தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/‘பேரீச்சை சாகுபடியில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் லாபம்!’

‘பேரீச்சை சாகுபடியில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் லாபம்!’

‘பேரீச்சை சாகுபடியில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் லாபம்!’


PUBLISHED ON : அக் 09, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலைவன நாடுகளில் மட்டுமே விளையும் பேரீச்சையை, தமிழகத்திலும் சாகுபடி செய்து லாபம் ஈட்டும், ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் கிராமத்தைச் சேர்ந்த, 62 வயதாகும் செங்குட்டுவன்:

எங்கள் குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்கின்றனர். நான் எம்.ஏ., படித்து விட்டு, தமிழக அரசின் கூட்டுறவு துறையில் தணிக்கை அலுவலராக இருந்தேன். ஓய்வுக்கு பின், விவசாயத்தில் இறங்கி விட்டேன். 60 சென்ட் பரப்பில் பேரீச்சை சாகுபடி செய்துள்ளேன்; ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி செய்கிறோம். முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் தான்.

நான், 2019ல் வேலை விஷயமாக தர்மபுரிக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு தோட்டத்தில், பேரீச்சை மரங்கள் செழிப்புடன் வளர்ந்து, குலை குலையாக பழங்கள் காய்த்திருந்தன. அதை பார்த்து, எனக்கும் பேரீச்சை சாகுபடியில் ஈடுபடும் ஆசை வந்தது.

அந்த தோட்டத்தின் உரிமையாளரை சந்தித்து, ஒரு பேரீச்சை கன்று 4,500 ரூபாய் வீதம், 47 மரக்கன்றுகள் வாங்கி வந்து நடவு செய்தேன். ஊடுபயிராக மஞ்சள் நடவு செய்திருந்ததால் நுண்ணுயிர்கள் பெருகி, பேரீச்சை கன்றுகள் வேகமாக வளர்ந்தன.

கடந்த 2023ம் ஆண்டு, 10 பேரீச்சை மரங்களில் இருந்து மட்டும் நல்ல திரட்சியான பழங்கள் உருவாகின; பழங்களும் நல்ல சுவையுடன் இருந்தன. ஆனாலும், மற்ற மரங்களில் காய்க்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தேன்.

எனக்கு பேரீச்சை கன்றுகள் கொடுத்தவரிடம் கேட்டதற்கு, ‘மரத்தின் பட்டையை செதில் செதிலாக வெட்டி விட்டால், காற்றில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சி இழுக்க வசதியாக இருக்கும்; அதன்பின் மரங்கள் நன்கு காய்க்கும்’ என்றார். அந்த மாதிரி செய்ததில், நல்ல பலன் கிடைத்தது.

கடந்த இரு ஆண்டுகளாக சீதோஷ்ண நிலை ஒத்துழைக்காததால், சரியான விளைச்சல் இல்லை. இந்த ஆண்டு, 850 கிலோ பேரீச்சை பழங்கள் கிடைத்தன. உலர் பேரீச்சை பழங்களை விடவும், பதப்படுத்தாமல் அப்படியே சாப்பிடக்கூடிய இந்த பழங்களில் சுவை கூடுதலாக இருக்கும்.

இது குறித்து, சமூக வலைதளங்களில் ஒன்றான, ‘இன்ஸ்டாகிராமில்’ விளம்பரம் செய்ததும், தமிழகம் முழுதும் இருந்து, ‘ஆர்டர்’கள் குவிந்தன. பழங்களை, 1 கிலோ 300 ரூபாய் என விற்பனை செய்ததன் வாயிலாக, 2.40 லட்சம் ரூபாய் வருமானமும், எல்லா செலவுகளும் போக, 2 லட்சம் ரூபாய் லாபமும் கிடைத்தது.

பேரீச்சை சாகுபடி செய்ய நினைத்தால், ஏக்கர் கணக்கில் நடவு செய்யாமல், முதலில் பரீட்சார்த்த முறையில் குறைந்த அளவில் நடவு செய்து பார்க்கணும்.

தொடர்புக்கு: 73971 17973.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us