தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 'குடும்ப வன்முறையா? நாங்கள் உதவ தயார்!'

'குடும்ப வன்முறையா? நாங்கள் உதவ தயார்!'

'குடும்ப வன்முறையா? நாங்கள் உதவ தயார்!'


PUBLISHED ON : ஜூன் 27, 2026 11:20 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 27, 2026 11:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புகலிடத்துடன், தன்னம்பிக்கையையும் மீட்டு தரும், 'இன்டர்நேஷனல் பவுண்டேஷன் பார் க்ரைம் பிரிவென்ஷன் அண்டு விக்டிம் கேர்' எனப்படும், பி.சி.வி.சி., அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான, சென்னையை சேர்ந்த பெண் பிரசன்னா கெட்டு மற்றும் அதன் செயல்பாட்டு இயக்குநர் பெண் சஜிதா ஸ்பெல்மேன்:

* பிரசன்னா கெட்டு:

ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலையில் மேற்படிப்பு படிக்க சென்றிருந்தேன். அங்கு, பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு மையங்கள் இருப்பதை பார்த்தேன். இதுபோல் இந்தியாவிலும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில், நண்பர்களுடன் இணைந்து 2001ல் இந்த அமைப்பை துவக்கினோம்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், உடல் ரீதியான வன்முறை மட்டுமே அதிகமாக இருந்தது. ஆனால் இன்று, சமூக வலைதளம் மற்றும் மொபைல்போன் என பல வடிவங்களில் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறையை வெளியில் சொல்வது அவமானம் என பலரும் மவுனம் காக்கின்றனர். இதில் படித்தவர், படிக்காதவர் என்ற விதிவிலக்கு இல்லை.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு, எங்களை தேடி யார் வந்தாலும், முதலில் காவல் நிலையத்திற்கும், குடும்பத்தாருக்கும் தகவல் கூறி, சம்பந்தப்பட்ட பெண் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை தெரிவிப்போம். அந்த பெண்ணுக்கு தேவையான சட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்வோம்.

குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முதல், அதிகபட்சம் ஓராண்டு வரை அவர் எங்கள் பாதுகாப்பில் இருக்கலாம். இடையில், குடும்பத்தாருடன் இணக்கம் ஏற்பட்டு, சிலர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி செல்வர். 'மீண்டும் பிரச்னை ஏற்பட்டால் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம்' என, நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைப்போம். இந்த 25 ஆண்டுகளில், 35,000 பேருக்கு எங்கள் அமைப்பு மறுவாழ்வு தந்துள்ளது.

* சஜிதா ஸ்பெல்மேன்:

குடும்ப வன்முறையில் தீ விபத்து, ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை கணிசமானது. எங்கள் அமைப்பு வாயிலாக, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென்றே, 'விடியல்' என்ற தனி பிரிவு துவங்கப்பட்டது. தேவைப்பட்டால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை கூட செய்து, முடிந்த வரை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி செல்ல உதவுகிறோம்.

மீண்டு வருவோருக்கு தன்னம்பிக்கை ஊட்டி, பொருளாதார பாதுகாப்பிற்கான வழிகளையும் செய்து தருகிறோம். வன்முறையால் பாதிக்கப்படும் எவரும் எங்களது கட்டணமில்லாத தொலைபேசி எண் வாயிலாக பாதுகாப்பும், உதவியும் கோரலாம்.

தொடர்புக்கு: 1800 102 7282.

***

*இன்று காலை விசாரித்து, இருவரின் வயதையும் சேர்த்து விடுகிறோம் பாஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us