sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

சொல்கிறார்கள்

/

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


PUBLISHED ON : செப் 27, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 27, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆளுக்கு ஒரு மரம்! மாணவர்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மதுரை போலீஸ் எஸ்.ஐ., ஜெயராஜ்: நான் கடந்த ஒரு வருடமாக, போக்குவரத்து மற்றும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை, பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசி வருகிறேன்.

இது எனக்கு அலுவலக ரீதியாக வழங்கப்பட்டுள்ள பணி என்பதால், அதனுடன் சுற்றுச்சூழல் பற்றிய தகவலை தெரிவித்து வருகிறேன். தற்போது, சாலை விபத்தை விடவும் பெரிய ஆபத்து, சுற்றுச்சூழல் சீர்கேட்டால் தான். எனவே, மாணவர்களுக்கு கூடுதல் தகவல்களாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். ஓசோன் மண்டலத்தின் அழிவை நோக்கி, மனித குலம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இப்படியே போனால், நாம் இப்போது, குடிநீரை காசு கொடுத்து வாங்குவது போல், சுவாசிக்கும் காற்றையும் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் சீர்கேடு என்பது வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை, மரங்களை வெட்டுவதால் ஏற்படும் வெப்பம் போன்றவற்றால் உண்டாகிறது. இதைத் தடுக்க ஒரே தீர்வு, வாகனங்கள் உபயோகிப்பதைக் குறைக்க வழிவகுக்க வேண்டும். ஒரு வீட்டில் அம்மா, அப்பா, மகன் என மூன்று பேர் உள்ளனர் என்றால், அதில் அப்பாவுக்கு ஒரு கார், அம்மாவுக்கு ஒரு கார், மகன் கல்லூரி செல்வதற்கு ஒரு டூவீலர் என்று வாகனங்கள் வைத்துள்ளனர்; அது தேவையற்றது. எனவே, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே வாகனத்தைப் பயன்படுத்தலாம். அதுபோல, சிறிது தூரம் போவதற்கு சைக்கிளை பயன்படுத்தலாம்; இன்னும் சிறப்பு, நடந்து செல்வது; இது உடலுக்கும் நல்லது. பணக்காரர்கள் தங்களது பிறந்தநாளை ஓட்டல்களில் கொண்டாடுவதை விட்டு விட்டு, அந்நாளில் மரங்கள் நட்டு வளர்க்கலாம். அதிலும், புங்க மரம் வளர்ப்பதால், குளிர்ச்சியான நிலையைத் தருகிறது. ஆளுக்கொரு மரம் வளர்த்தால், நாடே சொர்க்கமாகும்.








      Dinamalar
      Follow us