/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எங்க வீட்டு நிகழ்ச்சியாக நினைத்து செய்வோம்!
/
எங்க வீட்டு நிகழ்ச்சியாக நினைத்து செய்வோம்!
PUBLISHED ON : மார் 06, 2024 12:00 AM

'ஈவென்ட் ஆர்ட்' நிறுவனத்தின் உரிமையாளர்களான சகோதரிகள் லட்சுமி, சரஸ்வதி:
சரஸ்வதி: 'ஈவென்ட் ஆர்ட்' நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்பது எங்களின் பெருமைமிகு அடையாளம்.
கலை பாரம்பரியம் உள்ள குடும்பம் என்பதால், சிறு வயதிலேயே இசையும், நடனமும் எங்களுக்கு அறிமுகமானது.
இரண்டு பேரும் டான்ஸ் கத்துக்கிட்டு அரங்கேற்றம் செய்து, இப்போது வரைக்கும் ஆடிட்டிருக்கோம்.
அக்கா சிதாரும், நான் தபேலாவும் வாசிக்க கத்துக்கிட்டோம். எதையுமே சராசரியாக செய்யாமல், ஏதாவது புதுமையோட பண்ணணும் என்ற நினைப்போடவே வளர்ந்த வங்க நாங்க.
'டிவி' சீரியல் டைரக்ட் செய்த முதல் பெண்கள் நாங்கள் தான். எங்க குடும்பத்துலயும் சரி, பிரெண்ட்ஸ் வீடுகள்லயும் சரி... எந்த விசேஷம் நடந்தாலும் அதை சுவாரஸ்யமாக மாத்திடுவோம்.
அதனால், ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி துவங்கலாம்னு தோன்றியது. அப்படி துவங்கிய எங்கள், 'ஈவென்ட் ஆர்ட்' கம்பெனிக்கு இப்போது வயது, 20.
லட்சுமி: வெட்டிங் பிளானிங் புரோகிதரை ஏற்பாடு செய்வது துவங்கி, கேட்டரிங், மெஹந்தி, என்டர்டெயின்மென்ட், மணமக்கள் என்ட்ரி எப்படியிருக்கணும்னு பிளான் செய்வது வரை எல்லாத்தையும் நாங்க பார்த்துப்போம்.
எங்க பின்னணியை கேள்விப்பட்டதும், 'பணக்காரங்களுக்கும், செலிபிரிட்டீஸ்களுக்கும் தான் பண்ணுவாங்க போல, எல்லாமே பெரிய பட்ஜெட்டாக இருக்கும்'னு நினைக்க வேண்டாம். எந்த பட்ஜெட்லயும் செய்து தருவோம்.
பிசினஸ் துவங்கிய போது, நாங்களே பொருட்களை ஆட்டோவில் ஏற்றி ஸ்பாட்டுக்கு எடுத்துட்டு போயிருக்கோம். இன்னிக்கு இந்த துறையில் நிறைய பேர் இருக்காங்க.
அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைக்கிற அளவுக்கு இந்த மார்க்கெட் அவ்ளோ பெரிசுங்கிறது ஆரோக்கியமான விஷயம் தான்.
இன்னிக்கு நாங்க முன்னிலையில் இருக்கோம்னா, அதுக்கு எங்களுடைய பர்சனல் அட்டென்ஷன் தான் காரணம்.
வேலைகளை பிரிச்சு கொடுத்துட்டு நாங்க ஒதுங்கிட மாட்டோம்; ராப்பகலாக கண் விழிச்சு, எங்க வீட்டு நிகழ்ச்சியாக நினைத்து செய்வோம்.
ரத்னா பேன் ஹவுஸ், ஐடெக்ஸ் கண் மை உள்ளிட்ட பல விளம்பரங்களில் ஒலிக்கும் கணீர் குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள் தான்.
எங்க அப்பா, எஸ்.வி.ரமணன், 60,000க்கும் மேலான ரேடியோ விளம்பரங்கள் பண்ணியிருக்கார். நாங்கள் பள்ளி முடித்து அப்பாவோட ஸ்டூடியோவுக்கு தான் போவோம்.
அங்கேயே சாப்பிட்டு, ஹோம் வொர்க் பண்ணிட்டிருப்போம். அப்பா திடீர்னு கூப்பிட்டு ஒரு விளம்பரத்துக்கு வாய்ஸ் பேச சொல்வார். அப்படி துவங்கியது தான்; இப்பவும் தொடர்ந்துட்டு இருக்கோம்.

