sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

முருங்கை, தர்பூசணி சாகுபடியில் ரூ.3.40 லட்சம் லாபம்!

/

முருங்கை, தர்பூசணி சாகுபடியில் ரூ.3.40 லட்சம் லாபம்!

முருங்கை, தர்பூசணி சாகுபடியில் ரூ.3.40 லட்சம் லாபம்!

முருங்கை, தர்பூசணி சாகுபடியில் ரூ.3.40 லட்சம் லாபம்!


PUBLISHED ON : அக் 12, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 12, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயற்கை முறையில் செடி முருங்கை மற்றும் தர்பூசணி சாகுபடி செய்து, நிறைவான லாபம் சம்பாதிக்கும், அரியலுார் மாவட்டம், காடுவெட்டி அருகே உள்ள திருக்களப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆனந்தன்: இது தான் என் சொந்த ஊர். நாங்கள் விவசாய குடும்பம். டிப்ளமா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்ததும், துபாய் சென்று, தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன்; நல்ல சம்பளம் கிடைத்தது. ஆனாலும், அங்குள்ள வாழ்க்கை சூழல் பிடிக்காமல், 2019ல் சொந்த ஊருக்கு திரும்பி, விவசாயத்தில் இறங்கி விட்டேன்.

முதலில், பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்தேன். அதன்பின், 2020ல், 1 ஏக்கரில் செடி முருங்கை பயிர் செய்து, அதில் ஊடுபயிராக தர்பூசணி சாகுபடி செய்தேன்.

நான் எதிர்பார்த்ததை விடவும் நல்ல லாபம் கிடைத்தது. 1 ஏக்கர் செடி முருங்கையில் ஊடுபயிராக சாகுபடி செய்ததில், இந்த ஆண்டு, 10 டன் தர்பூசணி பழங்கள் கிடைத்தன.

தர்பூசணி பழங்களில், ஊசி வாயிலாக ரசாயன மருந்து செலுத்தப்படுவதாக வதந்தி கிளம்பியதால், 'இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்த தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு... 1 கிலோ, 10 ரூபாய்' என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டதில், பலரும் என்னை தொடர்பு கொண்டனர். 5 டன் பழங்கள் விற்பனை செய்தேன்; 50,000 ரூபாய் கிடைத்தது.

மீதி, 5 டன் பழங்களை விற்பனை செய்ய, வாடகைக்கு ஒரு சரக்கு வாகனம் பிடித்தேன். 'இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழம், 1 கிலோ, 20 ரூபாய்' என்று போஸ்டர் தயார் செய்து, அந்த வாகனத்தில் ஒட்டினேன்.

ஒலிபெருக்கி வாயிலாக நானே நேரடியாக விளம்பரம் செய்து, ஊர் ஊராக சென்று விற்பனை செய்தேன்.

இந்த, 5 டன் பழங்கள் விற்பனை வாயிலாக, 1 லட்சம் ரூபாய் கிடைத்தது. மொத்தம், 10 டன் பழங்கள் விற்பனையில் எல்லா செலவுகளும் போக, இந்தாண்டு, 1 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது.

செடி முருங்கையை பொறுத்தவரைக்கும், ஆண்டுக்கு, 4.50 டன் வீதம் இரண்டு முறை மகசூல் கிடைக்கும். சராசரியாக கிலோ, 30 ரூபாய் வீதம், 4.5 டன் காய்கள் விற்பனை வாயிலாக, 1.35 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

ஆண்டுக்கு, 9 டன் காய்கள் விற்பனை மூலம், 2.70 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

வியாபாரிகள், எ ன் தோட்டத்திற்கே நேரடியாக வந்து வாங்கிச் செல்வதால், போக்குவரத்து செலவு மிச்சம். சாகுபடி மற்றும் அறுவடை செலவுகள் போக, 2.40 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது.

