தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


PUBLISHED ON : ஜூலை 26, 2015 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2015 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'லெகின்ஸ்' அணிபவர்கள் கவனத்திற்கு!

'ஹீலர் கம் எக்ஸ்டர்னல் தெரபிஸ்ட்' ஜான் கென்னடி: தற்போது, இளம் பெண் கள் மத்தியில், 'லெகின்ஸ்' தான் பேஷனாக உள்ளது. அனைத்து வயது பெண்களும் இதை அணிகின்றனர். கால்களை இறுகப் பிடிக்கும் இந்த உடையைத் தொடர்ந்து போடுவதால், கால் பகுதிகளில் அழுத்தம் ஏற்பட்டு, கால் வழியாக செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். காரணம், கெண்டைக்கால் பகுதியும் நமக்கு ஒரு இதயம் போலத் தான். 'கெண்டை' எனும் வார்த்தைக்கு, 'வாங்கித் தள்ளுவது' என அர்த்தம். நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு இணைப்புகளிலும், அதாவது, கை முட்டி, அக்குள், கால் முட்டி, இடுப்பு போன்ற பகுதிகளில், நிணநீர் மண்டலம் இருக்கிறது. இதிலிருந்து சுரக்கும் நிண நீரானது, நம் உடலில் இருக்கும் தைராய்டு, கணையம், பிட்யூட்டரி உள்ளிட்ட எல்லா நாளமில்லா சுரப்பிகளுக்கும் போய் சேருகிறது.இந்த நாளமில்லா சுரப்பிகள் சரியாக சுரக்க வேண்டுமெனில், இந்த நிணநீர் மண்டலம் தான் அவசியம். இந்த நிணநீர், ரத்தத்துடன் சேர்ந்து தான், உடலின் எல்லா இடங்களுக்கும் போய் சேருகிறது. நம் கால், இணைப்புகளில் இருந்து நிணநீரும், ரத்தமும், அதோடு சில கழிவுகளும் சேர்ந்து, புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து, மேலே இருக்கும் நம் உடல் உறுப்புகளுக்குப் போய் ஆக வேண்டும். இதை சரியாக, 'வாங்கி தள்ளுகிற' வேலையை நம் கெண்டைக்கால் பகுதி தான் செய்கிறது. கெண்டைக்கால்களில் தொடர்ந்து அழுத்தம் தரும்போது, ரத்த ஓட்டம் பாதித்து, கழிவுகளுடன் அங்கேயே தேங்கி நின்று விடும். அதனால், நாளமில்லா சுரப்பிகளில் இருந்து சுரப்பி நீர் சரியாக வெளியேறாது. இதன் விளைவாக, தைராய்டு, இர்ரெகுலர் பீரியட்ஸ் போன்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வர, நிறைய வாய்ப்புகள் உள்ளன.

ஆர்வம் இருந்தால் ஒரே வாரத்தில் கற்றுக் கொள்ளலாம்!

எம்.பி.ஏ., படித்து, சமையல் கலையில் அசத்தும் ஹேமலதா: நான், 9ம் வகுப்பு படிக் கும் போதே, அம்மா சமையல் செய்வதை பார்த்துப் பார்த்து, செய் யக் கற்றுக் கொண்டேன். ஒரு கட்டத்தில், நானே வீட்டில் அனைத்து சமையல் வேலைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டேன். அம்மா, அப்பா வெளியில் சென்று வரும்போது, புது ரெசிபி செய்து, சாப்பிடக் கொடுப்பேன்; அவர்கள் பாராட்டுவர். அவர்களின் பாராட்டுகளை பெற வேண்டும் என்பதற்காக, புதிது புதிதாக எதையாவது சமைத்துப் பார்ப்பேன். இப்படித்தான், சமை யல் பற்றி ஏராளமான விஷயங்களை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டேன். நான் எம்.பி.ஏ., படித்திருந்தாலும், வேலைக்குச் செல்வதில் ஆர்வமில்லை. எனக்கு சமையல் செய்வது தான் பிடித்திருந்தது; அதையே தொழிலாக ஆக்கிக் கொண்டேன். தமிழக சமையல், செட்டிநாட்டு சமையல், ஆந்திர சமையல், சை னீஸ் சமையல், பொடி வகைகள், ஊறுகாய் வகைகள், சாக்லேட், ஐஸ்கிரீம் வகைகள், நொறுக்குத் தீனிகள் மட்டுமின்றி, பல ஸ்பெஷல் ரெசிபிகளும் தெரியும்.உதாரணமாக, இட்லி, பிரெட், சிறுதானியங்கள் போன்றவற்றை வைத்து, இரண்டே நிமிடங்களில் காலை உணவைத் தயார் செய்து விடலாம். எடையைக் குறைக்க சிறப்பு உணவு வகை கள் உள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கு என்று பிரத்யேக உணவு வகைகள் உள்ளன. சமையலைப் பொறுத்தவரை, அது ஒரு கடல்; சாகும் வரையில், ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டே இருக்கலாம்.சமையலில் ஆர்வம் மட்டும் இருந்தால் போ தும்; ஒரே வாரத்தில் சமையல் கற்றுக் கொள்ள முடியும். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் என்னிடம், 500 பேர் வரை பயிற்சி பெற்று இருக்கின்றனர். ஏற்கனவே சமையல் பற்றி நன்கு தெரிந்தோரும், பயிற்சிக்கு வருவர். அவர்களுக்கு பயிற்சி அளிப்பது மிகவும் சுலபமாக இருக்கும்.முன்னணி நிறுவனங்கள் நடத்திய, 25 சமையல் போட்டிகளில் கலந்து கொண்டு, பரிசுகள் வாங்கி இருக்கிறேன். சமையல் தானே என்று பெண்கள் சிலர் சாதாரணமாக நினைக்கின்றனர்; அது தவறு. சமையல் வழியாக இன்று, குடும்பத்தில் உள்ள அனைவரின் நலனையும் நல்வழிப்படுத்த முடியும். நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, மருந்துகளுடன் சரியான பதார்த்தங்களை செய்து கொடுத்தால் போதும்; விரைவில் குணம் பெறுவர்.சமையலுக்கென்று தனியாக பள்ளி ஆரம்பித்து, ஆண், பெண் இருபாலரும் கற்றுக் கொள்ளும் வகையில் வசதி செய்து தர வேண்டும் என்பதே என் விருப்பம். வெளிநாடுகளிலும் நம் சமையல் கலையின் பெருமைகளை உணர வைக்க வேண்டும். வெளிநாட்டுப் பெண்களும், நம் சமையலை சுவைத்து ரசிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுப்பேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us