/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
1 கிலோவுக்கு ரூ.2,500 கிடைக்கும் சொடக்கு தக்காளி!
/
1 கிலோவுக்கு ரூ.2,500 கிடைக்கும் சொடக்கு தக்காளி!
PUBLISHED ON : அக் 25, 2025 12:00 AM

மருத்துவ குணம் நிறைந்த சொடக்கு தக்காளியை சாகுபடி செய்து, விற்பனை செய்து வரும், துாத்துக் குடியைச் சேர்ந்த இயற்கை விவசாயி பால்சாமி:
நாங்கள் விவசாய குடும்பம். எங்களுக்கு, 3 ஏக்கர் நிலம் இருக்கிறது. பொருளாதார சூழல் காரணமாக, பிளஸ் 2 படித்துவிட்டு, அப்பாவுடன் விவசாயத்தை கவனிக்க ஆரம்பித்தேன்.
12 ஆண்டுகளுக்கு முன், விருதுநகரில் இருந்து ஒரு மூலிகை வியாபாரி எங்கள் ஊருக்கு வந்து விவசாயிகளை சந்தித்து, 'உங்கள் வயலில் களைச் செடிகளாக வளரக்கூடிய மூலிகைகளை சேகரித்து, வெயிலில் காயவைத்து கொடுத்தால், நல்ல விலை கொடுக்க தயாராக இருக்கிறேன்' என்றார்.
எங் கள் வயலில் இருந்த களைச்செடிகளை சேகரித்து கொடுக்க ஆரம்பித்தேன். நாளடைவில் எங்கள் ஊர் ஏரி, குளங்களின் கரைகளில் இருந்தும் சேகரித்து கொடுத்தேன்.
கொரோனா ஊரடங்கிற்கு பின், மூலிகைகளுக்கான தேவையும், சந்தை வாய்ப்புகளும் பல மடங்கு அதிகரித்ததால், குறைந்த பரப்பில் தனிப்பயிராக மூலிகைகளை நானே பயிர் செய்ய ஆரம்பித்தேன்.
கடந்தா ண்டு, 25 சென்ட் பரப்பில் பயிர் செய்த சொடக்கு தக்காளி செடிகளில் இருந்து, 98 கிலோ பழங்கள் கிடைத்தன. 1 கிலோ 2,500 ரூபாய் என்று விற்பனை செய்ததன் வாயிலாக, மொத்தம், 2.4 5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
கிராமப்புறங்களில், சிறுவர்கள் இந்த தக்காளிப் பழத்தை செடியில் இருந்து பறித்து, நெற்றியில் வைத்து உடைக்கும் போது, சொடக்கு போடுவது போல் ஒரு சத்தம் எழும்.
இதனால் தான், இந்த பழத்து க்கு சொடக்கு தக்காளி என்ற பெயர் வந்தது. சொடக்கு தக்காளி பழத்தை அப்படியே சாப்பிடலாம்; குழம்பு வைத்தும் சாப்பிடலாம். வயிற்று புண், மலச்சிக்கல் பாதிப்புகளை குணப் படுத்தக்கூடிய தன்மை கொண்டது.
இச்செடிகளின் இலைகளை கீரையாக சமைத்து சாப்பிடலாம்; வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். உடலில் ஏற்படும் வீக்கங்களை குணப்படுத்துவதற்கும், சிறுநீரகம் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வெள்ளைப் படுதல் ஆகிய பாதிப்புகளையும் இக்கீரை குணப்படுத்து ம்.
சொடக்கு தக்காளி கீரையுடன், மஞ்சள் துாள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி கஷாயமாக குடித்தால் உடல் வலி, மூட்டுவலி பாதிப்புகள் நீங்கும்.
நான் உற்பத்தி செய்யக்கூடிய சொடக்கு தக்காளியை, வியாபாரிகள் மற்றும் சித்த மருத்துவர்களிடம் மொத்த விற்பனையில் கொடுப்பதால், 1 கிலோவுக்கு, 2,500 ரூபாய் தருகின்றனர். ஆனால், 'அமேசான்' போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், 1 கிலோ சொடக்கு தக்காளியை, 4,000 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றன.
தொடர்புக்கு:
97902 87653.

