/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஓவியம் வரைந்து விற்கும் மாணவி நான்!
/
ஓவியம் வரைந்து விற்கும் மாணவி நான்!
PUBLISHED ON : அக் 27, 2025 12:00 AM

திருவாரூர், திரு.வி.க., அரசு கலைக்கல்லுாரியின், காட்சி வழி தகவல் தொடர்பியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி பிரதீபா:
அப்பா ஓவிய ஆசிரியர். அதனால், கிறுக்கல்களுக்கு எங்கள் வீட்டில் தடை இருந்ததில்லை. சிறு வயதிலேயே படங்கள் வரைந்து, என் நண்பர்களுக்கு பரிசளிப்பேன். பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தபோது, அப்பா மரணமடைந்து விட்டார். அம்மா தான் என்னை படிக்க வைக்கிறார்.
கல்லுாரியில், 'விஸ்காம் கோர்ஸ்'சில் சேர்ந்தேன். அதற்கு பின், என்னுடைய ஓவிய ஆர்வம் இன்னும் அதிகமானது. தெரிந்தவர்கள், நண்பர்கள் என, அவர்கள் கேட்கும் ஓவியங்களை, இலவசமாக வரைந்து கொடுத்தேன்.
அதை வியாபாரமாக செய்வதற்கான, 'ஐடியா'வை என் அம்மா தான் கொடுத்தார். என்னை மெருகேற்றிக் கொள்ள சமூக வலைதளங்களை பார்த்து ஓவியங்களை வரைய கற்று க் கொண்டேன்.
அந்த பயிற்சியின் மூலம் தத்ரூபமான ஓவியக்களத்துக்கு என்னை தயார்படுத்திக் கொண்டேன். என் ஓவியங்களுக்கு பரவலான பாராட்டு கிடைத்த பின், அதை வியாபாரமாக மாற்றினேன்.
ஆரம்பத்தில் என் நண்பர்கள் தான், 'ஆர்டர்' கொடுத்தனர், பின், 'இன்ஸ்டாகிராம்' என்ற சமூக வலைதள பக்கத்தை துவக்கினேன். அதன் வாயிலாகவும் எனக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்தன ர்.
இப்போது மாதத்திற்கு, ஐந்து ஆர்டர்கள் வருகிறது. ஓவியத்தின் அளவை பொறுத்து கட்டணம் வாங்குகிறேன்.
என்னோட ஓவியக் கனவு நனவானதை தாண்டி, அதன் வாயிலாக என் அம்மாவுக்கு ஓரளவு என்னால் உதவ முடிகிறது என்கிற திருப்தி பெரியதாக தோன்றுகிறது. இதில் கிடைப்பது, வெறும் வருமானம் மட்டுமில்லை... என் தன்னம்பிக்கைக்கான ஆதாரம்.
நம்பிக்கையையும், முயற்சியையும் முதலீடாகக் கொண்டு களமிறங்குவோருக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்; முயற்சி இருந்தா ல் முடியாதது எதுவு ம் இல்லை!
தொடர்புக்கு:
@Pradee_arts2223

