஒன்பது கஜ மடிசார் உடுத்துறவங்க. நானும் அவரிடம் தான் மடிசார் கட்ட கற்றுக் கொண்டேன். என் திருமணத்திற்கு எனக்கு நானே மடிசார் கட்டிக் கொண்டேன். மடிசாரிலேயே அய்யர், அய்யங்கார் முறை, தெலுங்கு மடிசார், மாதவா மடிசார், மஹாராஷ்டிரா பெண்களின் நவ்வாரி முறை, பேஷ்வாரி முறை, சவுராஷ்டிரியன் முறைன்னு எல்லாமே கட்டிவிடத் தெரியும். அனைத்தையும் முறைப்படி கற்று, ஆர்வத்துடன் களமிறங்கினேன்.

மணப்பெண்களுக்கு மடிசார் கட்டணும் எனில், முகூர்த்த நேரத்திற்கு முன் தான் புடவையே கொடுப்பாங்க. அதிகபட்சமாக, 10 நிமிடங்கள் தான் இருக்கும்; அதற்குள் கட்டி விட வேண்டும். ஆனால், மடிசார் கட்டிவிட எனக்கு மூன்று நிமிடங்கள் போதும். அதேபோல் நான் மடிசார் கட்டி விட்டால், எத்தனை மணி நேரம் ஆனாலும், அதில் சின்னதாக கூட அசவுகரியம் இருக்காது; எங்கும் அவிழாது.

புடவை உடுத்தும் விஷயத்தில் இந்த காலத்து மணப்பெண்களின் எதிர்பார்ப்பு, 200 சதவீதமாக இருக்கிறது. திருமணத்திற்கு மடிசார் உடுத்தணும் என்றாலும், மடிசாரில் ஒல்லியாக தெரியணும், கச்சிதமாக பொருந்தணும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இப்போது புடவை கட்டி விடுவதுடன், முடி அலங்காரமும் செய்கிறேன். இந்த வேலையில் நேரம், காலம் பார்க்க முடியாது. செல்லும் இடத்தில் சாப்பாடு, தண்ணீர் எல்லாம் எதிர்பார்க்க முடியாது. கழிப்பறை செல்வதற்கு கூட வாய்ப்பு இருக்காது; மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கும். அதையெல்லாம் தாண்டியும் இது என் தீவிர ஆசை!

தொடர்புக்கு: 'இன்ஸ்டாகிராம்' முகவரி: madisarbysri

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us