sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

சொல்கிறார்கள்

/

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


PUBLISHED ON : ஜூலை 12, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 12, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கபடி என்றால் கவிதா!

காமன் வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய கபடி அணியை வெற்றி பெறச் செய்த தமிழ்ப்பெண் கவிதா: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பக்கத்துல, சேக்காடு பகுதியில் வசிக்கிறேன். என் கூட பிறந்தவங்க ஐந்து பேரும், பெண் குழந்தைகள்; கடைக்குட்டி நான். எங்க வீட்டில், ஆண் வாரிசு இல்லாததால, என் பெற்றோர் என்னை, ஆண் பிள்ளை போல வளர்த்தனர் . ஆறாம் வகுப்பு படிக்கும் போதே,'அத்லெட்டிக் ப்ளேயர்!' பின், கபடி போட்டிகளில் கவனம் செலுத்தினேன். என் விளையாட்டு ஆர்வத்தை, பெற்றோர், ஆசிரியர்கள் ஊக்குவித்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும்போது, குஜராத் நேஷனல் கபடி போட்டியில், தமிழக அணி வென்றது தான் என் முதல் துவக்கம். 2007, 2008ல், ஆசிய விளையாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கம் வென்றோம். 2009ல், டாக்கா தெற்காசிய கபடிப் போட்டியில் கேப்டனாக இருந்து வெற்றி பெறச் செய்தேன். ஆசியப் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றி என, எங்கு சென்றாலும் பதங்கங்களும், பாராட்டுக்களும் கிடைத்தன. கடந்த, 2005ல், காவல் துறையில் சேர்ந்தேன். தற்போது, மத்திய ரிசர்வ் போலீஸ் பணி. எனக்கு பின்னால் கபடி விளையாட வரும் வீரர்கள், வீராங்கனைகள் யாராக இருந்தாலும், என்னை போல சாதிக்கணும் என்பதற்காக, சர்வதேச தரத்தில் கபடி விளையாட்டு அகடமியை நிறுவும் எண்ணம் உள்ளது. தற்போது, அடுத்தாண்டு நடக்க உள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயாராகி வருகிறேன். என் ஒரே கவலை, என் வெற்றியை பார்க்க அம்மா இல்லையே என்பது தான். நான் பெறும் பாராட்டுக்களும், பதங்கங்களும், என் அம்மாவுக்கே சமர்ப்பணம்.






      Dinamalar
      Follow us