தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/'ரூ.850 முதலீட்டில் தொடங்கி ஆண்டுக்கு ரூ.55 லட்சம் வர்த்தகம்!'

'ரூ.850 முதலீட்டில் தொடங்கி ஆண்டுக்கு ரூ.55 லட்சம் வர்த்தகம்!'

'ரூ.850 முதலீட்டில் தொடங்கி ஆண்டுக்கு ரூ.55 லட்சம் வர்த்தகம்!'


PUBLISHED ON : செப் 30, 2026 12:01 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2026 12:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நறுக்கிய பழங்கள் மற்றும் சுண்டல் தயாரித்து, வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கே சென்று வினியோகிக்கும், 'முக்கனி' என்ற நிறுவனத்தை நடத்தி வரும், 28 வயதாகும் சிவா:

திருச்சி மாவட்டம், புலிவலம் தான் என் சொந்த ஊர். இளங்கலை கடைசி ஆண்டு படித்தபோது, அப்பா இறந்து விட்டார். வீட்டில் நிதி நெருக்கடி. தினசரி வருமானத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அம்மாவிடம் பேசி கொண்டிருந்தபோது, 'சுண்டல் கடை போடலாமே' என்றார். 850 ரூபாய் முதலீட்டில் சுண்டல் தயாரித்து, ஒரு பூங்கா வாசலில் வைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.

என்னிடம் சுண்டல் வாங்கிய ஒருவர், 'இதுபோல் பழங்களையும் நறுக்கி விற்பனை செய்தால் நன்கு விற்பனையாகும்' என்றார். இன்னொரு வாடிக்கையாளர், 'சுண்டலையும், பழங்களையும் மாதாந்திர திட்டம் வாயிலாக, எங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்க முடியுமா?' என கேட்டார். அவர் வீட்டுக்கு சென்று கொடுத்தேன்.

அவர் மூலமாக கூடுதல் வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். இந்த விஷயத்தை என் பள்ளி நண்பர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள், 'இதை ஒரு தொழிலாக ஆரம்பிக்கலாமா?' என்று கேட்டனர். அப்படி வெறும் ஐந்து உறுப்பினர்களுடன், 'முக்கனி' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தோம்.

ஒவ்வொரு பழத்தையும், இயற்கையான முறையில் நீண்ட நேரம் புதுசாக வைக்க என்ன செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்தோம். உதாரணத்திற்கு, ஆப்பிள் பழத்தை எலுமிச்சை சாறில் முக்கி எடுத்து நறுக்கினால், நீண்ட நேரம் கருக்காமல் இருக்கும். இதே மாதிரி ஒவ்வொரு பழத்திற்கும், அதன் தன்மைக்கும் ஏற்ற, 'பார்முலா'வை உருவாக்கினோம்.

அதிகாலை 3:00 மணிக்கு வேலை ஆரம்பிக்கும் என்பதால், 18 பேரை பணிக்கு அமர்த்தி, பழங்களை எப்படி நறுக்கணும், எந்த வடிவத்தில் நறுக்கணும் என்று சொல்லி கொடுத்தோம்.

தனித்தனியாக பழங்களையும், சுண்டல் வகைகளையும் தயாரித்து, காலை 6:00 மணிக்குள், 'பேக்' செய்து, வினியோகம் செய்ய கிளம்பி விடுவோம். இப்போது, திருவானைக்காவல் பகுதியில் சின்னதாக கடை வாடகைக்கு எடுத்து இயங்கி வருகிறோம். 10 கி.மீ., வரை உணவு வினியோகமும் செய்கிறோம்; இதை விரிவுபடுத்தும் திட்டமும் இருக்கிறது.

எங்களுக்கு மிகவும் சவாலாக இருப்பது பழங்களின் விலை தான். அதனால், எந்த சீசனில் எந்த பழம் கிடைக்கும் என்று பட்டியல் எடுத்து, அதற்கேற்ற மாதிரி விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கிறோம்.

எதிர்காலத்தில் தமிழகம் முழுக்க எங்கள் நிறுவனத்தை விரிவுபடுத்த வேண்டும்; அதற்கான வேலைகளை இப்போதே ஆரம்பித்து விட்டோம். தொழில் துவங்கிய மூன்று ஆண்டுகளில், ஆண்டுக்கு 55 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளோம்.



தொடர்புக்கு: 74484 46067.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us