/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ரூ.39 லட்சம் விற்பனையில் ரூ.18 லட்சம் லாபம்!
/
ரூ.39 லட்சம் விற்பனையில் ரூ.18 லட்சம் லாபம்!
PUBLISHED ON : ஜன 30, 2025 12:00 AM

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, மறுசுழற்சியில் அவற்றை பர்னிச்சர்களாக தயாரித்து விற்பனை செய்யும், 'கார்பன் அண்டு வேல்' கம்பெனியை நடத்தும், கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஆல்வின்: நான் பி.டெக்., முடித்து, ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன்.
எங்கள் நிறுவனத்துக்கு எதேச்சையாக வந்திருந்த சித்தார்த்துடன் பேசியபோது, பிளாஸ்டிக் குறித்த ஒரே அலைவரிசை எங்களுக்குள் இருந்தது புரிந்தது.
பிளாஸ்டிக் வேஸ்ட்களுக்கு தீர்வு ஏற்படுத்த இருவரும் முடிவு செய்தோம். அந்த சமயத்தில்தான், கொச்சியில் பேராசிரியராக இருந்த சூரஜ் சாரின் நட்பு கிடைத்தது.
அவரது ஆலோசனையின்படி ஆய்வு செய்ததில், 'யூஸ் அண்டு த்ரோ பிளாஸ்டிக்'கை குப்பைக்கு வரவிடாமல் ஆண்டுக் கணக்கில் பயன்படுத்தும் பர்னிச்சர்களாகவும், 'இன்டர்லாக்' எனப்படும் பிளாஸ்டிக் ஹாலோ பிரிக் கற்களாகவும் மாற்றும் டெக்னாலஜியை கண்டுபிடித்தோம்.
ஒரு மரம் ஆண்டுக்கு, 26 கிலோ கார்பனை தனக்குள் எடுத்து, நம் காற்று மண்டலத்தை சுத்தம் செய்கிறது. ஒரு திமிங்கலம், 300 டன் கார்பனை எடுத்துக் கொள்கிறது.
சுற்றுச்சூழலுக்கு உதவும் அவற்றின் பெயரையே, 'கார்பன் அண்டு வேல்' என்று எங்கள் கம்பெனிக்கு வைத்தோம். மத்திய அரசின் உதவியுடன், கேரள அரசின் கடனுதவியும் கிடைத்தது.
'ரீசைக்கிள்' செய்யும் பிளாஸ்டிக் பொருட்கள் பலமாக இருக்க, நாங்கள் ஒரு டெக்னாலஜியை கண்டுபிடித்துள்ளோம்.
சாதாரண பிளாஸ்டிக், லைட்டர் வாயிலாக எரித்தாலே எரிந்து விடும். ஆனால், நாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக், 300 டிகிரி வெப்பத்தில் தான் எரியும்; அத்துடன் பலமாகவும் இருக்கும். எங்கள் பார்முலாவுக்கான காப்புரிமை பெற விண்ணப்பம் செய்திருக்கிறோம்.
உலக அளவில் அதிக பிளாஸ்டிக் குப்பை சேரும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. கொச்சி மெட்ரோ, லுாலு குரூப், மலபார் கோல்டு போன்ற பலர் எங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
கொச்சி மெட்ரோ ஸ்டேஷனுக்கு மட்டும் 2,000 கிலோ பிளாஸ்டிக் வேஸ்ட்களை கொண்டு, 200 பெஞ்சுகள் தயாரித்துக் கொடுத்துள்ளோம்.
அடுத்து, பிளாஸ்டிக்கை வைத்து டைல்ஸ்கள் தயாரிக்கும் திட்டம் வைத்திருக்கிறோம். இந்த டைல்ஸ்களை சுவரில் ஒட்டலாம்.
கடந்த 2022ல் இந்நிறுவனத்தை துவங்கியபோது, 62,000 ரூபாய்க்கு விற்பனை நடந்தது; அடுத்த ஆண்டு, 39 லட்சம் ரூபாயாக உயர்ந்தது.
அதில் லாபம் மட்டுமே, 18 லட்சம் ரூபாய் கிடைத்தது. இந்த ஆண்டு, 3 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்.
தொடர்புக்கு: 79027 74173

