sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

ரூ.3 கோடியை ரூ.30 கோடியாக மாற்ற இலக்கு!

/

ரூ.3 கோடியை ரூ.30 கோடியாக மாற்ற இலக்கு!

ரூ.3 கோடியை ரூ.30 கோடியாக மாற்ற இலக்கு!

ரூ.3 கோடியை ரூ.30 கோடியாக மாற்ற இலக்கு!

1


PUBLISHED ON : ஜன 05, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 05, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'நேக்டு நேச்சர்' என்ற பெயரில், 'ஸ்கின் கேர்' பொருட்களை தயாரித்து விற்கும், மதுரையைச் சேர்ந்த சூர்யா: டிஜிட்டல் பிசினசுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது என்பதை, பள்ளி பருவத்திலேயே புரிந்து கொண்டேன். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஆன்லைனில் ஷூ, பேன்ட், -சட்டை விற்க ஆரம்பித்தேன்.

ஆர்டர் வந்ததும், மும்பையில் இருக்கிற ஒரு ஹோல்சேல்காரரிடம் வாங்கி அனுப்புவேன்; இதில், மாதம் 2,000 ரூபாய் கிடைத்தது.

எனக்கு அலர்ஜி, காயம் போன்றவை ஏற்படும்போது, என் அம்மா உப்பை துணியில் கட்டி ஒத்தடம் கொடுப்பார்.

உப்பில் இருக்கும் மெக்னீசியம், கால்சியம் இரண்டும் தசைவலியை குறைக்கும் தன்மை உடையது என்பதை அடிப்படையாக வைத்து செம்பருத்தி, ஜவ்வாது, வேப்பிலை ஆகிய மூன்று வாசனைகளில், 'பாத் சால்ட்' தயாரித்தேன்.

அதற்கு, 'நேக்டு நேச்சர்' என்று பெயர் வைத்து, வெப்சைட் டிசைன் செய்தேன். அப்பா போட்டோகிராபர் என்பதால், அழகான புகைப்படங்கள் எடுத்து கொடுத்தார்.

அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். உடனே, சித்தா டாக்டர் ஒருவர் அரை கிலோ வாங்கினார். அதன்பின் அடிக்கடி வாங்க ஆரம்பித்தார்.

அப்படியே செய்தி பரவி, பலர் கேட்க துவங்கினர். கூடவே, 'வேறு பொருட்கள் இருக்கிறதா...' என்றும் கேட்டனர்.

அதன்பின் வேப்பிலை, கற்றாழைகளில் சோப் தயாரித்து, தெரிந்தவர்களிடம் பயன்படுத்த கூறினேன். 'யு டியூபர்ஸ், சோஷியல் மீடியா இன்புளூயன்சர்ஸ்' பலருக்கும் தந்தேன்; அவர்களால் விற்பனை சூடுபிடித்தது.

'ஹேர் ஆயில், லிப் பாம், பாடி க்ரீம்' என தயாரிப்புகள் அதிகமாகின. தற்போது மொத்தம் 69 தயாரிப்புகள்; 20 பேர் வேலை செய்கின்றனர். ஆன்லைனில் பெரிய அளவில் பிசினஸ் போகிறது.

மதுரையில், முதல் ஷோரூம் கடந்தாண்டு திறந்தேன். அடுத்து, சென்னையில் திறக்க இருக்கிறோம்.

துபாயில் எங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அங்கும் ஒரு ஷோரூம் திறக்க வேலை நடக்கிறது. நிறைய செலிபிரிட்டிகள் கஸ்டமராக உள்ளனர். அடுத்து புதிதாக, 20 தயாரிப்புகள் மார்க்கெட்டுக்கு வர உள்ளன.

'இந்த, 24 வயதில் இவ்வளவு வளர்ச்சியா...' என ஆச்சரியப்படுகின்றனர். இதெல்லாம் சாதாரணமாக வந்து விடவில்லை; என் கையில் ரேகைகள் அழிகிற அளவிற்கு உழைத்து இருக்கிறேன்.

நிராகரிப்புகள், புறக்கணிப்புகள், அவமானங்கள் தான், என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு போயிருக்கு. தற்போது ஆண்டுக்கு, 3 கோடி ரூபாய்க்கு நடக்கும் பிசினசை, 30 கோடி ரூபாயாக மாற்றுவது தான் என் தற்காலிக இலக்கு.தொடர்புக்கு 70106 67716.



