sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

சுக்கு - மல்லி காபி கடையை நடத்துகிறேன்!

/

சுக்கு - மல்லி காபி கடையை நடத்துகிறேன்!

சுக்கு - மல்லி காபி கடையை நடத்துகிறேன்!

சுக்கு - மல்லி காபி கடையை நடத்துகிறேன்!


PUBLISHED ON : பிப் 10, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 10, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 70 ஆண்டுகளாக, மதுரையில் சுக்கு - மல்லி காபிக்காக மட்டுமே கடையை நடத்தி வருவது பற்றி கூறுகிறார் ஜான்ஸ்:

அப்பா வைத்தியராக இருந்தார். 1954ல் இந்த கடையை ஆரம்பித்த அவரை தொடர்ந்து, நான் நடத்தி வருகிறேன்.

எனக்கு மூன்று மகன்கள். நான் எங்க அப்பா கூட கடைக்கு வர ஆரம்பித்த போது, ஒரு காபி விலை, 10 பைசா; தற்போது, 20 ரூபாய்க்கு விற்கிறேன்.

அப்பா சொல்லிக் கொடுத்த அதே முறையை பின்பற்றி தான், தற்போது வரை, சுக்கு - மல்லி காபி போடுகிறோம். நயம் கருப்பட்டி, சுக்கு, மல்லி, மிளகு இதை சரியான விகிதத்தில் வென்னீரில் போட்டு பதமாக காய்ச்சிக் கொடுக்கிறோம்.

சுக்கு - மல்லி காபி உடம்புக்கு மிகவும் நல்லது; செரிமானத்துக்கு உதவும்; வயிறு உபாதைகளை சரிசெய்யும்; மழைக் காலங்களில் சளி, இருமலை கட்டுப்படுத்தும்.

பெரும்பாலும் மாலை நேரங்களில் தான் மக்கள் அதிகம் வருகின்றனர். ஆனால், 'சுக்கு - மல்லி காபி குடிப்பதற்கு சரியான நேரம் மதிய நேரம் தான்' என்று, வைத்தியரான என் அப்பா கூறுவார்.

'காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, இரவில் கடுக்காய்'ன்னு சொல்லி வைத்துள்ளனர். மதிய நேரம், சாப்பிடுவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்னாடி, சுக்கு - மல்லி காபியை குடித்தால், செரிமானம் நல்லா நடக்கும்.

ஒரு நாளைக்கு, 500 பேர் வரை எங்கள் கடைக்கு வருகின்றனர். மழைக்காலம், குளிர்காலம் எனில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

காலையில் 9:00 மணிக்கு கடையை திறப்போம். இரவு 10:00 மணி வரை, சுடச்சுட சுக்கு - மல்லி காபி கிடைத்தபடியே இருக்கும். இன்றைய இளம் தலைமுறையும் எங்கள் கடையில் வந்து, சுக்கு - மல்லி காபி குடிப்பது, எங்களுக்கே ஆச்சரியம் தான்.

சிகரெட்டுக்கு எங்கள் கடையில் அனுமதி இல்லை. வேர்க்கடலை உருண்டை, கம்பு, கேப்பை உருண்டை போன்றவையும் கிடைக்கும்.

நாங்கள் விற்கும் கைச்சுற்றல் முறுக்கும், சுக்கு - மல்லி காபியும் சேர்த்து சாப்பிடுவதற்கென வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

பனங்கற்கண்டு சேர்த்த எங்களுடைய, ஜான்ஸ் சுக்கு - மல்லி கலவையும் விற்கிறோம். அதற்கும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு.

நல்லதை கொடுத்தால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் நம்மை கைவிட மாட்டார்கள் என்பதை தான், 70 ஆண்டுகளாக இந்த தொழில் எங்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் மந்திரம்!






      Dinamalar
      Follow us