தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/‘எங்களுக்கு எல்லாம் தந்தது முறுக்கு கடை தொழில் தான்!’

‘எங்களுக்கு எல்லாம் தந்தது முறுக்கு கடை தொழில் தான்!’

‘எங்களுக்கு எல்லாம் தந்தது முறுக்கு கடை தொழில் தான்!’


PUBLISHED ON : நவ 06, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முறுக்கு கடை வாயிலாக, மாதம் 1,500 கிலோ பலகாரங்கள் விற்பனை செய்து வரும், தென்காசி மாவட்டம், சுரண்டையை சேர்ந்த 56 வயதாகும் குட்டியம்மாள்:

எனக்கு திருமணமாகி, கணவர் ஊரான திருநெல்வேலி மாவட்டம், பேட்டைக்கு குடிபெயர்ந்தேன். கணவர் இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வந்தார். எங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். வருமானம் குறைவு என்பதால், தினசரி செலவுகளுக்கே மிகவும் கஷ்டப்பட்டோம்.

அதனால் அப்பா, எங்களை சுரண்டைக்கே அழைத்து வந்தார். இங்கு என் அக்கா முறுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் தொழிலை கற்றுக்கொண்டேன். சிறிது நாட்கள் அவர்களுக்கு வேலை செய்து கொடுத்தேன். அதன்பின் கையில் 300 ரூபாய் சேர்ந்தது. அதை வைத்து நானே முறுக்குகள் செய்து விற்க ஆரம்பித்தேன்.

அதில் கிடைத்த லாபத்தில் கடை துவங்கினேன். கணவரும் உதவியாக இருந்தார். இருவரும் சேர்ந்து முறுக்கு, அச்சு முறுக்கு, லட்டு, அதிரசம் என, 10 வகையான பலகாரங்களை தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தோம். நிறைய கடைக்காரர்கள் வியாபாரத்திற்கு வாங்கி செல்வர். திருமண வீடுகள், பலகார, ‘ஆர்டர்’கள் என மொத்தமாக வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகமாயினர்.

இந்த ஊருக்கு வந்தபோது கையில் 10 ரூபாய் கிடையாது; நல்ல சாப்பாடும், படுத்து துாங்க நல்ல வீடும் கிடையாது. இப்போது அனைத்தும் இருக்கின்றன. அதற்கு காரணம் இந்த தொழில் தான். பிள்ளைகளை படிக்க வைத்து, திருமணமும் செய்து கொடுத்தேன். அவர்களும் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கின்றனர். இப்போது நானும், என் மகள்களும் சேர்ந்து தான் வியாபாரம் பார்க்கிறோம். உறவினர்கள் சிலரையும் வேலைக்கு அமர்த்தியுள்ளேன்.

இப்போது சுரண்டையிலேயே இரண்டு கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். இந்த தொழிலுக்கு கைப்பக்குவம் முக்கியம். கவனமாக இல்லையெனில் சுவை மாறி விடும்; சுவை மாறி விட்டால், வாடிக்கையாளர்கள் அடுத்த முறை வர மாட்டார்கள்.

ஒவ்வொரு பலகாரத்திற்கும் தனித்தனி எண்ணெய் தான் பயன்படுத்துகிறோம். அதிரசம் செய்ய பயன்படுத்திய எண்ணெயை முறுக்கு செய்ய பயன்படுத்த மாட்டோம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருந்தால் தான் சுவையையும், வாடிக்கையாளர்களையும் தக்கவைக்க முடியும்.

தீபாவளி சீசனில் ஆர்டர்கள் அதிகமாகும். அவர்கள் கேட்கும் அளவுக்கு பலகாரங்களை சரியான நேரத்தில் செய்து கொடுக்க வேண்டும். 30 ஆண்டுகளாக இந்த தொழிலில் தொடர்ந்து நீடிக்கிறோம் என்றால், வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை தான் காரணம்.

தொடர்புக்கு: 63835 45921.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us