****************************

பெண்களை தொழில் முனைவோராக்க ஆசைப்படுகிறேன்!

பல்வேறு நிறுவனங்களுக்கு, புடவைகள் முதல் வீட்டு உபயோக துணிகள் வரை, கணினியில், 'ஜக்காடு டிசைன்'கள் உருவாக்கி தரும் சேலத்தை சேர்ந்த ராதா: நான் பிறந்தது ஈரோடு. வறுமையிலும் அம்மா மற்றும் தாய் மாமாக்கள் ஊக்கத்தோடு, 1998ல், 'டிசைனிங் அண்டு வீவிங் கோர்ஸ்' முடித்தேன்.

புனேவை தலைமையிடமாக கொண்டு, சேலத்தில் செயல்பட்ட ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவன கிளையில் 3,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தேன்.

அங்கு, கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வாயிலாக, பட்டு புடவைகள் முதல் வீட்டு உபயோக துணிகளில் எப்படி டிசைன்கள் போடுவது, பினிஷிங் கொடுப்பது என்பது குறித்து அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன்.

பின், திருச்செங்கோட்டில் ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில், 4,500 ரூபாய் சம்பளத்துக்கு டிசைனர் வேலையில் சேர்ந்து, அங்கிருந்த 'அட்வான்ஸ்டு பவர்லுாமில்' டிசைன் போடும் முறையை கற்றேன். அந்த தொழிலின் ஆதி அந்தம் கற்றுக்கொண்ட பின் சொந்தமாக தொழில் செய்ய முடிவெடுத்தேன்.

சேலத்தில் 2002ல், இரண்டு கம்ப்யூட்டர்கள், இரண்டு ஊழியர்களோடு அலுவலகம் ஆரம்பித்தேன். தறிகளுக்கான டிசைனிங், பவர்லுா கம்பெனிகளுக்கு ஜக்காடு டிசைனிங் என்று வேலை சூடுபிடிக்க துவங்கியது. அதன்பின் எனக்கு திருமணம் முடிய, கணவரும் பக்க பலமாக இருந்தார்.

டிசைனிங் தொழிலுடன், பெண்களுக்கு கம்ப்யூட்டர் டிசைனிங் வகுப்புகளும் எடுத்தேன். இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவே, ஆபீசை மூடிவிட்டு, வீட்டில் இருந்து சில கம்பெனிகளுக்கு மட்டும் டிசைன் செய்து கொடுக்க ஆரம்பித்தேன்.

குழந்தைகள் வளர்ந்ததால், மீண்டும் 2015-ல், 'பாங்கி டிசைன் ஸ்டூடியோ' என்ற பெயரில் நிறுவனம் துவங்கி, ஜக்காடு டிசைனிங் செய்து கொடுக்கும் தொழிலை துவங்கினேன். 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஆர்டர்கள் கிடைத்தன.

திடீர் விபத்தால், பின் கழுத்தில் ராடு வைக்கப்பட்டு எட்டு மாதங்கள் உடல்நிலையும், தொழிலும் தேங்கி போனது.

ஆனால், நம்பிக்கையை கைவிடாமல் புடவை, வேஷ்டி, சென்னிமலை பெட்ஷீட், பெங்களூரை சேர்ந்த ஒரு கஸ்டமருக்கு பாய்விரிப்பு என்று பல வகைகளிலும் டிசைனிங் பண்ணி கொடுத்தேன். தற்போது, 500 ரெகுலர் கஸ்டமர்கள் இருக்கின்றனர்.

எங்கள் வேலையை பார்த்துவிட்டு ஒடிசா மாநிலத்தில் இருந்தும், எகிப்து நாட்டிலிருந்தும் கஸ்டமர்கள் வர ஆரம்பித்தனர். இப்போது மாதம் 2 லட்சம் ரூபாய்க்கு பிசினஸ் நடக்கிறது.

அடுத்தபடியாக, ஆர்வமுள்ள பெண்களுக்கு கம்ப்யூட்டரில் எம்ப்ராய்டரி போட கற்றுக்கொடுத்து, அவர்களை தொழில் முனைவோராக உருவாக்க ஆசைப்படுகிறேன். தொடர்புக்கு 94876 51500








      Dinamalar
      Follow us