sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 'சிறிய உணவகத்தை பல கிளைகளாக நிறுவ போகிறேன்!'

 'சிறிய உணவகத்தை பல கிளைகளாக நிறுவ போகிறேன்!'

 'சிறிய உணவகத்தை பல கிளைகளாக நிறுவ போகிறேன்!'


PUBLISHED ON : ஏப் 25, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2026 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவையில், 'பொம்மிஸ் பேக்கரி' நடத்தி வரும், சண்முக வாகினி: சிறு வயதில் டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. வளர்ந்த பின், உணவியல் ஆலோசகருக்கு படித்து, அதே துறையில் பணியாற்றினேன். கொரோனா ஊரடங்கு காலம் தான், தொழில் முனைவோராகும் எண்ணத்தை ஏற்படுத்தியது.

எனக்கு சிறு வயதில் இருந்தே இனிப்புகளும், பேக்கரி உணவுகளும் பிடிக்கும். அதிலும், கேக் மீது அலாதி ஆசை. கேக்கின் நிறம், சுவை, வடிவம், அது தரும் கொண்டாட்டமான உணர்வு எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு கட்டத்தில், கடைகளில் வாங்கும் கேக்குகள் மீதான என் அபிமானம், மாற ஆரம்பித்தது. இன்னும் சிறிது சுவையாக இருந்திருக்கலாம். இன்னும் வேறு நிறத்தில் இருந்திருக்கலாம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன்.

ஆனால், 'கடைகளில் தயாரிக்கிற கேக் அப்படித்தான் இருக்கும். உனக்கு பிடித்த மாதிரி ஒரு கேக்கை நீதான் தயாரித்துக் கொள்ள வேண்டும்' என்று, மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

எனக்குள் ஒலித்த அந்த குரல், என்னை தொழில்முனைவோராக மாற்றியது. கொரோனா ஊரடங்கு நேரத்தில், அதிக நேரம் வீட்டிலேயே இருந்தேன். அப்போது சமையல் மீது ஆர்வம் தோன்றியது. சமையல் செய்யும் போது, கேக் செய்து பழகலாமே என்று நினைத்தேன்.

ஆரம்பத்தில், எனக்கு பிடித்தபடி குட்டி குட்டியான கேக்குகள் செய்து பழகினேன். என்னுடன் படித்தவர்களின் பிறந்தநாளுக்கு கேக் செய்ய ஆரம்பித்தேன். அதில் கிடைத்த வருமானம், என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. வீட்டிலும், 'உனக்கு பிடித்ததை செய்' என்று கூறினர்.

அதனால், ஆசைக்காக செய்ததையே தொழிலாக மாற்றிக் கொண்டேன். நான் சிறு பெண்ணாக இருந்தபோது, என்னை செல்லமாக, 'பொம்மாயி' என்று வீட்டில் அழைப்பர். அந்த பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், 'பொம்மிஸ் பேக்கரி' என்று பெயர் வைத்தேன்.

இப்போது சமூக வலைதளங்களின் ஆதரவால், என் வியாபாரம் இன்னும் பிரபலமாகி விட்டது. வாடிக்கையாளர்களின் இடத்துக்கே சென்று, அவர்களின் விருப்பங்களை கேட்டு, அதற்கேற்பவும் கேக் செய்து கொடுக்கிறேன்; இது பலருக்கும் பிடித்திருந்தது.

'ஆர்டர்'கள் அதிகம் வர துவங்கிய பின், ஆர்.எஸ்.புரத்தில் கடை வைத்தேன். 'மைதா, வெள்ளை சர்க்கரை வேண்டாம்' என்று யாராவது சொன்னால், கோதுமை, நாட்டு சர்க்கரை பயன்படுத்தி, கேக் தயாரித்து கொடுக்கிறேன்.

இதுவரை, 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கேக் தயாரிக்கும் பயிற்சியை கற்றுக் கொடுத்துள்ளேன். என் பொம்மிஸ் பேக்கரியை, சிறிய உணவகமாக, பல கிளைகளுடன் துவங்க வேண்டும் என்ற இலக்கும் உள்ளது.

தொடர்புக்கு

93844 50272

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us