தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 'நாட்டுக் கோழிகள் வளர்ப்பில் நல்ல லாபம்!'

 'நாட்டுக் கோழிகள் வளர்ப்பில் நல்ல லாபம்!'

 'நாட்டுக் கோழிகள் வளர்ப்பில் நல்ல லாபம்!'


PUBLISHED ON : செப் 21, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 21, 2026 01:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாட்டுக் கோழிகள் வளர்ப்பில், ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டும், துாத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்த, 40 வயதான டேவிட் ராஜராஜன்:

என் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். அதனால், எனக்கும் ஆசிரியராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. எம்.எஸ்சி., - பி.எட்., படித்து முடித்து, ஆசிரியர் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன்.

அந்த வேலை கிடைக்கும் வரை, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தபடியே, நாட்டுக் கோழிகள் வளர்ப்பில் ஈடுபடுகிறேன்.

கல்லுாரியில் படித்தபோது, 20 கோழிகளை வளர்த்து வந்தேன். கோழிகள் இடும் முட்டைகளை வீட்டுத் தேவைக்கு போக, மீதியை அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு விற்பனை செய்து விடுவேன். கோழிகளை கூண்டுகளில் அடைத்து வளர்க்கும் முறையை விட, மேய்ச்சல் முறையே சிறந்தது.

காலை எழுந்ததும் முதல் வேலையாக கோழிகளை மேய்ச்சலுக்கு திறந்து விட்டு, தீவனம், தண்ணீர் வைத்து, கொட்டகையை சுத்தம் செய்வேன்.

மாலை அலுவலகம் முடித்து வந்ததும், தீவனம் போட்டு, தண்ணீர் வைத்து கொட்டகையில் கோழிகளை அடைத்து விடுவேன்.

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுக் கோழிகள் வளர்ப்பு வாயிலாக, கணிசமான லாபம் ஈட்டி வருகிறேன். என் பண்ணையில் இப்போது 80 தாய்க்கோழிகள், 20 சேவல்கள், 300 கோழிக் குஞ்சுகள் இருக்கின்றன.

கோழிக் குஞ்சுகளுக்கு மட்டும் கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரத்யேகமான தீவனத்தை வாங்கி போடுகிறேன். இரண்டு மாதங்களுக்கு மேல் வளர்ந்த கோழிகளுக்கு நெல், தவிடு, அரிசி குருணை, மக்காச்சோள குருணை, கம்பு, கடலை பிண்ணாக்கு கலந்து, தண்ணீர் சேர்த்து பிசைந்து தருகிறேன்.

முட்டைகள், கறிக்கான கோழிகளை பெரும்பாலும் உள்ளூர் மக்கள் என் பண்ணைக்கே வந்து வாங்கி செல்வதால், விற்பனை குறித்த கவலை இல்லை.

கறிக்கான பெட்டைக் கோழிகளை உயிருடன், 1 கிலோ 550 ரூபாய்க்கும், சேவலை கிலோ 400 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன்.

மாதத்திற்கு 400 முட்டைகள், 30 பெட்டைக் கோழிகள், 12 சேவல்கள் விற்பனை வாயிலாக, 50 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் வருமானம் கிடைக்கிறது. இதில், எல்லா செலவுகளும் போக, 25 ஆயிரம் ரூபாய் லாபம் எனில், ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஒரு பக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் வேலை என ஓடுவதால், முழுதாக கோழிகள் வளர்ப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

அதனால் தான், தாய்க்கோழிகள் மற்றும் சேவல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல் இருக்கிறேன். முழு மூச்சாக பண்ணை வேலையில் இறங்கினால், இன்னும் பல மடங்கு லாபம் கிடைக்கும்.

தொடர்புக்கு

94880 70407

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us