தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/'கேம்பஸ் இன்டர்வியூ' நடத்தும் அளவுக்கு தொழிலில் முன்னேற்றம்!'

'கேம்பஸ் இன்டர்வியூ' நடத்தும் அளவுக்கு தொழிலில் முன்னேற்றம்!'

'கேம்பஸ் இன்டர்வியூ' நடத்தும் அளவுக்கு தொழிலில் முன்னேற்றம்!'


PUBLISHED ON : அக் 18, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2026 01:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு துணிகளை சலவை செய்து தரும், 'தோபி ஜி' என்ற நிறுவனத்தை தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வரும், சென்னையைச் சேர்ந்த ரவி ரஞ்சன்:

நானும், என் நண்பர்களும் எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் பி.டெக்., படித்து வந்தோம். மறுநாள் காலை தேர்வு. ஆனால், அணிய வேண்டிய சீருடை துவைக்கப்படாமல் இருந்தது. இரவில் அதை துவைக்க கஷ்டப்பட்டோம்.

அதனால், உடல்நிலை சரியில்லாமல் போய், மறுநாள் தேர்வும் சரியாக எழுதவில்லை. அப்போது நண்பர்கள் பலரும், 'துணி துவைப்பது, 'அயர்ன்' செய்வது எல்லாம் எங்களுக்கும் பெரிய பிரச்னை' என்று கூறினர்.

'இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க முடியாதா?' என்ற கேள்விக்கு தீர்வு தேட ஆரம்பித்தது தான், 'ஸ்டார்ட் அப்' தொழிலாக மாறியது. நானும், என் மூன்று நண்பர்களும் சேர்ந்து, சமூக வலைதளங்களில் ஒன்றான, 'வாட்ஸாப் குரூப்' ஒன்றை ஆரம்பித்து, அதில் சலவை தொழில் குறித்து பேசினோம்.

அடுத்து, சலவை தொழிலாளர்களை தேடிச் சென்றோம்; நண்பர்களிடம் இருந்து துணிகளை வாங்கி, சலவை தொழிலாளர்களிடம் கொடுத்தோம்.

அதன்பின், 'குறிப்பிட்ட தொகையை செலுத்தினால், ஆண்டு முழுதும் சலவை செய்து கொள்ளலாம்' என்ற சந்தா திட்டத்தை கொண்டு வந்தோம். 'ஆர்டர்'கள் அதிகமானதால், எங்கள் செயல்பாடுகளை மாற்றியமைத்தோம்.

மாணவர்களிடம் துணிகளை சேகரித்து, சலவை செய்து, சரியான முறையில் மீண்டும் அவர்களிடம் சேர்க்கும் வகையில், ஆர்டரில் இருந்து வினியோகம் வரை, துணிகள் இப்போது எங்கு, என்ன நிலையில் இருக்கின்றன என்பதை வாடிக்கையாளர்களே பார்க்கும் வகையில், தொழில்நுட்பத்தை புகுத்தினோம்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து, சலவை தொழிலுக்கான நவீன பயிற்சிகளை துவக்கினோம். இதுவரை, 170க்கும் மேற்பட்ட பாரம்பரிய சலவை தொழிலாளிகளுக்கு பயிற்சி அளித்து, எங்களுடைய பணிச்சூழலுடன் இணைத்திருக்கிறோம்.

கடந்த 2024 - 25ம் ஆண்டில், 1,600 மாணவர்கள் எங்களின் பயனாளிகளாக இருந்தனர். இந்த கல்வியாண்டில், 10 ஆயிரம் மாணவர்களை இலக்காக வைத்து பயணித்து வருகிறோம். சென்னையில் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக, 'ஆன்லைன்' வாயிலாகவும் சலவை சேவையை வழங்கி வருகிறோம்.

நாங்கள் இந்த நிறுவனத்தை துவங்கியபோது, 'படித்து முடித்து கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி, ஒரு நல்ல கம்பெனியில் வேலைக்கு போங்க' என்று பலரும் கூறினர். Image 1632392

ஆனால், இப்போது அதே கல்லுாரிகளுக்கு சென்று, எங்கள் நிறுவனத்திற்கு, 'கேம்பஸ் இன்டர்வியூ' நடத்தும் அளவுக்கு முன்னேறி இருக்கிறோம்; இது தான் எங்கள் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us