sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/சொல்கிறார்கள்/ முயற்சி தான் வளர்ச்சியின் ஆரம்பம்!

 முயற்சி தான் வளர்ச்சியின் ஆரம்பம்!

 முயற்சி தான் வளர்ச்சியின் ஆரம்பம்!


PUBLISHED ON : ஏப் 15, 2026 12:44 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2026 12:44 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேயிலை துாளை மதிப்பு கூட்டி விற்பனை செய்து அசத்தும், நீலகிரி மாவட்டம், பேரகணி கிராமத்தைச் சேர்ந்த, 49 வயதாகும் விமலா மொரிசன்:

நான் ஒன்பதாம் வகுப்பு முடித்ததும், எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். கணவர், காய்கறி விவசாயம் செய்கிறார்.

என் மகன் கொடுத்த ஊக்கத்தில், தொலைதுார கல்வி வாயிலாக பிளஸ் 2 முடித்தேன். 36 வயதில், 'நீலகிரி என்சான்ட் டீ' என்ற பெயரில் தேயிலை விற்பனையை ஆரம்பித்தேன்.

அதில் கிடைத்த அனுபவம் வாயிலாக, 48 வயதில் தேநீர் தயாரிப்பு மற்றும் தேயிலை சார்ந்த பட்டய படிப்பு படித்தேன்.

தொழில் என்பது, என் மறுபிறவி மாதிரி தான். ஆரம்பத்தில் தோல்வி பயம் இருந்தது; விமர்சனங்கள் இருந்தன. ஆனால், எல்லாவற்றையும் தாண்டி ஜெயித்தே ஆக வேண்டும் என்ற உறுதியும் இருந்தது.

நான், மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருந்தேன். தரகர்கள் எங்களிடம் தேயிலையை மிக குறைந்த விலைக்கு வாங்கி, தொழிற்சாலைகளுக்கு அதிக விலைக்கு விற்று வந்தனர்.

அதனால், நாங்கள் அனைவரும் தேயிலை வாரியத்தில் உறுப்பினராக இணைந்தோம். அது தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை.

அதன்பின் தான், இயற்கை முறையில் விளைவிக் கும் தேயிலைக்கு நல்ல மதிப்பு இருப்பது தெரிந்தது. எங்களுக்கு இருந்த, 1.5 ஏக்கர் நிலத்தை படிப் படியாக இயற்கை விவசாய முறைக் கு மாற்றினேன்.

ஆரம்பத்தில் அது சார்ந்து போதுமான பயிற்சி இல்லாததால், நிறைய சிக்கல்களை சந்தித்தேன். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன்.

விவசாய கருவிகள் எதுவும் இல்லாமல், ஐந்து நாளைக்கு ஒரு முறை, கைகளால் தேயிலை இலைகளை பறிப்போம். 1.5 ஏக்கரில், 50 கிலோ இலைகள் கிடைக்கும். அதை காய வைத்து தயார் படுத்தினால், 10 கிலோ டீத்துாள் கிடைக்கும்.

வெறும் டீத்துாளாக விற்பனை செய்தால் லாபம் கிடைக்காது. அதனால், வெவ்வேறு ரகங்களில் மதிப்புக் கூட்டல் செய்யலாம் என்று தெரியவந்தது. அப்படி நான் தயாரித்த பல தேநீர் வகைகள், தேநீர் வாரியத்தின் விருதுகளை வாங்கின.

பெ ரிய பெரிய நிறுவனங்கள் செய்து வந்த மதிப்புக் கூட்டல் தொழிலை, இப்போது வீட்டிலேயே பல குடும்பத்தினரும் செய்ய ஆரம்பித்துள்ளோம். வெளிநாட்டு ஆர்டர்களு ம் வருகின்றன.

இப்போது ஒரு மாதத்திற்கு, 30 கிலோ வரை டீத்துாள் விற்பனை செய்கிறேன். தரகர்களுக்கு கிலோ, 500 ரூபாய்க்கு கொடுத்து வந்த நிலை மாறி, இப்போது கிலோ, 6,000 முதல் 8,000 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன்.

உண்மையை சொல்ல வேண்டும் எனில், இப்போது தான் எங்கள் உழைப்புக்கான கூலி கிடைக்கிறது. முயற்சிகள் தான் வளர்ச்சிக்கான ஆரம்பம்.

தொடர்புக்கு:

93455 52385.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us