/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நடிப்பதற்கு வந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டேன்!
/
நடிப்பதற்கு வந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டேன்!
PUBLISHED ON : பிப் 01, 2024 12:00 AM

கடந்த, 25 ஆண்டு களுக்கும் மேலாக, 'டப்பிங்' கலைஞராக இருக்கும் சித்ரா: அப்பா, 'டிராமா ஆர்ட்டிஸ்ட்'டாக இருந்தார். அதனால், 10 வயதிலேயே மேடைப் பாடகராக அறிமுகம் ஆகிட்டேன்.
காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போது, ஆல் இண்டியா ரேடியோவில் டிராமா ஆர்ட்டிஸ்டாகவும் குரல் கொடுத்துக்கிட்டுஇருந்தேன்.
அப்போது, டி.கே.எஸ். சந்திரன்னு ஒருவர் டப்பிங் பீல்டில் இருந்தார். அவர், என் குரல் நல்லா இருக்குன்னு டப்பிங்கிற்கு முயற்சி செய்ய கூறினார்.
அப்போது தான் தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப்பிங் ஆன படத்தில் முதன்முதலில் பேசினேன்.
அதில், என் குரல் எல்லாருக்கும் பிடித்திருந்தது; அப்படியே தொடர்ந்து டப்பிங் பேச ஆரம்பித்தேன்.
நாயகன் திரைப்படத்தில் டப்பிங் பேச, இயக்குனர் மணிரத்னம், சின்ன குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் சொல்லிக் கொடுத்தார். அச்சமயத்தில், புதுமுக கதாநாயகியான பலருக்கும் நான் டப்பிங் பேசினேன்.
தாம்பத்யம் என்ற திரைப்படத்தில், நடிகர் சிவாஜி கணேசனின் பெண்ணாக நடித்திருந்த நடிகை துளசிக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, சிவாஜி கணேசன் சார் டப்பிங் அறைக்கு வந்தார்.
எனக்கு, 'படபட'ன்னு ஆகிடுச்சு. ஆனால் அவர், 'நீங்க பேசுங்க'ன்னு சொல்லி உட்கார்ந்து விட்டார்; நானும் கொடுத்த டயலாக் அனைத்தையும் பேசினேன்.
அவர் என்னிடம், 'நல்லா பேசினீங்க' என்று பாராட்டினார். அவரிடம் இருந்து அப்படியொரு பாராட்டு வாங்கியதும், அவர் முன் நான் பேசியதும் மிகப் பெரிய பாக்கியம்.
திருமணத்திற்கு பின், ஏழு ஆண்டுகள் பிரேக் ஆகிடுச்சு. திரும்பவும் கரியரை ஸ்டார்ட் பண்ண ஆசைப்பட்ட போது வீட்டில் அனைவரும் சப்போர்ட் செய்தனர்.
பிரேக் எடுத்து வந்தபின் பெரும்பாலும் அம்மா கதாபாத்திரத்திற்கு தான் பேசக் கூப்பிட்டனர்.
டப்பிங்கில் பெரிய பிரச்னை எனில், நம் குரலை பார்க்க மாட்டாங்க. நம்மை தான் பார்ப்பாங்க. நமக்கு வயதாகி விட்டது எனில், அவர்களே அம்மா கதாபாத்திரம் தான் கொடுப்பர்.
ஒரு முறை அம்மா கதாபாத்திரத்திற்கு பேசி விட்டோம் எனில், தொடர்ந்து அந்த பாத்திரத்திற்கு தான் பேச வேண்டி இருக்கும்.
டப்பிங் துறையில் சித்ரா என்றால் எல்லாருக்கும் தெரியும். ஆனா, மக்கள் மத்தியில் நான் யார் என்று பலருக்கும் தெரியாது. இனி, எனக்கான அடையாளம் கிடைக்கும் என நம்புகிறேன்.
நடிக்கிறதுக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனா, திரைக்கு பின் பயணிக்க வேண்டும் என்பதே ஆசை என்பதால், அவற்றை தவிர்த்து விட்டேன்.
இப்போது, இரண்டு படங்களுக்கு பேசியிருக்கிறேன். அதன் வெளியீட்டுக்காக காத்திருக்கிறேன்.