தர்பூசணி விற்பனையையும் சேர்த்து, மொத்தம், 3.40 லட்சம் ரூபாய் லாபம் கிடைத் துள்ளது. சமயோசிதமாக செயல்பட்டால், விவசா யத்தில் சாதிக்கலாம்!

தொடர்புக்கு:

87600 05420

தொழிலில் தெளிவும் தொடர் முயற்சியும் இருந்தால் வெற்றி!




ஆண்டு முழுதும் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் பட்டாசுகள் விற்பனை செய்து வரும், விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீ கீதா:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தான் என் சொந்த ஊர். கணவர் ஊர் சிவகாசி. கணவரின் நட்பு வட்டத்தில் உள்ள பலரும், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பே, அவர்களிடம் மொத்த விலைக்கு பட்டாசுகளை வாங்கி, 'சிவகாசி எல்லோ வே கிராக்கர்ஸ்' என்ற பெயரில், சில்லரை வியாபாரம் செய்ய துவங்கினேன்.

முன் அனுபவம் இல்லாமல், அதிகம் முதலீடு செய்யாமல், நம்பிக்கையை மட்டுமே முதலீடாக வைத்து, களத்தில் இறங்கினேன்.

ஆரம்பத்தில், கேட்கும் நபர்களுக்கு மட்டும் பட்டாசுகளை வாங்கிக் கொடுத்தேன். அதன்பின் தான் சமூக வலைதளம், பள்ளி - கல்லுாரி ந ண்பர்கள் என, தொழிலை விரிவுபடுத்தினேன்; அதன் வாயிலாக, ஆர்டர்கள் வந்தன.

பிசினசை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக, இணையதளம் உருவாக்கினேன். டிஜிட்டல் விளம்பரங்களை வெளியிட்டேன்.

வியாபாரத்திற்காகவும், வணிக வட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், சிவகாசியை மையமாக வைத்து செயல்படும், பெண் தொழில் முனைவோருக்கான தன்னார்வலர் அமைப்பில் உறுப்பினராக இணைந்தேன்.

சிவகாசி எனும் சின்ன வட்டத்தில் இருந்து, என் பிசினஸ், தமிழகத்தின் நாலாபுறமும் தெரிய ஆரம்பித்தது.

தேர்தல், கோவில் திருவிழா, வீட்டு விசேஷங்கள் என, சீசன் அல்லாத சமயங்களிலும், ஆண்டு முழுக்க பட்டாசு தேவை உள்ளவர்களுக்கு, சிவகாசி மொத்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டேன். அந்த முயற்சி தான் சற்று கடினமாக இருந்தது; இருந்தாலும் கரையேறி விட்டேன்.

தனிக் கடை பிடித்து, 8 லட்சம் ரூபாய் முதலீட்டில் சிறிய ரகம் முதல் பெரிய, 'ஸ்கை ஷாட்' வெடிகள் வரையிலும் இருப்பு வைத்து மார்க்கெட் செய்ய ஆரம்பித்தேன்.

தொழில் துவங்கிய இந்த ஏழு ஆண்டுகளில், ஒரு நிலையான இடத்திற்கு வந்திருக்கிறேன்.

குஜராத், கர்நாடகா, ஆந்திரா, கேரளா என பல வெளிமாநிலங்களுக்கும் பட்டாசு பார்சல் அனுப்பி வருகிறேன். ஆண்டுக்கு, 8 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

பொதுவாக, நாம் என்ன தொழில் செய்ய போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும்; அதில் தொடர்ச்சியான முயற்சியும் இருக்க வேண்டும்.

முதலீடு இல்லாமல் தொழில் துவங்குவதற்கும், விளம்பரம் செய்வதற்கும் சமூக வலைதளங்கள் நமக்கு நிறைய வழிகளை கற்றுத் தரும். அதை பயன்படுத்தி, சுயமாக உழைக்க நினை க்கும் பெண்கள் ஒவ்வொருவரும் முன்னேறலாம்!

தொடர்புக்கு:

97877 45577.






      Dinamalar
      Follow us