sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

ஓராண்டுக்கு ரூ.1.17 கோடிக்கு பிஸ்கட் விற்பனை!

/

ஓராண்டுக்கு ரூ.1.17 கோடிக்கு பிஸ்கட் விற்பனை!

ஓராண்டுக்கு ரூ.1.17 கோடிக்கு பிஸ்கட் விற்பனை!

ஓராண்டுக்கு ரூ.1.17 கோடிக்கு பிஸ்கட் விற்பனை!


PUBLISHED ON : செப் 28, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 28, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் இயங்கி வரும், காயத்ரி உழவர் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜமணிகண்டன்:

என் சொந்த ஊர், சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி. பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்து விட்டு, பேராசிரியராக பணியாற்ற துவங்கினேன். தொட்டியத்துக்கு தெற்கு பகுதியில் உள்ள கிராமங்களில் காவிரி நீர் கிடைப்பதால், விவசாயம் செழிப்பாக நடக்கிறது.

ஆனால், அங்குள்ள விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை. இந்த பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காண, நபார்டு வங்கி வழிகாட்டுதலோடு, 2020ம் ஆண்டு காயத்ரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை துவங்கினோம்.

பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 35 சதவீதம் மானியத்துடன், 27 லட்சம் ரூபாய் கடன் வாங்கினோம். இந்நிறுவனம் வாயிலாக, 22 கிராமங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் விளைவிக்கும் சிறுதானியங்களை கொள்முதல் செய்து, அவற்றிலிருந்து பிஸ்கட்கள் தயார் செய்து விற்பனை செய்தோம்.

இதன் வாயிலாக, நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் விவசாயிகள் இரு வகைகளில் பலனடைகின்றனர். ஒன்று, தங்களுடைய உற்பத்தி பொருட்களுக்கு இடைத்தரகர்கள் தலையீடு இன்றி நியாயமான விலை பெறுகின்றனர். மற்றொன்று, பிஸ்கட் விற்பனை லாபத்தில் பங்கு கிடைக்கிறது.

சிறுதானியங்கள் மற்றும் கருப்பு கவுனி அரிசியில் பல வகையான மூலிகை, கீரை வகைகள், வாழை பொருட்கள் கலந்து, 21 வகையான பிஸ்கட்களை தயார் செய்கிறோம். ஆரம்பத்தில் தொட்டியம் மற்றும் திருச்சியில் உள்ள, 80 கடைகளுக்கு வினியோகம் செய்தோம். பெரும்பாலான கடைகளில் எங்கள் பிஸ்கட்கள் நன்றாக விற்பனையாகின. ஆனாலும், கடைக்காரர்கள் பலரும் எங்களுக்கு தர வேண்டிய பணத்தை உரிய நேரத்தில் கொடுக்காமல் இழுத்தடித்தனர்.

இதனால், எங்கள் தயாரிப்புகள் பற்றி சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தினோம். புகழ்பெற்ற வணிக நிறுவனங்களின் பிஸ்கட்களுக்கு நிகரான தரத்துடன் இருப்பதால், மக்கள் விரும்பி வாங்கினர்.

மாதத்திற்கு, 3.5 டன் பிஸ்கட்கள் தயார் செய்து விற்பனை செய்யும் அளவிற்கு, எங்கள் நிறுவனம் வளர்ச்சி அடைந்திருக்கு. ஆண்டுக்கு, 1.17 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.

டிஜிட்டல் மீடியா வாயிலாக இதுவரை, 20,000 வாடிக்கையாளர்களிடம் எங்கள் பொருட்களை கொண்டு சேர்த்திருக்கோம். அதில், 12,000 பேர் நிரந்தர வாடிக்கையாளர்களாக நீடித்து, எங்கள் பிஸ்கட்களை தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.

தொடர்புக்கு:

94873 17410

காளான் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் லாபம்!


காளான் விற்பனையில் ஆண்டுக்கு, 25 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டும், கோவையைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரி சுப்ரமணியன்:

சொந்தமாக தொழில் துவங்கி, பெரிய தொழிலதிபர் ஆகணும் என்ற எண்ணம், சிறு வயதிலிருந்தே உருவாகி விட்டது. 30 ஆண்டுகளுக்கு முன், அதிக போட்டி இல்லாத தொழில் என்பதால், காளான் வளர்ப்பை தேர்ந்தெடுத்தேன்.

காளான் வளர்ப்புக்கான பயிற்சி, கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் அளிக்கப் படுகிறது.

அங்கு பயிற்சி பெற்று குத்தகைக்கு நிலம் வாங்கி, 40,000 ரூபாய் முதலீட்டில் காளான் வளர்ப்பு தொழில் துவங்கினேன்.

தொழிலை விரிவுபடுத்துவதற்காக, 2006ல் ராமசெட்டிப் பாளையத்தில், 1 ஏக்கர் தென்னந்தோப்பை விலைக்கு வாங்கி, ஆறு கொட்டகைகள் அமைத்து காளான் உற்பத்தியை அதிகப் படுத்தினேன்.

நம்ம ஊர் சீதோஷ்ண நிலைக்கு சிப்பி காளான் நன்றாக வளரும்; இதற்கு தேவையும் நிறைய இருக்கு. 28 அங்குலம் உயரம், 12 அங்குலம் விட்டம் கொண்ட பாலித்தீன் பையில் 3 - 4 அங்குலம் உயரத்துக்கு வைக்கோ லை பரப்பி, 40 - 50 கிராம் காளான் விதைகளை துாவுவோம்.

இ துபோல் ஒரே பையில் ஏழு அடுக்குகள் அமைத்து, பாலித்தீன் பையின் வாய் பகுதியை நன்றாக இறுக்கி கட்டுவோம். ஒரு பைக்கு 3 கிலோ வைக்கோலும், 300 கிராம் விதை களும் தேவைப்படும்.

வைக்கோல் படுக்கை தயார் செய்தபின், 12 இடங்களில் ஓட்டை போட்டு கொட்டகையில் தொங்க விடுவோம். இந்த மாதிரி தினமும், 100 - 120 படுக்கைகள் தொங்க விடுவோம். 22வது நாள் அறுவடை செய்தால் ஒரு படுக்கைக்கு, 500 - 600 கிராம் வீதம் காளான் கிடைக்கும்.

சுழற்சி முறையில் தினமும் சராசரியாக, 100 கிலோ காளான் அறுவ டை செய்து விற்பனை செய்கிறோம். 200 கிராம் காளான் நிரப்பப்பட்ட ஒரு பாக்ஸ், 35 - 40 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். 1 கிலோவுக்கு குறைந்தபட்சம், 175 ரூபாய் முதல் அதிகபட்சம், 200 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

எல்லா செலவுகளும் போக, ஒரு படுக்கைக்கு, 70 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு ஆண்டுக்கு, 36,000 படுக்கைகள் வாயிலாக, 25 லட்சத்து 20,000 ரூபாய் லாபம் கிடைக்கும். சிப்பி காளானுக்கு ஆண்டு முழுதும் ஒரே விலை கிடைக்கிறது.

ஏற்ற, இறக்கங்கள் ஏற்படு வது இல்லை. நல்ல ஈரப்பதத்தில் அறுவடை செய்து, நான்கு நாட்கள் வரை பிரிஜ்ஜில் வைத்து விற்பனை செய்யலாம். அப்படி செய்தால், உத்தரவாதமான லாபம் பார்க்க முடியும்.

தொடர்புக்கு:

93440 98058.






      Dinamalar
      Follow us