sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

சொல்கிறார்கள்

/

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


PUBLISHED ON : ஆக 12, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 12, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'என் வெற்றிகள்தொடரும்!'



இந்திய அளவில் வாலிபால் போட்டிகளில் பல பதக்கங்களை குவித்திருக்கும் மிருதுளா: என், 13 வயதில் பள்ளி வாலிபால் டீமில் சேர்ந்தேன்.

என் பயிற்சியாளர்கள் கொடுத்த பயிற்சியால், வேகமாக முன்னேறினேன்.சேலத்தில் நடந்த மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி தான், நான் பங்கேற்ற முதல் போட்டி. அதில் முதல் இடம் கிடைத்தது. என் பள்ளியின், தலைமை ஆசிரியர் என்னை, மாணவர்கள் மத்தியில் அழைத்துப் பாராட்ட, நான் பள்ளி ஸ்டார் ஆகிவிட்டேன்.பெற்றோர் தந்த நம்பிக்கை, தலைமை ஆசிரியரின் ஊக்கம், என் பயிற்சியாளர்கள் கற்றுத் தந்த ஆட்ட நுணுக்கங்கள் எல்லாம் சேர்ந்து, என் வெற்றிகளைத் தொடர வைத்தது.



சப்-ஜூனியர் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம், நாக்பூர், கேரளாவில் நடந்த ஜூனியர் வாலிபால் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறேன். என் வெற்றிகளை தெரிந்து கொண்ட, பனிமலர் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் சக்திகுமார், 'ஸ்பான்சர்' மூலம் படிக்கும் வகையில், எனக்கு இலவசமாகவே இடம் கொடுத்தார்.கல்லூரியில் உள்ள பயிற்சியாளர் என்னை இன்னும் பட்டை தீட்ட, போட்டிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் விரிந்துள்ளது.இதுவரை மாவட்ட அளவில், 25 மெடல்கள், மாநில அளவில், 10 மெடல்கள், தேசிய அளவில் ஏழு மெடல்கள் என அசத்தியிருக்கிறேன். தற்போது, 'நேஷனல் சீனியர்' அணியில் இடம் பெற்று சர்வதேச அளவிலான போட்டிகளில் ஜொலிக்கத் தயாராகிவிட்டேன்








      Dinamalar
      Follow us