தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/'ஆன்லைன்' விற்பனையிலும் அசத்துவோம்!

'ஆன்லைன்' விற்பனையிலும் அசத்துவோம்!

'ஆன்லைன்' விற்பனையிலும் அசத்துவோம்!


PUBLISHED ON : மார் 05, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 05, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குர்தாக்கள் தயாரித்து விற்பனை செய்து வரும், காஞ்சிபுரம் மாவட்டம், கொளப்பாக்கத்தைச் சேர்ந்த, 'ஓம் சக்தி' மகளிர் குழுவினர்:

கவிதா: கடந்த 2005ம் ஆண்டு துவங்கிய எங்களோட மகளிர் குழுவில், 2016 வரை பணம் கொடுக்கல் - வாங்கல் மட்டும் தான் நடந்துட்டு இருந்துச்சு. குழு உறுப்பினரான சீதா சொன்ன ஐடியாவுல தான், ஐவுளி வியாபாரத்தை துவங்கினோம்.

குழுவில் இருந்த பெண்களில் யாருக்கெல்லாம் முதலீடு செய்ய முடியும்னு கேட்டபோது யாரும் தயாராக இல்லை.

ஆனால், உழைக்க தயாரா இருந்தாங்க. அதனால், நானும் சீதாவும் தலா 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, ரெடிமேட் குர்தாக்கள் வாங்கி வியாபாரம் செய்தோம். வியாபாரம் நல்லா போனாலும், லாபம் குறைவாக இருந்தது.

அதனால், குர்தாக்களை உற்பத்தி செய்யலாம்னு ஐடியா கொடுத்தாங்க சீதா. அவங்க வழிகாட்டுதலில் தான் பிசினசை தொடர்ந்து செய்துட்டு இருக்கோம்.

'ஆன்லைன்' பிசினசில் இன்னும் அதிகமா லாபம் பார்க்க முடியும். ஆனால், அதில் சவால்களும் இருக்கு. இப்போது நாங்க ஒரு கலர், ஒரு டிசைனில் மெட்டீரியல் வாங்குறோம்னா, 200 மீட்டர் வாங்குவோம்.

அதில் கிட்டத்தட்ட, 75 குர்தாக்கள் தைக்க முடியும். ஸ்மால், மீடியம், லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜ், டபுள் எக்ஸ்ட்ரா லார்ஜ்னு ஒவ்வொரு அளவிலும், 12 குர்தாக்கள் தைப்போம்.

வெவ்வேறு இடங்களில் ஸ்டால் போட்டு விற்பனை செய்யும் போது, அது உடனே விற்றாலும், விற்கா விட்டாலும் சிக்கல் இல்லை. ஆனால், 'ஆன்லைன்' பிசினஸ் என வரும்போது, ஒரு பேட்டர்ன் பிடிச்சு போயிடுச்சுன்னா நிறைய மக்கள் அதே கலர், அதே டிசைன் கேட்பாங்க.

அடிக்கடி, 'அவுட் ஆப் ஸ்டாக்'னு சொன்னா, வாடிக்கையாளர்களை இழந்துடுவோம். ஒவ்வொரு பேட்டர்ன்லயும், 1,000 மீட்டர் துணியை வாங்கி வைத்தால் தான் இது சாத்தியம்.

அவ்வளவு முதலீடு செய்ய தொகையும் இல்லை, ஸ்டாக் வைக்க இப்போதைக்கு இடமும் இல்லை. அதனால், நேரில் சென்று தான் விற்பனை செய்துட்டு இருக்கோம். எதிர்காலத்தில், கண்டிப்பாக ஆன்லைன் விற்பனையிலும் அசத்துவோம்.

சீதா: 'பவர் லுாம்ஸ்' நிறைய இருக்கும் ஈரோடு, கோவை, ராஜஸ்தான், குஜராத் என நிறைய ஊர்களில் உள்ள துணி உற்பத்தியாளர்கள், எங்களுக்கு டிசைன்களை, 'வாட்ஸாப்' செய்வர். நாங்க மெட்டீரியலை தேர்வு செய்து கொடுத்துடுவோம்.

மெட்டீரியலை அவங்க கூரியர் செய்வர். மாசத்துக்கு 20 ஸ்டால்கள் வரை போடுறோம். கிட்டத்தட்ட, 500 குர்தாக்கள் விற்கிறோம். 3 லட்சம் ரூபாய் வரை, 'டர்ன் ஓவர்' செய்கிறோம். லாபத்தை, முதலீடு செய்த குழு உறுப்பினர்கள் பிரிச்சுப்போம். மத்தவங்களுக்கு அவங்க வேலை செய்றதுக்கான ஊதியத்தை கொடுத்துடுவோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us