தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/மசாலா தடவிய சிக்கனை பாக்கெட்டில் தருகிறோம்

மசாலா தடவிய சிக்கனை பாக்கெட்டில் தருகிறோம்

மசாலா தடவிய சிக்கனை பாக்கெட்டில் தருகிறோம்


PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மசாலா தடவிய சிக்கனை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும், திருச்சி மாவட்டம், திருவானைக்காவலைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவரது சகோதரி வாசுகி:

* வெங்கடேசன்: எங்க அப்பா, 1997ல், 'உதயம் சிக்கன் கடை' என்ற பெயரில், 'பிராய்லர் சிக்கன்' கடை ஆரம்பித்தார். ஆனால், அடுத்த ஆண்டே அவர் உடல்நிலை சரியின்றி இறந்து விட்டார். சிறுவர்களாக இருந்த அக்காவும், அண்ணனும் படித்தபடியே அம்மாவுக்கு உதவி செய்ய ஆரம்பித்தனர்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில், பலரும் சிக்கன் கடைகளை தேட ஆரம்பித்தனர். எங்கள் கடை குறித்து கேள்விப்பட்டு, திருவானைக்காவல் தாண்டி வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர். இதனால், எங்கள் தொழில் சிறிது சிறிதாக வளர்ந்தது.

* வாசுகி: ஞாயிற்றுக் கிழமைகளில் அசைவம் சமைக்க சிரமப்படும் பலரும், 'சிக்கனை உடனே எளிதாக சமைப்பதற்கு ஏற்ற மாதிரி தாருங்கள்' என்று கூறினர். அதனால், சிக்கனில் மசாலா தடவி, முறையாக 'பேக்கிங்' செய்து விற்க முடிவெடுத்தோம்.

ஆரம்பத்தில் வீட்டிலேயே தயார் செய்த மசாலாவை, சிக்கனில் கலந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சாப்பிடக் கொடுத்து, நிறை, குறைகளை கேட்டுக் கொண்டோம். கடந்தாண்டு, 'உதயம் புரோட்டீன்' என்ற பெயரில், மசாலா கலந்த சிக்கன் பிராண்டை அறிமுகப்படுத்தினோம்.

முதலில், 'தந்துாரி, சிக்கன் 65' மசாலா கலந்த சிக்கனை அறிமுகப்படுத்தினோம். கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு மாதிரி கொடுத்தோம். அதன் சுகாதாரம், ருசி அனைத்தும் வாடிக்கையாளர்களை கவர்ந்ததால், விரும்பி வாங்கினர்.

சமீபத்தில், மசாலா கலந்த சிக்கன் கிரேவி, ஹைதராபாத் கிரேவி, மதுரை ஸ்டைல் கிரேவி, 'ஜிம்' செல்வோருக்கான, 'டயட் சிக்கன்' உள்ளிட்ட வகைகளை சமூக வலைதளங்கள் வாயிலாக அறிமுகப்படுத்தினோம். 'ஆர்டர்'கள் நிறைய வர ஆரம்பித்தன.

ஒரு பாக்கெட் மசாலா சிக்கனை, 220 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். கோழிக்கறி விற்பனை, மசாலா சிக்கன் விற்பனை என்று மாதம், 25 டன் வரை விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்; 20 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.

அடுத்து, பிரியாணி மசாலா சிக்கனை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இன்னும் பெரிய அளவில் இவற்றை தயாரிக்க ஏதுவாக, தொழிற்சாலை அமைக்க தேவையான இடம் மற்றும் இயந்திரங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதேபோல், குழந்தைகள் விரும்பும் சிக்கன் பால், சிக்கன் சமோசா வகைகளை அறிமுகப்படுத்தும் யோசனையும் இருக்கிறது. நுாற்றுக்கணக்கானோருக்கு வேலை கொடுத்து, இந்திய அளவில் சிறந்த பிராண்டாக வளர வேண்டும் என்ற இலக்கை வைத்திருக்கிறோம்; கண்டிப்பாக சாதிப்போம்.

* இவர்களது மொபைல் போன் எண் இல்லாததால், வயது சேர்க்க முடியவில்லை பாஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us