/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
50 ஆண்டுகளாக அரிசி சாதமே எடுத்துக் கொள்வது கிடையாது!
/
50 ஆண்டுகளாக அரிசி சாதமே எடுத்துக் கொள்வது கிடையாது!
50 ஆண்டுகளாக அரிசி சாதமே எடுத்துக் கொள்வது கிடையாது!
50 ஆண்டுகளாக அரிசி சாதமே எடுத்துக் கொள்வது கிடையாது!
PUBLISHED ON : பிப் 07, 2025 12:00 AM

மறைந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மனைவியான நடிகை விஜயகுமாரி: என் முதல் படமே குலதெய்வம் தான். படம் வெளியாவதற்கு முன்னரே அம்மா இறந்து விட்டார். சென்னையில், அப்போது யாரையும் தெரியாது.
அதனால், எஸ்.எஸ்.ஆர்., தான் அம்மாவை அடக்கம் செய்யும் வரை உறுதுணையாக இருந்தார். அதுதான் அவர் மீது ஈடுபாடும், மரியாதையும் வர காரணமாக இருந்தது.
அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். என்னை குழந்தை போல் பார்த்துக் கொண்டார்.
கணவர் இறந்து, 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னை பொறுத்தவரை அவர் இப்போதும் உயிர்ப்போடு தான் இருக்கிறார். நான் பெரும்பாலான கதாபாத்திரங்களில் அழுதபடியே இருப்பேன்.
இல்லையெனில், இறந்து போவது போன்ற கதாபாத்திரங்கள் அமையும். உண்மையைச் சொல்ல வேண்டும் எனில், என் நிஜ கேரக்டரே அதுதான்.
அவரின் முதல் மனைவி பங்கஜமும், நானும், சென்னை தேனாம்பேட்டையில் ஒரே வீட்டில் இருந்திருக்கிறோம்.
அப்போது, அவங்க முன்னாடி நான் தரையில் தான் உட்கார்ந்திருப்பேன். 'என்ன விஜயா இப்படியெல்லாம் பண்ணுற' என, என் பாட்டி கேட்பாங்க.
'அவங்க வாழ்க்கையையே எனக்காக விட்டு கொடுத்திருக்காங்க. அவங்களுக்காக இதைக்கூட விட்டு கொடுக்கக் கூடாதா' என்று சொல்வேன். என் ஒரே மகன் ரவி, குடும்பத்துடன் வளசரவாக்கத்தில் இருக்கிறான். அம்மாவாக என் கடமையை இப்போது வரை செய்து வருகிறேன்.
எஸ்.எஸ்.ஆரின் முதல் மனைவியின் பிள்ளைகள் வீட்டில் நடைபெறும் விழாவிற்கு இப்போதும் செல்கிறேன். அவர்கள் என்னை சின்னம்மா என்று பாசமாக அழைப்பர்.
கடந்த 50 ஆண்டுகளாக, நான் அரிசி சாதமே எடுத்துக் கொள்வது கிடையாது. தினமும் காலை உணவு இரண்டு முட்டை.
தண்ணீரில் தனியா, சீரகம், மிளகு, ஜவ்வரிசி கலந்து முதல்நாளே சூடு செய்து பிளாஸ்க்கில் ஊற்றி வைத்துக் கொள்வேன்; அந்த தண்ணீரை தான் குடிப்பேன்.
மதிய உணவு, ஒரே ஒரு இட்லி, மீன் குழம்பு; காய்கறிகள் சாப்பிடுவேன். மாலை டீ, இரண்டு பிஸ்கட்; இரவில் ஒரு இட்லி இல்லையெனில் தோசை. இதுதான் என் டயட். நான் வயது ஆனதாகவே உணரவில்லை.
பல ஆண்டுகளாக தனியாக தான் வாழ்ந்து வருகிறேன். பிரச்னைகளை தாங்கி தாங்கி தேக்கு மரம் போன்று உட்கார்ந்துஇருக்கிறேன்.
சுனாமி, வெள்ளம் வந்தபோது கூட, வீட்டை விட்டு எங்கும் செல்லவில்லை. தனியாக எனக்கென வட்டம் போட்டு வாழ்ந்ததால் தான், இன்றும் தலைநிமிர்ந்து நிற்கிறேன்.

