/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இயற்கையோடு இணைந்து எல்லாரும் வாழ வேண்டும்!
/
இயற்கையோடு இணைந்து எல்லாரும் வாழ வேண்டும்!
PUBLISHED ON : நவ 07, 2025 12:00 AM

இயற்கை ஆர்வ லரும், புகைப்பட கலைஞருமான, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே காளியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் சண்முகானந்தம்:
பெங்களூரில், 'காமர்ஸ்' மற்றும் 'மார்க்கெட்டிங்' படித்தேன். பன்னாட்டு நிறுவனங்க ளின் பெரிய பிராண்டு களுக்கு விளம்பரம் செய்து வந்தாலும், பொள்ளாச்சியின் பண்பாட்டு பசுமை, கலாசார வண்ணங்கள், பாரம்பரிய பெருமை எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லை என்பதை உணர்ந்தேன்.
'பொள்ளாச்சி பாபிரஸ்' என்ற காலாண்டு இதழை துவங்கினேன். அதில், பொள்ளாச்சியின் கலாசார வண்ணங்கள், கலை வடிவங்கள், பாரம்பரிய திருவிழாக்கள், பழங்குடிகளின் வாழ்வை உலகிற்கு எடுத்துச் சொல்லும் விதமான கட்டுரைகளை வெளியிட்டேன்.
வி ஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் அதில் எழுதினர்.
காட்டில் நடக்கும் மனித - விலங்கு எதிர்கொள்ளல்களை எப்படி அணுக வேண்டும் என்பதை படமாக எடுக்க முடிவு செய்து, பல குறும்படங்களை எடுத்தேன்.
இந்த குறும்படங்களின் வெற்றி காரணமாக, தமிழக வனத்துறையுடன் இணைந்து, 'நீலகிரி தார் புராஜெக்ட்' எனும் வரையாடு திட்டம் அறிமுகம், யானைகள், புலிகள் கணக்கெடுப்பு என வேலை செய்தேன்.
வரையாடுகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களை, ஆனைமலை காடுகளில் பறக்க விட்டோம். அப்போது, சின்னதாக சில கரும்புள்ளிகள் பாறைகள் போல் தெரிந்தன.
அதை ட்ரோன் வாயிலாக பெரிதாக்கி பார்த்தபோது, மெல்லிய பனி படர்ந்த ஆனைமலை காட்டின் ஆழத்தில், இயற்கை ஓவியம் போல் யானைகளும், அவற்றின் குட்டிகளும் அமைதியாக உறங்கும் ஓர் அபூர்வ காட்சி தென்பட்டது.
பொதுவாக, யானைகள் கீழே படுத்து உறங்குவது அரிது. யானைகள், தங்களுக்கு சிறிதும் ஆபத்து இல்லை என்று நினைக்கும் இடத்தில் தான் இப்படி உறங்கும் என்பதால், அவற்றை தொந்தரவு செய்யாமல் காட்சிகளை பதிவு செய்தேன். அந்த தருணம் என் கேமராவில் பதிவானதற்கு, இயற்கைக்கு நன்றி.
'கிரியேட்டிவ் இந்தியா' என்ற தயாரிப்பு நிறுவனம் வாயிலாக, அரசு துறைகளுக்கு காணொளி செய்து விழிப்புணர்வு ஏற் படுத்துகிறேன்.
ஆப்ரிக்காவில் மட்டுமே இருக்கும், 'ஹார்ன்டு பில்' எனும் கொம்பு மூக்கு பறவை ஆனைமலை காட்டுக்குள் இருக்கிறது என பலருக்கும் தெரியாது.
இதை மக்களுக்கு சொல்வது, இயற்கையின் இதயத்தை காப்பாற்றுவது போ ன்ற பொ றுப்பாகும்.
பழங்குடி மக்களையும், வன விலங்குகளையும் இணைத்து, உலகிற்கு உணர்ச்சிகரமான கல்வி பொருளாக உருவாக்க வேண்டும். இசை, கதை, உணர்ச்சி என இயற்கையோடு இணைந்து, பசுமையாக எல்லாரும் வாழ வேண்டும்; அதுதான் என் லட்சியம்!

