sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

தொழிலில் தெளிவும் தொடர் முயற்சியும் இருந்தால் வெற்றி!

/

தொழிலில் தெளிவும் தொடர் முயற்சியும் இருந்தால் வெற்றி!

தொழிலில் தெளிவும் தொடர் முயற்சியும் இருந்தால் வெற்றி!

தொழிலில் தெளிவும் தொடர் முயற்சியும் இருந்தால் வெற்றி!


PUBLISHED ON : அக் 12, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 12, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டு முழுதும் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் பட்டாசுகள் விற்பனை செய்து வரும், விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீ கீதா: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தான் என் சொந்த ஊர். கணவர் ஊர் சிவகாசி. கணவரின் நட்பு வட்டத்தில் உள்ள பலரும், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பே, அவர்களிடம் மொத்த விலைக்கு பட்டாசுகளை வாங்கி, 'சிவகாசி எல்லோ வே கிராக்கர்ஸ்' என்ற பெயரில், சில்லரை வியாபாரம் செய்ய துவங்கினேன். முன் அனுபவம் இல்லாமல், அதிகம் முதலீடு செய்யாமல், நம்பிக்கையை மட்டுமே முதலீடாக வைத்து, களத்தில் இறங்கினேன்.

ஆரம்பத்தில், கேட்கும் நபர்களுக்கு மட்டும் பட்டாசுகளை வாங்கிக் கொடுத்தேன். அதன்பின் தான் சமூக வலைதளம், பள்ளி - கல்லுாரி ந ண்பர்கள் என, தொழிலை விரிவுபடுத்தினேன்; அதன் வாயிலாக, ஆர்டர்கள் வந்தன.

பிசினசை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக, இணையதளம் உருவாக்கினேன். டிஜிட்டல் விளம்பரங்களை வெளியிட்டேன். வியாபாரத்திற்காகவும், வணிக வட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், சிவகாசியை மையமாக வைத்து செயல்படும், பெண் தொழில் முனைவோருக்கான தன்னார்வலர் அமைப்பில் உறுப்பினராக இணைந்தேன்.

சிவகாசி எனும் சின்ன வட்டத்தில் இருந்து, என் பிசினஸ், தமிழகத்தின் நாலாபுறமும் தெரிய ஆரம்பித்தது. தேர்தல், கோவில் திருவிழா, வீட்டு விசேஷங்கள் என, சீசன் அல்லாத சமயங்களிலும், ஆண்டு முழுக்க பட்டாசு தேவை உள்ளவர்களுக்கு, சிவகாசி மொத்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டேன். அந்த முயற்சி தான் சற்று கடினமாக இருந்தது; இருந்தாலும் கரையேறி விட்டேன்.

தனிக் கடை பிடித்து, 8 லட்சம் ரூபாய் முதலீட்டில் சிறிய ரகம் முதல் பெரிய, 'ஸ்கை ஷாட்' வெடிகள் வரையிலும் இருப்பு வைத்து மார்க்கெட் செய்ய ஆரம்பித்தேன். தொழில் துவங்கிய இந்த ஏழு ஆண்டுகளில், ஒரு நிலையான இடத்திற்கு வந்திருக்கிறேன். குஜராத், கர்நாடகா, ஆந்திரா, கேரளா என பல வெளிமாநிலங்களுக்கும் பட்டாசு பார்சல் அனுப்பி வருகிறேன். ஆண்டுக்கு, 8 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

பொதுவாக, நாம் என்ன தொழில் செய்ய போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும்; அதில் தொடர்ச்சியான முயற்சியும் இருக்க வேண்டும். முதலீடு இல்லாமல் தொழில் துவங்குவதற்கும், விளம்பரம் செய்வதற்கும் சமூக வலைதளங்கள் நமக்கு நிறைய வழிகளை கற்றுத் தரும். அதை பயன்படுத்தி, சுயமாக உழைக்க நினை க்கும் பெண்கள் ஒவ்வொருவரும் முன்னேறலாம்!

தொடர்புக்கு: 97877 45577.






      Dinamalar
      Follow us